முகப்பு /செய்தி /லைஃப்ஸ்டைல் / ஸ்ரீராமாயணா யாத்திரை.. அயோத்தி முதல் ராமேஸ்வரம் வரை ரயில் பயணம்.. விவரங்களும் வழிகாட்டலும்!

ஸ்ரீராமாயணா யாத்திரை.. அயோத்தி முதல் ராமேஸ்வரம் வரை ரயில் பயணம்.. விவரங்களும் வழிகாட்டலும்!

ஸ்ரீராமாயணா யாத்திரை..

ஸ்ரீராமாயணா யாத்திரை..

IRCTC Shri Ramayana Yatra | ராமரின் வாழ்க்கையுடன் தொடர்புடைய சில புனித இடங்களை 18 நாட்கள் 17 இரவுகள் கொண்ட ஸ்ரீ ராமாயண யாத்திரை வருகின்ற நவம்பர் 18 ஆம் தேதி தொடங்கும் என ஐஆர்சிடிசி தெரிவித்துள்ளது.

  • Last Updated :
  • Tamil Nadu, India

ஏழை, எளிய மக்களின் போக்குவரத்துத் தேவைகளை நிவர்த்தி செய்துக் கொள்வதில் முக்கிய பங்கு வகிப்பது இந்திய ரயில்வே துறை தான். குறைவான செலவில் எந்தவித இடர்பாடுகள் இல்லாமல் பயணிக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் தேர்வு செய்யும் போக்குவரத்தும் இந்தியன் ரயில்வே துறை என்பதில் எவ்வித மாற்றமும் இல்லை. குறிப்பாக இந்திய ரயில்வே தனது வருமானத்தை மேலும் அதிகரிக்கும் நோக்கத்தில் இந்திய ரயில்வே கேட்டரிங் மற்றும் டூரிசம் கார்ப்பரேஷன் மூலம் அவ்வப்போது சுற்றுலா பேக்கேஜை அறிமுகம் செய்துவரும்.

இந்நிலையில் தான் சமீபத்தில் இந்திய ரயில்வே கேட்டரிங் மற்றும் டூரிசம் கார்ப்பரேஷன் “ ஸ்ரீராமாயண யாத்திரை“ க்கான சுற்றுலா திட்டத்தைத் தொடங்கியுள்ளது. ராமரின் வாழ்க்கையுடன் தொடர்புடைய சில புனித இடங்களை 18 நாட்கள் 17 இரவுகள் கொண்ட ஸ்ரீ ராமாயண யாத்திரை வருகின்ற நவம்பர் 18 ஆம் தேதி தொடங்கும் என ஐஆர்சிடிசி தெரிவித்துள்ளது.

ஸ்ரீராமாயண யாத்திரையில் பார்க்கவுள்ள இடங்கள்:

ஸ்ரீராமாயண யாத்திரையில் டெல்லி, அயோத்தி, ஜனக்பூர், சீதாமர்ஹி, பக்சர், வாரணாசி, பிரயாக்ராஜ், சித்ரகூட், நாசிக், ஹம்பி, ராமேஸ்வரம் மற்றும் பத்ராசலம் ஆகிய இடங்களுக்கு சுற்றுலா செல்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்படவுள்ளது. இதோடு டில்லி சப்தர்ஜங், காசியாபாத், அலிகார், துண்ட்லா, கான்பூர் சென்ட்ரல் மற்றும் லக்னோ சந்திப்பு ஆகிய இடங்களில் தங்குவதற்கான வசதிகளும் செய்யப்பட்டுள்ளது.

ஸ்ரீராமாயண யாத்திரை பல யாத்திரை தலங்களை உள்ளடக்கும். ராம ஜென்மபூமி கோயில், ஹனுமான் கர்ஹி, சர்யு காட், பாரத்-ஹனுமான் கோயில் பாரத் குண்ட், சீதா மாதா கோயில், சீதாமர்ஹியில் உள்ள ஜானகி மந்திர், புனௌரா தாம், குப்த கோதாவரி, ராம்காட், சதி அனுசுயா கோயில், ஸ்ரீ சீதாராம் சுவாமி கோயில், அஞ்சனி சுவாமி கோயில் போன்ற பல்வேறு கோவில்களையும் பக்தர்கள் இந்த யாத்திரையின் போது பார்ப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

Also Read : நேபாளுக்கு போக ஆசை இருக்கா... IRCTC-ன் அற்புதமான பேக்கேஜ் இதோ!

கட்டணம்:

18 நாள்கள் கொண்ட இந்த யாத்திரை பயணத்திற்கு ரூ.59, 980 (double or triple occupancy) மற்றும் single occupancyக்கு ரூ.68,980 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. உணவு, இருப்பிடம் போன்ற அனைத்து வசதிகளும் இதில் அடங்கும்.

இந்த யாத்திரைக்கு வரவுள்ள மக்கள் கண்டிப்பாக கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டதற்கான சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டும் இதோடு ஒவ்வொரு பயணிகளும் வாக்காளர் அடையாள அட்டையின் நகலையும் உடன் எடுத்து வர வேண்டும்.

Also Read : சென்னை டூ ஹரித்வார்... IRCTC இன் 'சார்தம் யாத்ரா' அசத்தல் சுற்றுலா தொகுப்பு!

top videos

    உத்தேச சுற்றுப்பயணத்திற்கான டிக்கெட்டுகளை ஐஆர்சிடிசியின் அதிகாரப்பூர்வ இணையதளம் அல்லது அவற்றின் பிராந்திய வசதிகள் மையங்கள் மூலம் ஆன்லைனில் முன்பதிவு செய்யலாம் எனவும் ஐஆர்சிடிசி அறிவித்துள்ளது.

    First published:

    Tags: Indian Railways, IRCTC, Ram mandri, Tourism