Home /News /lifestyle /

IRCTC மூலம் குறைவானத் தொகையில் திருப்பதிக்கு 6 நாள் ஆன்மீக சுற்றுலா பேக்கேஜ்…விபரம் உள்ளே!

IRCTC மூலம் குறைவானத் தொகையில் திருப்பதிக்கு 6 நாள் ஆன்மீக சுற்றுலா பேக்கேஜ்…விபரம் உள்ளே!

ஆன்மீக சுற்றுலா

ஆன்மீக சுற்றுலா

IRCTC : உங்களின் வசதிக்கு ஏற்ப எந்தத் தேதியில் பயணம் செய்ய வேண்டும் என்பதை தீர்மானித்து கொண்டு பயணத்தை மகிழ்வுடன் ஆரம்பிங்கள் என்று ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.

    திருப்பதிக்கு ரூபாய் 14 ,170க்கு ஆறு நாள்கள் ஆன்மீக சுற்றுலாப் பேக்கேஜை IRCTC வழங்குவதாக ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.

    இந்தியா முழுவதும் பெரும்பாலான மாநிலங்களில் முக்கியத்துவம் வாய்ந்த பல வழிபாட்டுத்தலங்கள் உள்ளன. இவற்றிற்கு எல்லாம் செல்ல வேண்டும் என்ற மனநிலையில் இருந்தாலும் செலவு அதிகமாகிவிடுமோ? என்ற அச்சம் மக்கள் மனதில் ஏற்படும். இதுப்போன்ற சூழலில் தான், மனச்சோர்வில் இருக்கும் மக்களுக்கு உதவும் விதமாகவும், எந்த கஷ்டமும் இல்லாமல் நிம்மதியாக வழிபாடு செய்யும் வகையில் இந்தியன் ரயில்வே உணவு மற்றும் சுற்றுலாக் கழகமான ஐஆர்சிடிசி சுற்றுலா திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இதன்படி ஆண்டுதோறும் குறிப்பிட்ட நாள்களில் சுற்றுலா செய்யும் தகவல்களை இந்திய ரயில்வே நிர்வாகம் தெரிவிக்கும்.

    குறிப்பாக ஐஆர்சிடிசியைப்பயன்படுத்தி அதிகளவில் ஆன்மீக சுற்றுலாவிற்கு தான் மக்கள் செல்வது வழக்கம். இந்நிலையில் தான் தற்போது ஐஆர்சிடிசி இணையத்தளத்தில் வெளியான தகவலின் படி, திருப்பதிக்கு ஆறு நாள்கள் ஆன்மீக சுற்றுலா திட்டத்திற்கு ஏற்பாடு செய்துள்ளதாகத் தெரிவித்துள்ளது. அதில், பீகார் மாநிலம் பாகல்பூரில் இருந்து ஆந்திரா மாநிலம் திருப்பதிக்கு ஆன்மீக பயணம் செல்வதற்காக ஏற்பாடு செய்துள்ள ரயில் ஒவ்வொரு புதன்கிழமை மதியம் 1.30 மணிக்கு புறப்பட்டு வெள்ளிக்கிழமை அதிகாலை 12.30 மணிக்கு திருப்பதிக்கு வந்து சேரும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    பீகார் – ஆந்திரா சுற்றுலாப்பயணத் திட்டம் :

    பீகார் மாநிலம் பாகல்பூரில் இருந்து ஆந்திரா மாநிலம் திருப்பதிக்கு ரயில் சென்றவுடன், அங்குள்ள ஒரு ஹோட்டலில் செக் இன் செய்து, காலை உணவிற்குப் பிறகு திருமலைக்கு செல்வார்கள். பின்னர் இரவில் வந்து ஹோட்டலில் தங்குவார்கள். அடுத்த நாள் காலை ஸ்ரீ காளஹஸ்தி மற்றும் பத்மாவதி தேவி கோயில்களுக்குச் செல்லவார்கள். இறுதியில் இரவு 19:58 மணிக்கு ரேணிகுண்டா ரயில் நிலையத்தில் இருந்து பாகல்பூருக்குத் திரும்பும். மூன்று அடுக்கு ஏசி டிக்கெட்டுகள், மூன்று வேளை உணவு, நகருக்குள் போக்குவரத்து மற்றும் ஹோட்டலில் தங்குவது ஆகியவை இந்த சுற்றுப்பயணத்தில் அடங்கும் என ஐஆர்சிடிசி அறிவித்துள்ளது.இதற்கானக் கட்டணம் ரூபாய் 14 ஆயிரத்து 170 முதல் உள்ளது. எனவே உங்களின் வசதிக்கு ஏற்ப எந்தத் தேதியில் பயணம் செய்ய வேண்டும் என்பதை தீர்மானித்து கொண்டு பயணத்தை மகிழ்வுடன் ஆரம்பிங்கள் என்று ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.

    ALSO READ :  குடியரசுத் தலைவர் தேர்தலில் 99 சதவீத வாக்குகள் பதிவானது

    குறிப்பாக விஷ்ணுவின் கலியுக அவதாரமான ஸ்ரீ வெங்கடேஸ்வரரை வழிபட ஒவ்வொரு ஆண்டும் உலகம் முழுவதிலுமிருந்து சுமார் 20 மில்லியன் யாத்ரீகர்கள் திருமலைக்கு வருகிறார்கள். தூய தங்க முலாம் பூசப்பட்ட திருமலை கோவில் சிறந்த இந்திய கோவில் கட்டிடக்கலையின் தலைசிறந்த படைப்பாகும். மேலும் திருப்பதி நகருக்கு அருகில் திருச்சானூரில் பத்மாவதி அம்மன் கோயில் உள்ளது குறிப்பிடத்தக்கது. பொதுவாக திருப்பதி கோயிலில் ஒவ்வொரு நாளும் காலை 9 மணிக்கு தரிசனத்திற்காகத் திறக்கப்படும் எனவும் ஆண்கள் வேஷ்டி மற்றும் சட்டை அல்லது குர்தா மற்றும் பைஜாமாவிலும் பெண்கள் சேலை அல்லது சல்வார் கமீஸ் அணிந்து கோயிலுக்கு செல்ல வேண்டும்.
    Published by:Sankaravadivoo G
    First published:

    Tags: IRCTC, Tirupathi

    அடுத்த செய்தி