Home /News /lifestyle /

ரயில் பயணங்களில் இனி வாட்ஸ்அப் மூலம் உணவு ஆர்டர் செய்யலாம்... வழிமுறை இதோ...!?

ரயில் பயணங்களில் இனி வாட்ஸ்அப் மூலம் உணவு ஆர்டர் செய்யலாம்... வழிமுறை இதோ...!?

ரயில் பயணத்தில் உணவு ஆர்டர்

ரயில் பயணத்தில் உணவு ஆர்டர்

Food Order at Train Travel : Zoop -ன் புதிய சேவையானது பயணத்தில் அடுத்து வரவிருக்கும் எந்த ஸ்டேஷனிலும் மக்கள் WhatsApp மூலம் உணவு ஆர்டர் செய்ய அனுமதிக்கிறது. மேலும் நிகழ்நேர உணவு கண்காணிப்பு அம்சங்களையும் வழங்குகிறது

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Chennai | Tamil Nadu
ரயில் பயணிகள் இனி தங்களின் பயணத்தின் போது வாட்ஸ்அப் மூலம் ஆன்லைனில் உணவை ஆர்டர் செய்யலாம். ஐஆர்சிடிசியின் உணவு விநியோக சேவையான ஜூப் (Zoop), சமீபத்தில் ஜியோ ஹாப்டிக் உடன் இணைந்து பயனர்கள் தங்கள் வாட்ஸ்அப் சாட்பாட் சேவை மூலம் உணவை ஆர்டர் செய்யும் வசதியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த சாட்பாக்ஸ் மூலம் ஒரு சில எளிய படிநிலைகளில் பயணிகள் தங்கள் PNR எண்ணைப் பயன்படுத்தி ரயில் இருக்கையில் இருந்தே உணவை ஆர்டர் செய்யலாம். ஐஆர்சிடிசி, பயணிகள் வேறு எந்த கூடுதல் மென்பொருள்/ஆப்ஸைப் பதிவிறக்கம் செய்யாமல் ஆன்லைனில் உணவை ஆர்டர் செய்வதை எளிமையாகவும், தொந்தரவு இல்லாததாகவும் ஆக்குகிறது.

Zoop இன் புதிய WhatsApp சேவையானது பயணத்தில் அடுத்து வரவிருக்கும் எந்த ஸ்டேஷனிலும் மக்கள் ஆர்டர் செய்ய அனுமதிக்கிறது. மேலும் உணவு டெலிவரி ஆப்களைப் போலவே நிகழ்நேர உணவு கண்காணிப்பு அம்சங்களையும் வழங்குகிறது. வாட்ஸ்அப் மூலம் உணவை ஆர்டர் செய்வதில் பயணிகளுக்கு சிரமம் இருந்தால் அவர்கள் நேரடியாக சாட்போட்டில் உதவி கேட்கலாம்.

பாலைவனத்தில் பூக்களா? பூத்துக்குலுங்கும் அட்டகாமா பாலைவனம்.... கண்ணைக் கவரும் காட்சிகள் !

வாட்ஸ்அப் மூலம் ரயிலில் உணவை ஆர்டர் செய்வது எப்படி?

ஜூப் வாட்ஸ்அப் சாட்போட் எண் +91 7042062070 ஐ உங்கள் மொபைலில் சேமிக்கவும். அல்லது நீங்கள் https://wa.me/917042062070 தளத்திற்கு செல்லலாம்.

உங்கள் வாட்ஸ்அப்பில் ஜூப் சாட்போட்டைத் திறக்கவும். ஜிவா (ziva) எனும் பாட் உங்களை அன்போடு வரவேற்கும்.

உங்களின் 10 இலக்க PNR எண்ணை உள்ளிடவும். இது உங்கள் ரயில், இருக்கை எண், பெர்த் பற்றிய அனைத்து தகவல்களையும் வழங்கும்.

Zoop உங்கள் விவரங்களைச் சரிபார்த்து, நீங்கள் உணவை ஆர்டர் செய்ய விரும்பும் நிலையத்தைத் தேர்ந்தெடுக்கும்படி கேட்கும்.

இன்று பெண்கள் சமத்துவ தினம் - இந்த தினம் தோன்றியதற்கான காரணம் தெரியுமா?

அடுத்து, Zoop chatbot நீங்கள் உணவை ஆர்டர் செய்யக்கூடிய உணவகங்களில் இருந்து உங்களுக்கு விருப்பங்களின் தொகுப்பை வழங்கும்.

சாட்போட்டில் ஆர்டர் மற்றும் கட்டண முறை தொடர்பான அனைத்து விவரங்களையும் பயணிகள் பெறுவார்கள்.

உணவை ஆர்டர் செய்து பரிவர்த்தனையை முடித்த பிறகு, சாட்போட்டிலிருந்தே உங்கள் உணவைக் கண்காணிக்கலாம்.

ரயில் தேர்ந்தெடுக்கப்பட்ட நிலையத்தை அடைந்தவுடன் Zoop உங்கள் உணவை டெலிவரி செய்யும்.
Published by:Ilakkiya GP
First published:

Tags: Food Delivery App, IRCTC, Train

அடுத்த செய்தி