இயற்கை எழில் கொஞ்சும் இமயமலைக்கு அடிவாரத்தில், இந்தியாவிற்கு அருகில் அமைந்துள்ள தனி நாடு தான் நேபாளம்.. மனதை இதமாக்கும் மலைகள், பிரபலமான கோயில்கள் மற்றும் கட்டிடங்கள் அனைத்தையும் நாம் இணையத்திலோ? அல்லது தொலைக்காட்சிகளில் பார்த்தாலே வியப்பில் ஆழ்ந்திடுவோம். ஆனால் என்ன குடும்பத்தோடு செல்ல வேண்டும் என்றால் இதற்கு அதிக செலவாகுமோ? என நினைத்து சுற்றுப்பயணம் செல்லும் ஆசையை விட்டுவிடுவோம்.
இனி நீங்கள் எதையும் நினைத்து கவலைக்கொள்ள வேண்டாம். நேபாளம் சுற்றுலா செல்ல திட்டமிடும் பயணிகளுக்காகவே பெஸ்ட் ஆஃப் நேபாள் (Best of Nepal ) எக்ஸ் டெல்லி என்று பெயரிடப்பட்ட 6 நாள் டூர் பேக்கைஜை ஐஆர்சிடிசி(IRCTC) அறிமுகப்படுத்தியுள்ளது. நேபாளம் டூர் செல்வதற்கு ஆகும் செலவு? பயண தேதி? என்னென்ன வசதிகள் கிடைக்கும்? என்பது குறித்து இங்கே தெரிந்துக்கொள்ளலாம் வாருங்கள்..
நேபாளம் டூர் ப்ளான்:
IRCTC இணையதளத்தில் உள்ள தகவலின் படி, மார்ச் 30 தேதி பயணம் மேற்கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பயணத்திற்குச் செல்லும் நபர்களின் எண்ணிக்கையைப் பொறுத்து பேக்கேஜ் கட்டணங்கள் இருக்கும். மூன்று அல்லது இரு நபர்களுக்கு பேக்கேஜ் ஒரு நபருக்கு ரூ.31,000. ஒரு நபருக்கு ரூ. 40,000 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த டூரில் உங்களது குழந்தைகளையும் நீங்கள் அழைத்து செல்லலாம். ஆனால் இதற்குத் தனி கட்டணமாக ரூ. 2400 முதல் ரூ. 3000 வரை வசூலிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. விமானத்தில் செல்வதற்கு மற்றும் திரும்பி வருவதற்கானக் கட்டணம், டீலக்ஸ் ஏசி பேருந்து வசதிகள், இரவு தங்குவதற்கான ஹோட்டல் வசதிகள் மற்றும் உங்களுக்கான கைடு என அனைத்தும் இந்த கட்டணத்தில் அடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
பயண தேதி:
மார்ச் 30, 2023 தேதி டெல்லி விமான நிலையத்திலிருந்து காத்மண்டிற்கு நேபால் ஏர்லைனில் பயணம். பின்னர் ஏப்ரல் 4 ஆம் தேதி காத்மண்டு விமான நிலையத்திலிருந்து டெல்லி வருகை.
Also Read : குறைந்த விலையில் காஷ்மீர் டூர்... 2 பேக்கேஜ்களை அறிமுகப்படுத்திய IRCTC.. விவரங்கள் இங்கே..!
சுற்றிப்பார்க்கும் இடங்கள்:
காத்மாண்டுவில் அமைந்துள்ள இந்துக்களின் முக்கிய மதத் தலமான பசுபதிநாத் கோயில், தர்பார் சதுக்கம் மற்றும் ஸ்வயம்புநாத் ஸ்தூபியுடன், முக்கிய வணிக தளமாக தேமல், தர்பார் சதுக்கம், லாங்டாங் பூங்கா, நமோ புத்தா (ஸ்தூபம்), அழகிய ஏரிகளுக்கு பெயர் பெற்ற போக்ரா போன்ற பல்வேறு முக்கிய இடங்கள் டூர் பேக்கேஜில் இடம் பெற்றுள்ளது. இதோடு நேபாளத்தின் இயற்கையை ரசிப்பதற்கான சில வாய்ப்புகளும் சுற்றுலா பயணிகளுக்கு வழங்கப்படுகிறது.
நீங்களும் நேபாளம் சுற்றுலா செல்வதற்கு திட்டமிட்டிருந்தால், https://www.irctctourism.com/pacakage_description?packageCode=NDO04 என்ற இணையதளப்பக்கத்தின் வாயிலாக புக் செய்துக் கொள்ளுங்கள். மேலும் இந்த இணையத்தில், டூர் ப்ளான் பற்றி அனைத்து தகவல்களையும் அறிந்துக்கொள்ளுங்கள்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Flight travel, IRCTC, Nepal, Travel Guide