ஹோம் /நியூஸ் /lifestyle /

நேபாளுக்கு போக ஆசை இருக்கா... IRCTC-ன் அற்புதமான பேக்கேஜ் இதோ!

நேபாளுக்கு போக ஆசை இருக்கா... IRCTC-ன் அற்புதமான பேக்கேஜ் இதோ!

நேபாளுக்கு போக ஆசை இருக்கா... IRCTC இன் அற்புதமான பயணத்தொகுப்பு

நேபாளுக்கு போக ஆசை இருக்கா... IRCTC இன் அற்புதமான பயணத்தொகுப்பு

இந்த பயணத் தொகுப்பின் போது அயோத்தி, காத்மாண்டு, வாரணாசி மற்றும் பிரயாக்ராஜ் ஆகியவற்றைப் பார்வையிடலாம்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Chennai, India

தீபாவளிக்குப் பிறகு நீங்கள் எங்காவது செல்ல திட்டமிட்டிருந்தால், உங்களுக்கு ஒரு நல்ல செய்தி உள்ளது. உண்மையில், IRCTC ஒரு சிறந்த பேக்கேஜை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் கீழ் மக்கள் நேபாளத்திற்கு பயணம் செய்யலாம்.

நேபாளத்திற்கான இந்தப் பயணம் 'பாரத் கௌரவ் சுற்றுலா ரயில்' மூலம் நிகழும். இந்த பயணத் தொகுப்பின் போது அயோத்தி, காத்மாண்டு, வாரணாசி மற்றும் பிரயாக்ராஜ் ஆகியவற்றைப் பார்வையிடலாம்.

டூர் பேக்கேஜ் காலம் :

IRCTC இன் நேபாள டூர் பேக்கேஜ் 9 இரவுகள் மற்றும் 10 நாட்கள் உள்ளடக்கியது. இந்த சுற்றுலா தொகுப்பு புதுதில்லியில் இருந்து அக்டோபர் 28 முதல் தொடங்கும்.  நவம்பர் 7 அன்று பயணம் நிறைவுறும்.  டெல்லி, காசியாபாத், துண்ட்லா மற்றும் கான்பூர் நிலையங்களில் இருந்து பயணிகள் ஏறலாம்/இறங்கலாம்.

சென்னை டூ ஹரித்வார்... IRCTC இன் 'சார்தம் யாத்ரா' அசத்தல் சுற்றுலா தொகுப்பு!

பார்க்க இருக்கும் இடங்கள் :

அயோத்தி: ராம் ஜன்மபூமி கோவில், ஹனுமான் கர்ஹி, சரயு காட், நந்திகிராம்.

காத்மாண்டு: பசுபதிநாத் கோவில், தர்பார் ஸ்கையர், சுயம்புநாத் ஸ்தூபம்.

வாரணாசி: துளசி மானஸ் கோவில், சங்கட் மோச்சன் கோவில், காசி விஸ்வநாதர் வழித்தடம் மற்றும் கோவில், வாரணாசியில் கங்கா ஆரத்தி

காட்.

பிரயாக்ராஜ்: கங்கை - யமுனா சங்கம், அனுமன் கோவில்

பயணக்கட்டணம்:

இந்த பயணத்திற்கான கட்டணம் ஒரு நபருக்கு 34,650 ரூபாயில் இருந்து தொடங்குகிறது. 5 முதல் 11 வயது வரையிலான குழந்தைக்கு, 31,185 ரூபாய் கட்டணம். உணவு, உறைவிடம், 3 டயர் ஏசி பெட்டியில் பயணம், நுழைவு சீட்டு கட்டணம் அனைத்தும் இதில் அடங்கும்.

முன்பதிவு விவரங்கள்

ஆர்வமுள்ள பயணிகள் IRCTC சுற்றுலாவின் அதிகாரப்பூர்வ https://www.irctctourism.com/pacakage_description?packageCode=NZBG07 இணையதளத்தில் முன்பதிவு செய்யலாம்.

IRCTC சுற்றுலா வசதி மையம், மண்டல அலுவலகங்கள் மற்றும் பிராந்திய அலுவலகங்கள் மூலமாகவும் முன்பதிவு செய்யலாம்.

Published by:Ilakkiya GP
First published:

Tags: IRCTC, Nepal, Tourism, Travel