மத்திய ரயில்வே அமைச்சகத்தின் கீழ் இயங்கும் பொதுத்துறை நிறுவனமான இந்தியன் ரயில்வே கேட்டரிங் மற்றும் டூரிசம் கார்ப்பரேஷன் (IRCTC), ரயில்வே பயணிகளுக்கான பயணத்தை எளிதாக்க மற்றும் அவர்களின் பட்ஜெட்டுக்கு ஏற்றதாக இருக்கும் வகையிலான பல டூர் பேக்கேஜ்களை அவ்வப்போது அறிமுகப்படுத்தி வருகிறது.
அந்த வகையில் காஷ்மீரின் அழகிய இயற்கை காட்சிகளை பயணிகள் கண்டு களிக்கும் வகையில்
IRCTC-யானது 2 புதிய டூர் பேக்கேஜ்களை அறிமுகப்படுத்தியுள்ளது. கடந்த சில நாட்களாக பருவநிலை மாற்றத்தால் குளிர் குறைந்துள்ளது. இத்தகைய சூழலில் தான் IRCTC காஷ்மீருக்கு 2 டூர் பேக்கேஜ்களை அறிமுகப்படுத்தி இருக்கிறது. இந்த பேக்கேஜ்கள் மூலம் காஷ்மீருக்கு டூர் செல்லும் பயணிகள் காஷ்மீரின் அழகிய காட்சிகளையும், பனிப்பொழிவையும் பார்த்து அனுபவிக்க முடியும். இந்த பேக்கேஜ்களில் வழங்கப்படும் வசதிகள் காஷ்மீர் பயணத்தை ஒரு வசதியான மற்றும் தொந்தரவு இல்லாத டூர் அனுபவமாக மாற்றுகிறது.
புக்கிங் செய்யும் நபர்களின் எண்ணிக்கையை பொறுத்து 2 பேக்கேஜ்களின் விலையும் மாறுபடும். குழந்தைகளின் வயது மற்றும் படுக்கைக்கான தேவைக்கு ஏற்ப கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இதில் முதல் பேக்கேஜ் குல்மார்க், ஜம்மு, கத்ரா, ஸ்ரீநகர் மற்றும் சோன்மார்க் ஆகிய பகுதிகளை உள்ளடக்கிய 7-இரவு, 8-பகல் அடங்கிய டூர் ஆகும். அதே நேரம் இண்டாவது டூர் பேக்கேஜானது ஸ்ரீநகர், குல்மார்க், பஹல்காம் மற்றும் சோன்மார்க் ஆகிய பகுதிகளை உள்ளடக்கிய 6-இரவு, 7-பகல் அடங்கிய டூர் ஆகும். இந்த 2 டூர் பேக்கேஜ்களிலும் ஹோட்டல் தங்குமிடம், உணவு, போக்குவரத்து மற்றும் பயண காப்பீடு உள்ளிட்டவை அடங்கும்.
மேற்குறிப்பிடத்தில் முதல் டூர் பேக்கேஜ் வரும் பிப்ரவரி 19 முதல் தொடங்குகிறது. இந்த பேக்கேஜின் கீழ் ஒரு பயணி சிங்கிள் புக்கிங் செய்தால் ரூ.52,810, டபுள் புக்கிங் செய்தால் ஒருநபருக்கு ரூ.26,865 மற்றும் 3 பேருக்கு புக்கிங் செய்தால் நபர் ஒருவருக்கு ரூ.21, 865 கட்டணமாக செலுத்த வேண்டும். 5 - 11 வயது வரை உள்ள குழந்தைகள் என்றால் படுக்கையுடன் கூடிய டிக்கெட் ரூ13,665-க்கும், படுக்கை இல்லாமல் ரூ.11,005-க்கும் புக்கிங் செய்து கொள்ளலாம்.
அதே போல IRCTC-ன் காஷ்மீருக்கான இரண்டாவது டூர் பேக்கேஜ் பிப்ரவரி 19 அன்று தொடங்குகிறது. சிங்கிள் புக்கிங்கிற்கு ரூ.45,345, டபுள் புக்கிங் செய்ய ஒரு நபருக்கு ரூ.22,480 மற்றும் ட்ரிபிள் புக்கிங் செய்தால் நபர் ஒருவருக்கு ரூ.19,040 கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. 6 இரவுகள் மற்றும் 7 பகல்கள் கொண்டதாக இருக்கும் இந்த இரண்டாவது பேக்கேஜில் 5 - 11 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு படுக்கையுடன் கூடிய டிக்கெட் ரூ.16,160, படுக்கை இல்லாத டிக்கெட்டிற்கு ரூ.11,330-யும் செலுத்த வேண்டும்.
Also Read : சுற்றுலா தலமாக மாறும் பிரயாக்ராஜ்ஜின் லாவயங்கலா தீவுகள்.. அதன் சிறப்புகள் என்ன..?
இந்த 2 டூர் பேக்கேஜ்களிலும் ஹோட்டல்களில் ஏசி அறைகள், போக்குவரத்துக்கு ஏசி அல்லாத வாகனங்கள், காலை உணவு, உணவுகள் மற்றும் கேப் சர்விஸ், ட்ராவல் இன்ஷுரன்ஸ் உள்ளிட்டவை அடங்கும். இருப்பினும், செப்பரேட் ஹோட்டல் புக்கிங்ஸ், நுழைவுக் கட்டணம், மினரல் வாட்டர், தொலைபேசி கட்டணங்கள், சலவை அல்லது வேறு எந்த தனிப்பட்ட செலவுகளையும் இந்த பேக்கேஜ்கள் கவர் செய்யாது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: IRCTC, Jammu and Kashmir, Tourism