இந்தியாவிற்குள் சுற்றுலா செல்ல வேண்டும் என்றால் அதற்கான இடங்கள் எக்கச்சக்கமாக உள்ளது. அதை எல்லாம் எப்படி அடைவது சரியான பயண திட்டத்தை எப்படி போடுவது? தங்குமிடம், பயணம் என்று எல்லாவற்றையும் பார்க்கவேண்டும். புதிதாக போகும் இடத்தில் இதை எல்லாம் எப்படி கண்டுபிடிப்பது என்று கஷ்டப்படுபவர்களுக்காகவே ஐஆர்சிடிசி பல்வேறு பேக்கேஜ்களை அடிக்கடி அறிமுகப்படுத்துகிறது.
அதன்படி இப்போது ஒரு அற்புதமான புதிய பேக்கேஜ்ஜை பயணிகளுக்காக கொண்டுவந்துள்ளது. இந்தியில் மக்கள் அதிகள் பார்க்காத இடம் அனால் அழகு நிறைந்து தளும்பும் இடம் என்றால் அது வடகிழக்கு இந்தியாதான். அந்த வடகிழக்கு பகுதிக்கு நீங்கள் ஒரு பயணத்தைத் திட்டமிடுகிறீர்கள் என்றால், உங்களுக்காக IRCTC ஒரு சிறந்த மற்றும் மலிவு பேக்கேஜை தற்போது வழங்குகிறது.
இந்த பேக்கேஜின் பெயர் "நார்த் ஈஸ்ட் டிஸ்கவரி -பியோண்ட் கவுகாத்தி" (North East Discovery Beyond Guwahati). இந்த பேக்கேஜ் மூலம் காசிரங்கா, இட்டாநகர், அகர்தலா, சிவசாகர், ஜோர்ஹாட், உனகோட்டி, உதய்பூர், திமாபூர், ஷில்லாங், கோஹிமா மற்றும் சிரபுஞ்சி போன்ற வடகிழக்கு இந்தியாவின் அனைத்து முக்கிய இடங்களுக்கும் செல்ல உங்களுக்கு வாய்ப்பு கிடைக்கும்.
IRCTC சமீபத்தில் தனது ட்விட்டர் கணக்கில் இந்த ரயில் பயணத் தொகுப்பை அறிவித்தது. இந்த முழு பயணம் 15 நாட்கள் இருக்கும். இந்த ரயில் டெல்லியில் இருந்து புறப்படும். மதிய உணவும் இரவு உணவும் பேக்கேஜில் அடங்கும். இது தவிர விடுதியில் தங்குவது போன்ற சேவைகளும் வழங்கப்படும். அது போக சுற்றுலாவின் போது தங்குவதற்கான இடம் மற்றும் வாகன ஏற்பாடுகளும் IRCTC செய்துவிடும்.
ஐஆர்சிடிசி பாரத் கௌரவ் டூரிஸ்ட் ரயில் என்ற சிறப்பு ரயிலில் ஏசி வகுப்பில் இந்தப் பயணம் மேற்கொள்ளப்படும். இந்த சுற்றுலா ரயிலில் பயணிக்கும் பயணிகள் டெல்லி, காசியாபாத், அலிகார், எட்டாவா, துண்ட்லா, கான்பூர், லக்னோ மற்றும் வாரணாசி ரயில் நிலையங்களில் இருந்து ஏறி- இறங்கலாம்.
இந்த பயணத்தில் சுற்றுலாப்பயணிகள் வசீகரிக்கும் மலைகள், அடர்த்தியான காடுகள், தெளிவான ஆறுகள், பிரமாண்டமான நீர்வீழ்ச்சிகள், தனித்துவமான ஒற்றை கொம்புகாண்டாமிருகம், சிவப்பு பாண்டா, போன்ற வனவிலங்குகள், அற்புதமான கிழக்கு இந்தியாவிற்கு உரித்தான கலாச்சாரம் மற்றும் இதுவரை காட்சிப்படுத்தப்படாத பாரம்பரியத்தை காணும் வாய்ப்பு கிடைக்கும்.
சக்தி பீடங்களில் ஒன்றான காமாக்யா கோயில், பிரம்மபுத்திரா நதி, காசிரங்கா தேசியப் பூங்கா, வடகிழக்கு தேயிலை தோட்டங்கள், திரிபுராவின் அற்புதமான உனகோட்டி சிற்பங்கள், உஜ்ஜயந்தா அரண்மனை மற்றும் அழகான நீர்மஹால் என்று அசாம்-அருணாச்சல பிரதேசம்-நாகாலாந்து-திரிபுரா-மேகாலயா என்ற 5 மாநிலங்களின் அற்புதமான இடங்களின் தொகுப்பாக இருக்கும்.
டூர் பேக்கேஜ் பற்றிய முக்கிய தகவல்கள் :
தொகுப்பு பெயர் - வடகிழக்கு கண்டுபிடிப்பு: குவஹாத்திக்கு அப்பால் (CDBG01)
உள்ளடக்கப்பட்ட இடங்கள்: இட்டாநகர், அகர்தலா, சிவசாகர், ஜோர்ஹாட், காசிரங்கா, உனகோட்டி, உதய்பூர், திமாபூர், ஷில்லாங், கோஹிமா மற்றும் சிரபுஞ்சி
நாட்களின் எண்ணிக்கை - 14 இரவுகள் மற்றும் 15 நாட்கள்
புறப்படும் தேதி – மார்ச் 21, 2023
பயண முறை - ரயில்
போர்டிங் மற்றும் டிபோர்டிங் நிலையங்கள் - டெல்லி, காசியாபாத், அலிகார், எட்டாவா, துண்ட்லா, கான்பூர், லக்னோ மற்றும் வாரணாசி
இதையும் பாருங்க: ஆசியாவின் முதல் ஆம்பிதியேட்டர் நம்ம நாட்டில் தான் இருக்கு... எங்க தெரியுமா?
டூர் பேக்கேஜுக்கான கட்டணம் என்ன?
ஐஆர்சிடிசியின் வடகிழக்கு டூர் பேக்கேஜுக்கு, சுற்றுலாப் பயணிகள் குறைந்தபட்சக் கட்டணமாக ரூ 85495 முதல் ரூ.1,04,390 வரை பயணிக்கும் வகுப்புகிற்கு ஏற்ப செலுத்த வேண்டும். இருப்பினும், இது வெவ்வேறு வகைகளைப் பொறுத்து அதிகமாகவோ அல்லது குறைவாக மாறுபடும். நீங்கள் தேர்ந்தெடுக்கும் வகையை பொறுத்து அமையும்.
தொகுப்பை எவ்வாறு பதிவு செய்வது?
வடகிழக்கு சுற்றுலாத் தொகுப்பிற்கான முன்பதிவு செய்ய சுற்றுலாப் பயணிகள் IRCTC சுற்றுலாவின் அதிகாரப்பூர்வ வலைத்தளமான irctctourism.com ஐப் பார்வையிடலாம். இது தவிர, நீங்கள் IRCTC இன் பிராந்திய அலுவலகங்களையும் தொடர்பு கொள்ளலாம்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: IRCTC, Travel, Travel Guide