Home /News /lifestyle /

அந்தமான், தாய்லாந்துக்கு அசத்தல் டூர் பேக்கேஜ்; ஐஆர்சிடிசியின் அதிரடி அறிவிப்பு! 

அந்தமான், தாய்லாந்துக்கு அசத்தல் டூர் பேக்கேஜ்; ஐஆர்சிடிசியின் அதிரடி அறிவிப்பு! 

லக்னோவில் இருந்து அந்தமான் தீவுகளுக்கு சுற்றுலா செல்ல விரும்புவோருக்காக IRCTC ஒரு புதிய சுற்றுலா பேக்கேஜை அறிமுகப்படுத்தியுள்ளது.

லக்னோவில் இருந்து அந்தமான் தீவுகளுக்கு சுற்றுலா செல்ல விரும்புவோருக்காக IRCTC ஒரு புதிய சுற்றுலா பேக்கேஜை அறிமுகப்படுத்தியுள்ளது.

ஐஆர்சிடிசி அந்தமான் மற்றும் தாய்லாந்தை சுற்றி பார்க்க விரும்புவோருக்காக சூப்பரான டூர் பேக்கேஜ்களை அறிமுகப்படுத்தியுள்ளது. 



    இந்திய ரயில்வே கேட்டரிங் மற்றும் டூரிசம் கார்ப்பரேஷன் சமீப காலமாக பல்வேறு டூர் பேக்கேஜ்களை அறிவித்து வருகிறது. ஆன்மீக பயணத்தை விரும்புவோருக்கு அடுத்தபடியாக ஆனந்தமாக ஊர் சுற்ற நினைப்பவர்களைக் கவர்ந்திழுக்கும் வகையிலான டூர் பேக்கேஜ்களை ஐஆர்சிடிசி அறிமுகப்படுத்தியுள்ளது. 

    கடந்த வாரம் தென்னிந்தியாவின் புகழ் பெற்ற ஆன்மீக தலங்களை சுற்றுப்பார்ப்பதற்காக 7 பகல் மற்றும் 6 இரவுகளைக் கொண்ட ‘தென்னிந்தியத் தெய்வீக சுற்றுப்பயண தொகுப்பு எக்ஸ் டெல்லி’ என்ற பேக்கேஜ் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த பேக்கேஜ் மூலமாக ராமநாதசுவாமி கோவில், மீனாட்சி கோவில், திருப்பதி பாலாஜி கோவில் போன்ற தென்னிந்திய புகழ்பெற்ற கோயில்களைத் தரிசிக்கலாம்.

    லக்னோவில் இருந்து அந்தமான் தீவுகளுக்கு சுற்றுலா செல்ல விரும்புவோருக்காக IRCTC ஒரு புதிய சுற்றுலா பேக்கேஜை அறிமுகப்படுத்தியுள்ளது. கொல்கத்தாவில் உள்ள காளிகாட் கோயில் மற்றும் விக்டோரியா நினைவுச்சின்னம், போர்ட் பிளேயரில் உள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க செல்லுலார் சிறை, கோர்பின் கோவ் கடற்கரை, ஒளி மற்றும் ஒலிக் காட்சி, சாமுத்ரிகா (கடற்படை மரைன்) அருங்காட்சியகம், ராதாநகர், சாகரிகா எம்போரியம் ஆகிய இடங்களில் 6-நாள் மற்றும் 5-இரவு சுற்றுப்பயணம் மேற்கொள்ளப்படுகிறது. கடற்கரை, மற்றும் காலாபதர் கடற்கரை மற்றும் ஹேவ்லாக்கில் உள்ள பரதாங். இந்த சுற்றுலாவானது செப்டம்பர் 23 அன்று தனது பயணத்தைத் தொடங்கி செப்டம்பர் 28 அன்று முடிவடையும்.

    Also Read:ஒரு முறை சார்ஜ் செய்தாலே போதும்... 510கிமீ பயணிக்கும் இ-சைக்கிள் அறிமுகம்!

    பயணிகள் லக்னோவிலிருந்து கொல்கத்தாவிற்கு ரயில் மூலமாக அனுப்பிவைக்கப்படுவார்கள். கொல்கத்தாவிலிருந்து பயணிகள் அந்தமான் தீவுகளுக்குச் செல்ல விமானம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த டூர் பேக்கேஜில் தங்கும் இடம் தவிரக் காலை உணவு மற்றும் இரவு உணவும் அடங்கும். உங்கள் கனவு சுற்றுலாவுக்கு எவ்வித குறையும் இல்லாமல் ஏற்பாடுகள் செய்யப்படும் என ஐஆர்சிடிசி உறுதி அளிக்கிறது.

    லக்னோவிலிருந்து அந்தமான் வரை பயணம் செய்ய ஒரு நபருக்கு ரூ.65,900 செலவாகும். இரண்டு பேருக்கு, 53,785 ரூபாயாகவும், மூன்று பேருக்கும் 53,295 ரூபாயாகவும் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த டூர் பேக்கேஜில் குழந்தைகளுக்குத் தனி கட்டணம் செலுத்த வேண்டும். ஒரு குழந்தையுடன் (படுக்கையுடன்) ஒரு நபர் பயணிப்பதற்கு 49,335 ரூபாயும் மற்றும் படுக்கை வசதி இல்லாமல் தங்குவதற்கு 46,620 ரூபாயும் கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

    Also Read:Kotak Mahindra வங்கியில் வேலை... பட்டதாரிகளுக்கான சிறந்த வாய்ப்பு - விரைவில் விண்ணப்பிக்கவும்

    இதேபோல் ஐஆர்சிடிசி லக்னோவிலிருந்து தாய்லாந்திற்குச் சர்வதேச சுற்றுப்பயணத்தையும் அறிமுகப்படுத்தியுள்ளது. செப்டம்பர் 12ம் தேதி முதல் செப்டம்பர் 17ம் தேதி வரை இந்த திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. இந்த டூர் பேக்கேஜில் சுற்றுலா செய்ய வேண்டுமெனில் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே முன்னுரிமை அளிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    சுற்றுலாப் பயணிகள் IRCTCயின் அதிகாரப்பூர்வ தளமான www.irctctourism.com மூலம் ஆன்லைனில் தங்கள் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யலாம். லக்னோவின் கோமதி நகர், பர்யாதன் பவனில் அமைந்துள்ள IRCTC அலுவலகத்திலும் முன்பதிவு செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    Published by:Janvi
    First published:

    Tags: Indian Railways, Tourism, Travel

    அடுத்த செய்தி