Home /News /lifestyle /

லடாக் சுற்றுலா செல்ல ஆசையா..! IRCTC-ன் அசத்தலான ஆஃப்ர் மற்றும் பயண விவரங்கள்

லடாக் சுற்றுலா செல்ல ஆசையா..! IRCTC-ன் அசத்தலான ஆஃப்ர் மற்றும் பயண விவரங்கள்

லடாக் சுற்றுலா

லடாக் சுற்றுலா

6 இரவுகள் மற்றும் 7 நாட்கள் சுற்றுப்பயணத்தில் ஷாம் பள்ளத்தாக்கு, லே, நுப்ரா, துர்டுக் மற்றும் பாங்காங் ஆகிய இடங்களுக்கு அழைத்துச் செல்கின்றனர்

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Chennai, India
இந்தியாவின் இமாலய மலைத்தொடரும் நாட்டிற்கு அரணாகவும் பனியில் மூடி கண்கவர் அழகோடும் காணப்படும் இடம் லடாக். எப்போதும் பயணிகளின் வாழ்நாள் பயண பட்டியலில் ஒன்றாக இருக்கும் இடங்களில் லாடக்கும் இருக்கும்.

இந்த சீசனில் IRCTC லடாக்கிற்கு வான்வழி சுற்றுப்பயணங்களை அறிமுகப்படுத்துகிறது. 6 இரவுகள் மற்றும் 7 நாட்கள் சுற்றுப்பயணத்தில் ஷாம் பள்ளத்தாக்கு, லே, நுப்ரா, துர்டுக் மற்றும் பாங்காங் ஆகிய இடங்களுக்கு அழைத்துச் செல்கின்றனர்

நாள் 1 : டெல்லி விமான நிலையத்தில் 6 மணிக்குச் சந்தித்து 09.10 மணிக்கு விமானத்தில் ஏறி 10.30 மணிக்கு லே விமான நிலையத்தை அடையலாம் . ஹோட்டலுக்கு சென்று, வரும் 6 நாட்கள் பயணத்திற்கு தயாராக ஓய்வுக்காக ஒதுக்கப்படுகிறது.

பயணிகள் கவனத்திற்கு.. பெட்வா நதிக்கரை நகரமான ஓர்ச்சாவில் உள்ள சிறந்த இடங்கள்!

நாள் 02: காலை உணவுக்குப் பிறகு, லே-ஸ்ரீநகர் நெடுஞ்சாலையில் ஹால் ஆஃப் ஃபேம் எனும் இந்திய இராணுவத்தால் உருவாக்கப்பட்ட அருங்காட்சியகம் , குருத்வாரா பட்டர் சாஹிப், சாந்தி ஸ்தூபி மற்றும் லே அரண்மனையை சுற்றி பார்க்கலாம்

நாள் 03: கார்துங்லா பாஸ் வழியாக லடாக்கின் சிறந்த நுப்ரா மலர்களின் பள்ளத்தாக்கு, இந்தியாவின் வடக்குப் பகுதியில் வாழும் மக்களின் வாழ்க்கை முறையை பிரதிபலிக்கும் தீக்ஷித் மற்றும் ஹண்டர் கிராமங்கள், மடாலயங்களுக்கு அழைத்துச் செல்கின்றனர். விரும்பினால் மாலையில் ஒட்டக சஃபாரிக்கு செல்லலாம்.நாள் 04: ஒரு காலத்தில் பட்டுப் பாதையில் வணிகப் பொருட்களை எடுத்துச் செல்ல பயன்படுத்தப்பட்ட டர்டுக் பள்ளத்தாக்கை ரசிக்கும் வாய்ப்பை வழங்குகின்றனர்.

நாள் 05: பாங்காங் ஏரி 120 கிமீ நீளமும்,  6 - 7 கிமீ அகலமும் கொண்ட உப்பு ஏரி. இது இந்தியாவிற்கும் சீனாவிற்கும் இடையிலான சர்வதேச எல்லையால் பிரிக்கப்பட்டுள்ளது (ஏரியின் 2/3 சீனாவின் வசம் உள்ளது). சமீபத்தில் இந்திய -சீன ராணுவங்கள் குவிக்கப்பட்டு இருந்தது இந்த இடம் தான்.

புகழ்பெற்ற "த்ரீ இடியட்ஸ்" திரைப்படத்தின் காட்சிகள் இங்கே படமாக பட்டது. அந்த இடங்களின் இயற்கை அழகை சுற்றி பார்க்கலாம்.

நாள் 06: அதிகாலையில், ஏரியில் சூரிய உதயத்தின் அழகிய காட்சியைக் காணலாம். காலை உணவுக்குப் பிறகு, திக்சே மடாலயம் மற்றும் ஷே அரண்மனைக்கு அழைத்துச்செல்கின்றனர். அங்கே உள்ள சந்தைகளுக்கு சென்று இமாலய பகுதியின் தனித்துவமான பொருட்களை வாங்க நேரம் கொடுக்கின்றனர்.நாள் 07: காலை லே விமான நிலையத்திலிருந்து  11.10 மணிக்கு விமானத்தில் ஏறி 12.40 மணிக்கு டெல்லி விமான நிலையத்தை வந்தடையும். இதோடு பயணம் முடிவடைகிறது.

கட்டணம்: இந்த 7 நாள் பட்ஜெட் பயண திட்டத்திற்கு பெரியவர்களுக்கு ரூ.32,960 கட்டணமும், 5 முதல் 11 வயதுடைய குழந்தைகளுக்கு ரூ.30,990 கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. 7 நாட்களும் டெல்லியில் இருந்து கிளம்பி திரும்ப டெல்லி வரும் வரை உள்ள உணவு, உறைவிடம், பயத்திற்கான கட்டணம், நுழைவு கட்டணங்கள் எல்லாம் இதில் அடங்கும். ஒட்டக சவாரிக்கு மட்டும் நாம் தனியாக பணம் செலுத்த வேண்டி இருக்கும்.

மத்தியபிரதேச பன்னாவில் புலிகள் காப்பகம் மட்டுமல்ல..... இந்த இடங்களும் ஃபேமஸ்தான்

அதே போல் டெல்லி விமான நிலையம் வரை செல்லும் கட்டணம் நம்முடையதாக இருக்கும். பயணத்திற்கான முன்பதிவை ஐஆர்சிடிசியின் வலைத்தளத்தில் செய்துகொள்ளலாம்.

தமிழகத்தில் இருந்து ..

தமிழகத்தில் இருந்து டுரோண்டோ எக்ஸ்பிரஸ், தமிழ்நாடு எக்ஸ்பிரஸ், திருக்குறள் எக்ஸ்பிரஸ், கிராண்ட் ட்ரங்க் எக்ஸ்பிரஸ் என்று ரயில்கள் இருக்கிறது 26 மணி நேரம் முதல் 36 மணி நேரத்திற்குள் டெல்லி அடையலாம். சென்னை, கோவை , மதுரையில் இருந்து டெல்லிக்கு நேராக விமானங்கள் உண்டு. ரூ.4000 முதல் 10000 வரை கட்டணம் உள்ளது.
Published by:Ilakkiya GP
First published:

Tags: IRCTC, Ladakh, Tourism, Trip

அடுத்த செய்தி