இந்திய ரயில்வே துறையின் கிளை நிறுவனமான IRCTC நிறுவனம் இந்தியா முழுக்க சுற்றி பார்க்க விரும்பும் மக்களுக்கு ஏற்ப மலிவு விலையில் பல சுற்றுலா பயண திட்டங்களை அறிமுகம் செய்து வருகிறது. இந்திய மட்டும் அல்லாது நேபாளம், இலங்கை, வங்கதேசம் வரை ரயில் மற்றும் விமானத்தின் மூலம் சென்று வரும் திட்டங்களையும் அறிமுகப்படுத்தியுள்ளது.
அந்த வரிசையில் தற்போது இந்தியாவில் துபாய்க்கு மலிவு விலையில் சென்று வர IRCTC ஒரு அட்டகாசமான சர்வதேச தொகுப்பை அறிவித்துள்ளது. 'திகைப்பூட்டும் துபாய்(Dazzling Dubai)' என்ற தொகுப்பில், துபாய் நகர சுற்றுப்பயணம், புர்ஜ் கலீஃபா, பாலைவன சஃபாரி, தோவ் குரூஸ், ஷேக் சயீத் கிராண்ட் மசூதி, ஃபெராரி வேர்ல்ட் ஆகியவை அடங்கும்.
5 இரவுகள் 6 நாட்கள் அடங்கிய இந்த சர்வதேச சுற்றுலா பேக்கேஜ் மார்ச் 23, 2023 அன்று டில்லியில் இருந்து தொடங்குகிறது. துபாய் வரை சென்று திரும்பி வருவதற்கான எகானமி வகுப்பு விமான கட்டணம், 3 நட்சத்திர ஹோட்டலில் தங்கும் வசதி, உணவு, விசா கட்டணங்கள் மற்றும் செயலாக்கக் கட்டணங்கள் ஆகியவை இந்த தொகுப்பில் அடங்கும்.
'திகைப்பூட்டும் துபாய்' பேக்கேஜ் விபரங்கள்:
விமான விவரங்கள்:
விமானம் | புறப்படும் நேரம் | வருகை நேரம் |
டெல்லி-அபுதாபி (G8 75) | மாலை 6 மணி | இரவு 8:40 மணி |
அபுதாபி - டெல்லி (G8 76) | இரவு 9:40 மணி | காலை 2:40 மணி |
பேக்கேஜின் விலை:
5 இரவுகள் 6 நாட்கள் பேக்கேஜின் விலையானது, இருவர் மற்றும் மூவர் தாங்கும் வசதியுள்ள பேக்கேஜ் ₹ 81,900 முதல் தொடங்குகிறது, மேலும் ஒற்றை ஆக்கிரமிப்பு அறைகளுக்கு, பேக்கேஜின் விலை ₹ 99,000 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. படுக்கையுடன் கூடிய குழந்தைக்கு, பேக்கேஜ் விலை ₹ 81,500 மற்றும் படுக்கையில்லாத குழந்தைகளுக்கு ₹ 70,500 என்று கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
அதோடு உணவு, தண்ணீர், போக்குவரத்து, வழிகாட்டிகள், ஆகியவற்றுக்கான செலவுகள் பேக்கேஜுக்குள் அடங்கும். உணவு ஏற்கனவே நிர்ணயிக்க உணவு தா பரிபார்ப்படும். விருப்பத்தின்படி வழங்கப்படாது. வேறு உணவு சாப்பிட எண்ணினால் அது தனிப்பட்ட செலவில் சேரும்.
IRCTC கூற்றுப்படி, அனைத்து பயணிகளும் பயணத்தின் போது குறிப்பிட்ட மாநிலங்கள்/நாட்டின் வழிகாட்டுதலின்படி கோவிட் வழிகாட்டுதல்களைப் பின்பற்றுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். இந்த பயணத்திற்கு பயணிகள் இரண்டு முறை தடுப்பூசி போட வேண்டும். ஒரு பயணி தடுப்பூசி போடாமல் இருந்தாலோ அல்லது ஒரு டோஸ் தடுப்பூசி மட்டும் போடப்பட்டிருந்தாலோ, புறப்பட்ட நாலுக்லக்கு முன்னால் 72 மணி நேரத்திற்குள் RT-PCR டெஸ்ட் ரிப்போட்டை எடுத்துச் செல்ல வேண்டும்.
முன்பதிவு செய்யும் போது தேவைப்படும் ஆவணங்கள்:
சுற்றுலாப் பயணிகளின் பாஸ்போர்ட் பயணம் செய்யும் நாளிலிருந்து குறைந்தபட்சம் 6 மாதங்கள் செல்லுபடியாகும்படி உள்ளதா என்பதை உறுதிப்படுத்துவது முக்கியம். முன்பதிவு செய்யும் போது பாஸ்போட்டின் JPEG வகை வண்ண ஸ்கேன் நகல், PAN கார்டின் நகல், புகைப்படம் ஆகியவை தேவைப்படும்.
இதையும் பாருங்க ; பயணத்தின் போது ஏற்படும் வயிற்று வலியை குறைப்பதற்கான டிப்ஸ்..!
தொகுப்பில் என்ன சேர்க்கப்படவில்லை:
விமான நிலைய வரிகள், எரிபொருள் கூடுதல் கட்டணம், ஓட்டுநர்கள், வழிகாட்டிகள், பிரதிநிதிகள் போன்றவர்களுக்கு தரும் கூடுதல் செலவுகள், குறிப்பிட்ட பேக்கேஜ் சேவுகள் தவிர்த்து தனிப்பட்ட மது, உணவு மற்றும் பானங்கள் போன்றவற்றுக்கான செலவுகள் பேக்கேஜில் சேராது. அதுபோக விசா கட்டணத்தில் ஏதேனும் மாற்றம் இருந்தால், வித்தியாசத் தொகையை கூடுதலாகச் செலுத்த வேண்டும்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.