இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு நவராத்திரி விழாவைக் காண இந்தியா தயாராகி வரும் நிலையில், இந்த சீசனில் அதிகரித்து வரும் பயணிகளின் கூட்டத்தை நிர்வகிப்பதற்கு இந்திய ரயில்வேயும் தயாராகி உள்ளது. இந்த முறை நவராத்திரியில் வைஷ்ணவி தேவியை தரிசிக்க நீங்கள் திட்டமிட்டிருந்தால் , உங்களுக்கு ஒரு நற்செய்தி ...
வைஷ்ணவி தேவி கோயிலுக்கு..
ஸ்ரீ மாதா வைஷ்ணவி தேவியின் புனித குகை திரிகூட மலைக்கு அருகில் உள்ளது. இந்த கோயில் நாட்டின் புனித யாத்திரை தலங்களில் ஒன்றாக கருதப்படுகிறது.
ஜம்மு காஷ்மீர் கத்ரா பகுதியில் உள்ள ஸ்ரீ மாதா வைஷ்ணோ தேவியின் புனித தலத்தை தரிசிக்க விரும்பும் பக்தர்களுக்காக இந்திய ரயில்வே கேட்டரிங் மற்றும் டூரிசம் கார்ப்பரேஷன் (IRCTC) சிறப்பு ரயில்களை இயக்க உள்ளன. IRCTC ஆல் இயக்கப்படும் பாரத் கௌரவ் திட்டத்தின் கீழ் இரண்டு சிறப்பு ஏசி ரயில்கள் இயக்கப்பட உள்ளன.
பயணிகள் கவனத்திற்கு... பெட்வா நதிக்கரை நகரமான ஓர்ச்சாவில் உள்ள சிறந்த இடங்கள்!
இந்த ரயில்கள் செப்டம்பர் 25 - செப்டம்பர் 29 மற்றும் செப்டம்பர் 30 - அக்டோபர் 4 ஆகிய தேதிகளுக்கு இடையே புதுதில்லியில் உள்ள சப்தர்ஜங் ரயில் நிலையத்தில் இருந்து பயணங்களை மேற்கொள்ளும். இந்திய ரயில்வே மேலும் பக்தர்களுக்கான சுற்றுலாத் தொகுப்பை அறிமுகப்படுத்தியுள்ளது. அதில் தங்குதல், உணவு மற்றும் பக்தர்களுக்கான பயணம் ஆகியவை அடங்கும்.
சுற்றுலா காலம்
நவராத்திரி சிறப்பு மாதா வைஷ்ணவி தேவி யாத்ரா பயண தொகுப்பு 3 இரவுகள் மற்றும் 4 நாட்களை கொண்டது. இந்த தொகுப்பின் முன்பதிவு முதலில் வருபவருக்கே முன்னுரிமை என்ற அடிப்படையில் மேற்கொள்ளப்படும்.
முதல் நாள் இரவு 8 40 க்கு டெல்லியில் இருந்து தொடங்கி ஜம்முவில் வைஷ்ணவி தேவி கோயில், சரஸ்வதி தாம், கண்டி கண்டோலி கோயில், ரகுநாத்ஜி கோயில் & பாக் பாகு தோட்டம் ஆகிவற்றை பார்த்துவிட்டு நான்காம் நாள் காலை 5.55 மணி அளவில் மீண்டும் டெல்லி வந்து சேரும்.
லடாக் சுற்றுலா செல்ல ஆசையா..! IRCTC-ன் அசத்தலான ஆஃப்ர் மற்றும் பயண விவரங்கள்
தொகுப்பின் விலை
இந்த டூர் பேக்கேஜ் சாதாரண மக்களுக்கு ஏற்ற மலிவு விலையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. பெரியவர்களுக்கு ரூ.6390, 5 முதல் 11 வயதுடைய குழந்தைகளுக்கு ரூ.5440 கட்டணமாகும். உணவு, உறைவிடம், 3 டயர் ஏசி பெட்டியில் பயணம், நுழைவு சீட்டு கட்டணம் அனைத்தும் இதில் அடங்கும்.
வாரணாசியில் இருந்து..
டெல்லியில் இருந்து மட்டுமின்றி வாரணாசியில் இருந்தும் வைஷ்ணவி தேவி கோயிலுக்கு சுற்றுலாத் தொகுப்பு உள்ளது. 5 நாட்கள், 4 பகல்கள் அங்கும் இந்த சுற்றுலா 22 செப்டம்பர் அன்று தொடங்குகிறது. இதற்கு கட்டணமாக ரூ.8375 வசூலிக்கப்படுகிறது.
முன்பதிவு விவரங்கள்
ஆர்வமுள்ள பயணிகள் IRCTC சுற்றுலாவின் அதிகாரப்பூர்வ https://www.irctctourism.com இணையதளத்தில் முன்பதிவு செய்யலாம்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: IRCTC, Navarathri, Travel