ஹோம் /நியூஸ் /lifestyle /

இந்தோனேசியாவின் பாலியில் 10 வருடம் வரை நீங்கள் தங்கலாம் ! எப்படி தெரியுமா?

இந்தோனேசியாவின் பாலியில் 10 வருடம் வரை நீங்கள் தங்கலாம் ! எப்படி தெரியுமா?

இந்தோனேஷிய விசா

இந்தோனேஷிய விசா

கோஸ்டாரிகா மற்றும் மெக்சிகோ போன்ற நாடுகளும் இதே போன்ற திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளது.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Chennai, India

இந்தோனேஷியா ஒரு 'செகண்ட் ஹோம் விசா' திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன்மூலம் , வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் நாட்டில் ஐந்து முதல் 10 ஆண்டுகள் வரை தங்கி வேலை செய்யலாம்

இந்தோனேசியா, பாலி மற்றும் பிற இடங்களில் நீண்ட காலம் தங்குவதற்கு முக்கியத்துவம் கொடுத்து, பணக்கார வெளிநாட்டினரை நாட்டிற்கு ஈர்க்க அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு வருகிறது .

இதற்காக இந்தோனேஷியா செகண்ட் ஹோம் விசா திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் மூலம் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் 5 முதல் 10 ஆண்டுகள் வரை நாட்டில் தங்கி வேலை செய்ய அனுமதிக்க்கிறது.

இதற்கு ஒரே ஒரு நிபந்தனையை இந்தோனேஷியா விதிக்கிறது. குறைந்தபட்சம் 2 பில்லியன் ரூபாயை ($130,000) தங்கள் வங்கிக் கணக்குகளில் வைத்திருப்பவர்களுக்கு மட்டும் தான் இந்த புதிய விசா கிடைக்கும்.

சாகச விரும்பிகளுக்கு குட் நியூஸ்! கண்டிப்பா இந்த ராட்சத ஊஞ்சல மிஸ் பண்ணிடாதீங்க!

இந்த கொள்கை கிறிஸ்துமஸ் அன்று அமலுக்கு வரும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. குடிவரவுக்கான பணிப்பாளர் ஜெனரல் விடோடோ எகட்ஜஹ்ஜானா, ரிசார்ட் தீவில் ஒரு வெளியீட்டு விழாவின் போது, ​​இது இந்தோனேசியப் பொருளாதாரத்தில் சாதகமான பங்களிப்பைச் செய்யக்கூடிய சில வெளிநாட்டினருக்கு நிதியில்லாத ஊக்குவிப்பு என்று குறிப்பிட்டார்.

இதற்கு முன்னர் கோஸ்டாரிகா மற்றும் மெக்சிகோ போன்ற நாடுகளும் இதே போன்ற திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளது. அவை தொழில் வல்லுநர்கள், ஓய்வு பெற்றவர்கள் மற்றும் பிற செல்வந்தர்களை கவர்ந்திழுக்க நீண்ட கால தங்குமிடங்களை வழங்குகின்றன.

கடந்த ஆண்டு அக்டோபர் 14 ஆம் தேதி சர்வதேச சுற்றுலாப் பயணிகளுக்கு படிப்படியாக மீண்டும் திறக்கத் தொடங்கிய பாலிக்கு பார்வையாளர்களை ஈர்ப்பதில் கவனம் செலுத்த இந்தோனேசியா 2021 இல் டிஜிட்டல் நாடோடி விசாவிற்கான திட்டங்களை அறிமுகப்படுத்தியது. அதே நேரத்தில் இந்தோனேசிய அரசாங்கம் கட்டுப்பாடுகளை நீக்கி, பயணிகளுக்கு கூடுதல் சலுகைகளைச் சேர்ப்பதன் மூலம் உள்ளூர் பொருளாதாரத்தை உயர்த்த விரும்புகிறது.

இந்தோனேசிய அரசாங்கம் அதன் பெரும்பாலான பயணக் கட்டுப்பாடுகளை நீக்கி, தனிமைப்படுத்தல் இல்லாத சோதனைக் காலத்தையும், இந்தியா உட்பட 72 நாடுகளுக்கு மார்ச் 7, 2022 அன்று விசா ஆன் அரைவல் (VOA) திட்டத்தையும் செயல்படுத்தியது.

Published by:Ilakkiya GP
First published:

Tags: Indonesia, Tourism