HOME»NEWS»LIFESTYLE»travel indians avoid flying because of new corona virus spread study says esr ghta

இந்த காரணத்திற்காக இந்தியர்கள் அதிகமாக வெளிநாட்டுப் பயணங்களை தவிர்க்கிறார்களாம்.. ஆய்வில் வெளியான உண்மை..

புதிய கொரோனா வைரஸைக் கட்டுப்படுத்துவதில் மத்திய அரசு சிறப்பாக செயல்பட்டால், உள்நாட்டு விமான பயணத்தில் பெரிய பாதிப்பு இருக்காது என அந்த ஆய்வு தெரிவித்துள்ளது.

இந்த காரணத்திற்காக இந்தியர்கள் அதிகமாக வெளிநாட்டுப் பயணங்களை தவிர்க்கிறார்களாம்.. ஆய்வில் வெளியான உண்மை..
மாதிரி படம்
  • Share this:

புதிய கொரோனா வைரஸ் பரவல் காரணமாக வெளிநாடுகளுக்கு செல்வதில் இந்தியர்கள் ஆர்வம் காட்டவில்லை என ஆய்வு மூலம் தெரியவந்துள்ளது.

கடந்த ஓராண்டாக பாடாய்படுத்தி வரும் கொரோனா வைரஸ், மெல்ல மெல்ல கட்டுக்குள் வருவதாக மக்கள் நம்பி வந்தனர். மேலும், தடுப்பூசி தொடர்பான புதிய கண்டுபிடிப்புகள் அந்த நம்பிக்கையை அதிகரிக்கும் வகையில் இருந்தது. இந்நிலையில், இங்கிலாந்தில் கண்டுபிடிக்கப்பட்ட புதிய கொரோனா வைரஸ், மக்களிடையே மீண்டும் பீதியை ஏற்படுத்தியுள்ளது. இங்கிலாந்து, பிரான்ஸ் உள்ளிட்ட ஐரோப்பா நாடுகள் புதிய கொரோனா வைரஸைக் கட்டுப்படுத்த மீண்டும் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளனர்.

மற்ற உலக நாடுகள் வளர்ச்சிதை மாற்றம் அடைந்த கொரோனா வைரஸ் பரவலை தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். குறிப்பாக, இங்கிலாந்தில் இருந்து விமானம் மூலம் திரும்பியவர்களை கண்டறிந்து, அவர்களுக்கு புதிய கொரோனா வைரஸ் பாதிப்பு இருக்கிறதா? என கண்டறிவதை இந்தியா உள்ளிட்ட நாடுகள் தீவிரப்படுத்தியுள்ளனர். இதனால், வெளிநாடுகளுக்கு செல்லும் விமானங்களை ரத்து செய்ய வேண்டும் என்றும் எதிர்கட்சிகள் வலியுறுத்தியுள்ளனர்.





ஏற்கனவே, மத்திய அரசு விமானப் பயணங்களுக்கான அனுமதியை முழுமையாக வழங்கவில்லை. வந்தே பாரத் மிஷன் திட்டம் வழியாக இங்கிலாந்து உள்ளிட்ட 23 நாடுகளுக்கு மட்டும் விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன. தற்போது, இங்கிலாந்தில் பரவும் புதிய கொரோனா வைரஸ் காரணமாக அந்நாட்டுக்கு விமானங்கள் செல்வதை மத்திய அரசு தற்காலிகமாக தடை செய்துள்ளது. சிங்கப்பூர், துபாய் உள்ளிட்ட நாடுகளும் விரைவில் விமான பயணத்தை தடை செய்ய வாய்ப்புள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

இதனிடையே, வெளிநாடுகளுக்கு செல்ல தயாராக இருந்த இந்தியர்கள், புதிய கொரோனா வைரஸ் பரவல் காரணமாக தங்களின் பயணத்தை ரத்து செய்து வருகின்றனர். மேலும், சிலர் கொரோனா வைரஸ் பாதிப்பை பொறுத்து பயணத்தை திட்டமிடலாம் என முடிவு செய்துள்ளனர். இந்த சூழலில் லோக்கல் சர்க்கிள் என்ற அமைப்பு வெளிநாட்டு விமான பயணம் குறித்து நாடு முழுவதும் 204 நகரங்களில் இருந்து 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்களிடம் ஆன்லைன் மூலம் ஆய்வு ஒன்றை நடத்தியது. அதில் உள்நாட்டு மற்றும் வெளிநாடு விமான பயணம் தொடர்பாக கேள்விகள் கேட்கப்பட்டன.

corona virus

வாடிக்கையாளர்கள் அளித்த 15 ஆயிரம் பதில்களில் 42% பேர் உள்நாட்டு விமான பயணம் மேற்கொள்ளகூட தங்களிடம் திட்டமில்லை என கூறியுள்ளனர். 71% பேர் அடுத்த 3 மாதத்துக்கு சர்வதேச பயணத்தை மேற்கொள்ள விரும்பவில்லை என்றும், 2% மக்கள் முன்பதிவு செய்துள்ளதால் சூழ்நிலையை பொறுத்து முடிவு செய்யப்போவதாகவும் கூறியுள்ளனர். 16% பேர் வெளிநாடு செல்வதற்கு திட்டம் இருப்பதாகவும், சூழலைப் பொறுத்து முன்பதிவு செய்யலாமா அல்லது வேண்டாமா என முடிவெடுக்க உள்ளதாகவும் கூறியுள்ளனர்.

புதிய வகை கொரோனா பரவும் நேரத்தில் விமானப் பயணமா?  உங்களுக்கான சில டிப்ஸ்..

வைரஸ் பாதிப்பு, விமான தடை உள்ளிட்ட காரணங்களால் அடுத்த 3 மாதங்களில் சர்வதேச பயணங்களை திட்டமிடுவோரின் எண்ணிக்கை வெகுவாக குறையும் என தெரிவித்துள்ள ஆய்வு, 59% பேர் முன்பதிவுகளின்றி சூழலைப்பொறுத்து பயணிக்க திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது. ஒருவேளை முன்பதிவு செய்தால்கூட 7% பேர் அதனை ரத்து செய்துவிடுவார்கள் என ஆய்வில் தெரியவந்துள்ளது. 8% பேர் கொரோனா வைரஸ் பாதிப்புக்கு இடையேவும் பயணிக்க தயாராக இருப்பதாக தெரிவித்துள்ள லோக்கல் சர்வே, ஒட்டுமொத்தமாக 66 விழுக்காட்டினரின் விமான பயணத்திட்டம் புதிய கொரோனா கட்டுப்பாடுகளை பொறுத்தே அமையும் என கூறியுள்ளது.

புதிய கொரோனா வைரஸைக் கட்டுப்படுத்துவதில் மத்திய அரசு சிறப்பாக செயல்பட்டால், உள்நாட்டு விமான பயணத்தில் பெரிய பாதிப்பு இருக்காது என அந்த ஆய்வு தெரிவித்துள்ளது. மேலும், உள்நாட்டு விமான பயணம் தொடர்ந்தால் சுவிசர்லாந்து பயணத்தை ரத்து செய்து காஷ்மீருக்கு செல்ல அதிகம் பேர் ஆர்வம் காட்டுவார்கள் எனவும் ஆய்வு கூறியுள்ளது.

 

 
Published by:Sivaranjani E
First published: