இந்தியாவை பொறுத்தவரை அதன் நீர் தேவைகள் என்பது பெரும்பாலும் நதிகளை சார்ந்தே அமைந்துள்ளது. வடஇந்தியாவின் நதிகளை பொறுத்தவரை பெரும்பாலான நதிகள் இமயமலையில் தான் தொடங்குகின்றன. அதேபோல தென்னிந்தியாவின் பெரும்பாலான நதிகள் மேற்குத்தொடர்ச்சி மலைகளில் இருந்து தொடங்குகின்றன.
மலையில் இருந்து தொடங்கும் நதிகள் கடலை சேர்வது தான் பொதுவான விதி. உலகில் உள்ள பெரும்பாலான நதிகள் இந்த விதியின் படி தான் இயங்கி வருகிறது. அதனால் தான் தண்ணீர் ஓட்டமும், நீர் சுழற்சியும், கடலின் நீர்மட்டமும் நிலையாக உள்ளது. ஆனால் சில நதிகள் மட்டும் இந்த விதியை விட்டு விலகி விதிவிலக்காக உள்ளது. இந்தியாவில் உள்ள அத்தகைய நதிகளை பற்றி தான் பார்க்க இருக்கிறோம்.
இந்தியாவை பொறுத்தவரை நாட்டின் மலைப்பகுதிக்குகளில் தொடங்கும் நதிகள் கிழக்கே வங்கக்கடலிலோ தெற்கே அரபிக்கடலிலோ கலந்துவிடும். வடமேற்கு பகுதியில் உள்ள ஒரு சில நதிகள் மற்றும் நர்மதை , தபதி ஆறுகள் மட்டுமே அரபிக்கடலில் கலக்கும். ஏனைய இந்திய நதிகள் யாவும் வங்கக்கடலில் தான் கலக்கின்றன.
ஆனால்,மலையில் இருந்து கிளம்பும் சில நதிகள் கடல் வரை போகாமல் இடையிலேயே தடுத்து நிறுத்தப்பட்டு ஏரியிலோ அல்லது வேறொரு நதியுடனோ கலந்துவிடுகிறது. இதனால் இந்த நதிகள் கடலை சேராத நதிகளின் பட்டியலில் இடம்பெற்றுவிடுகிறது. இந்த தேசிய கீதத்தில் இடம் பெற்றுள்ள இந்தியாவின் மிகப்பெரிய நதிகளின் ஒன்றே கடலில் கலப்பதில்லை.
ஆமாங்க….நாட்டின் முக்கிய நதியான யமுனை நேரடியாக கடலில் கலப்பது இல்லை. யமுனை என்பது உண்மையில் தனி நதி அல்ல இது கங்கை நதியின் கிளை நதி ஆனால் தனி நதியை போன்று சுமார் 1350 கிமீ பரப்பளவிற்கு விரிந்து ஓடுகிறது. யமுனைக்கு கூட சம்பல், பெட்வா, சிந்து, பனாஸ், ஹிண்டன் மற்றும் கென் போன்ற துணை நதிகள் உள்ளன. அவை எல்லாம் குறுகிய நிலப்பரப்பில் பாய்ந்து யமுனையை அடைகிறது.
உத்தரகாண்டில் உள்ள யமுனோத்ரி பனிப்பாறைகளில் இருந்து கரைந்து வரும் நதியானது உத்தரபிரதேசத்தில் உள்ள ப்ரயாக்ராஜ் எனும் அலகாபாத் நகரத்தை அடுத்து உள்ள திரிவேணி சங்கமத்தில் கங்கை நதியோடு கலந்துவிடுகிறது. கங்கை நதியோடு கலந்து தான் கடலை சேர்க்கிறது. அதனால் யமுனை நதி கடலில் கலக்காத நதிகளின் பட்டியலில் இடம்பெறுகிறது.
இதையும் பாருங்க : 150 ஆண்டுகளைக் கடந்த கல்கத்தா டிராம்கள்... கோலாகலமாக நடைபெறும் டிராம்ஜாத்ரா திருவிழா..!
அதேபோன்ற மற்றொரு நதி ராஜஸ்தானின் அஜ்மீர் மாவட்டத்தில் உள்ள ஆரவல்லி மலைத்தொடரின் நாகா மலையிலிருந்து உதிக்கிறது. லூனி நதி என்று அழைக்கப்படும் நதியானது 772 மீட்டர் உயரத்தில் உற்பத்தியாகிறது. இது குஜராத்தை நோக்கி தென்மேற்குப் பாதையில் சுமார் 495 கி.மீ தூரம் கடந்து பயணிக்கிறது
அதன் பின்னர் ராஜஸ்தானின் நாகௌர், பாலி, ஜோத்பூர், பார்மர் மற்றும் ஜலோர் மாவட்டங்கள் வழியாக பாய்ந்து, இறுதியில் குஜராத்தின் ரான் ஆஃப் கட்ச் எனும் சதுப்பு நிலத்தில் வடிகிறது. நன்னீர் ஆறாக தொடங்கும் இது ராஜஸ்தான் பாலைவன பகுதியை ஒட்டி வரும்போது உப்புநீராக மாறி விடுகிறது.
ராஜஸ்தானில் பிறக்கும் லுனி நதி மட்டுமல்லாது புகி, பாருட், நாரா, கரோட், பனாஸ், ரூபன், பாம்பன் மற்றும் மச்சு போன்ற சிறு நதிகளும் கடலில் சேராமல் கட்ச் சதுப்பு நிலத்தில் தான் வடிகின்றது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Rajasthan