ஹோம் /நியூஸ் /லைஃப்ஸ்டைல் /

வாவ் சொல்ல வைக்கும் இந்திய ரயில்வேயின் முக்கிய அருங்காட்சியகங்களின் பட்டியல்!

வாவ் சொல்ல வைக்கும் இந்திய ரயில்வேயின் முக்கிய அருங்காட்சியகங்களின் பட்டியல்!

இந்திய ரயில்வேயின் சில முக்கிய அருங்காட்சியகங்களின் பட்டியல்

இந்திய ரயில்வேயின் சில முக்கிய அருங்காட்சியகங்களின் பட்டியல்

Indian Railway Museum | இந்திய மக்களுக்கு மிகவும் விருப்பமான போக்குவரத்து முறைகளில் ஒன்றாக இருந்து வருகிறது ரயில் போக்குவரத்து. இந்திய ரயில்வேயின் 169 ஆண்டுகால பாரம்பரியத்தை பற்றி அறிந்து கொள்ள விரும்புவோர் கட்டாயம் பார்க்க வேண்டிய பதிவு இது.

மேலும் படிக்கவும் ...
  • News18 Tamil
  • 3 minute read
  • Last Updated :

நீங்கள் அவசியம் பார்க்க வேண்டிய இந்திய ரயில்வேயின் சில முக்கிய அருங்காட்சியகங்களின் பட்டியல்!பல நாடுகளில் சமீபத்தில் தான் சர்வதேச அருங்காட்சியகங்கள் தினம் சிறப்பாக கொண்டாடப்பட்டது. இந்தியாவிலும் பல நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டு சர்வதேச அருங்காட்சியக தினம் விமர்சையாக கொண்டாடப்பட்டது.

இந்நிலையில் இந்திய ரயில்வே கடந்த மாதம் 169 ஆண்டுகால சேவையை நிறைவு செய்துள்ளது. இந்தியாவின் முதல் பயணிகள் ரயில் கடந்த 1853-ஆம் ஆண்டு ஏப்ரல் 16-ல் போரி பந்தர் பகுதியில் இருந்து தானே வரை 34-கிமீ தூரம் இயக்கப்பட்டது. இந்திய மக்களுக்கு மிகவும் விருப்பமான போக்குவரத்து முறைகளில் ஒன்றாக இருந்து வருகிறது ரயில் போக்குவரத்து. இந்திய ரயில்வேயின் 169 ஆண்டுகால பாரம்பரியத்தை பற்றி அறிந்து கொள்ள விரும்புவோர் கட்டாயம் பார்க்க வேண்டிய சில ரயில்வே மியூசியம்களை பற்றிய இங்கே பார்க்கலாம்..

டெல்லி தேசிய ரயில் அருங்காட்சியகம் (National Rail Museum):

நாட்டின் தலைநகர் டெல்லியில் உள்ள இந்த தேசிய ரயில் அருங்காட்சியகத்திற்கு ஆண்டுதோறும் சுமார் 5 லட்சத்திற்கும் அதிகமானோர் வருகை தருகின்றனர். டீசல், நீராவி மற்றும் மின்சார இன்ஜின்களைக் காண்பிக்கும் வெளிப்புற கேலரியுடன் ரயில்வே யார்டை பிரதிபலிக்கும் வகையில் இந்த மியூசியம் உள்ளது. வேகன்ஸ், கவச ரயில்கள், ராயல் சலூன்ஸ் மற்றும் ரயில் கார்ஸ் ஆகியவை இங்கே காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. இன்டோர் கேலரியில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளவை ஆரம்பகால போக்குவரத்து முறைகள் தொடர்பான கதைகளை பார்த்வயாளர்களுக்கு எடுத்துரைக்கின்றன.

மைசூரு ரயில் அருங்காட்சியகம் (Mysuru Rail Museum):

அண்டை மாநிலமான கர்நாடகாவில் உள்ளது மைசூர் ரயில் அருங்காட்சியகம். டெல்லி தேசிய ரயில் அருங்காட்சியகத்திற்கு பிறகு இந்தியாவில் இரண்டாவது ரயில்வே அருங்காட்சியகம் மைசூருவில் நிறுவப்பட்டது. கடந்த1976-ஆம் ஆண்டு நிறுவப்பட்ட இந்த அருங்காட்சியகத்தில் ஆஸ்டின் ரயில் மோட்டார் கார், ஸ்டீம் எஞ்சின், மைசூரு மகாராஜா பயன்படுத்திய ராயல் கொச்சஸ், சிக்னலிங் சிஸ்டம், பெயின்டிங்ஸ் மற்றும் ரயில்வே தொடர்பான பிற கலைப்பொருட்கள் இங்கே உள்ளன. பேட்டரியில் இயங்கும் டாய் டிரெயினும் இங்கே உள்ளது.

சென்னை ரயில் அருங்காட்சியகம் (Chennai Rail Museum):

நம் தமிழக தலைநகரான சென்னையில் கடந்த 2002-ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட சென்னை ரயில் அருங்காட்சியகத்தில், சுதந்திரத்திற்கு முந்தைய காலத்திலிருந்து தற்போது பயன்பாட்டில் உள்ள மேம்படுத்தப்பட்ட என்ஜின்கள் வரையிலான ரயில் என்ஜின்களின் தொகுப்பு காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது. இந்த அருங்காட்சியகத்தில் விண்டேஜ் கோச்சுகளுடன், ரயில் கலைப் படைப்புகளைக் காண்பிக்கும் பிரத்யேக ஆர்ட் கேலரியும் உள்ளது. இந்த மியூசியத்தில் இருக்கும் மைக்ரோ ஸ்டீம் என்ஜின் மற்றும் 1921-ல் தயாரிக்கப்பட்ட ஆபிஸ் கம் ஹோம் மாடல்கள் விசிட்டர்களை கவர கூடியவையாக இருக்கின்றன.

நாக்பூர் நாரோ கேஜ் ரயில் அருங்காட்சியகம் (Narrow Gauge Rail Museum):

நாக்பூருக்கு நீங்கள் பயணம் செய்தால் அங்கே கட்டாயம் பார்க்க வேண்டிய இடங்களுள் ஒன்று நாரோ கேஜ் ரயில் அருங்காட்சியகம். இந்த அருங்காட்சியகத்தில் வேல்ஸ், இங்கிலாந்து, ஐல் ஆஃப் மேன், அயர்லாந்து மற்றும் ஸ்காட்லாந்தில் உள்ள எண்பதுக்கும் மேற்பட்ட நாரோ கேஜ் ரயில் பாதைகளில் இருந்து 1,000க்கும் மேற்பட்ட பொருட்களை சேகரித்து வைக்கப்பட்டுள்ளது. இங்கே ஒரு அழகான 1916 Bagnall மேக் ஸ்டீம் லோக்கோமோட்டிவ் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது. இந்திய ரயில்வேயின் பயணத்தைக் காட்டும் சில அழகிய பெயின்டிங்ஸ் இங்கே உள்ளன.

Read More : பனிச்சிகரத்தின் மீது பேயா.? வைரல் போட்டோவில் மறைந்திருக்கும் ரகசியம்!

கோரக்பூர் ரயில் அருங்காட்சியகம் (Rail Museum):

2007-ல் திறக்கப்பட்ட இந்த அருங்காட்சியகத்தின் முக்கிய ஈர்ப்பு 1874 ஆம் ஆண்டு கட்டப்பட்ட லார்ட் லாரன்ஸ் ஸ்டீம் என்ஜின் ஆகும். கடந்த காலத்திலிருந்து இன்றுவரை ரயில்வே ஊழியர்கள் பயன்படுத்தும் கிளிக்ஸ், ஃபர்னிச்சர்ஸ் , நூலகம் மற்றும் சீருடைகளை சித்தரிக்கும் கேலரி இங்கே உள்ளது. இங்கே விண்டேஜ் என்ஜின்கள், உபகரணங்கள் மற்றும் அரிய ஆவணங்களும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

நாடு முழுவதும் உள்ள 22 பழமையான மற்றும் மிக முக்கியமான நிலையங்களில் ‘டிஜிட்டல் மியூசியம்’ அமைக்க இந்திய ரயில்வே திட்டமிட்டுள்ளது. இதனிடையே நாடு முழுவதும் உள்ள பல்வேறு ரயில் அருங்காட்சியகங்களில் உள்ள பிரத்யேக புகைப்படங்கள் மற்றும் ரயில்வே கலைப்பொருட்கள் உள்ளிட்டவற்றை காட்டும் வீடியோக்களை இந்திய ரயில்வே ட்விட்டரில் ஷேர் செய்துள்ளது.

அற்புதமான ரயில்வே பாரம்பரியம்! இந்த அருங்காட்சியகங்கள் நம்மை மீண்டும் கடந்தகாலத்திற்கு அழைத்துச் செல்லும் சக்தியை கொண்டுள்ளன என்று கேப்ஷன் கொடுத்துள்ளது இந்திய ரயில்வே.

Published by:Lilly Mary Kamala
First published:

Tags: Indian Railways, Trending, Viral