கொரோனா வைரஸ் 2வது அலை முடிந்து தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளதால், வீட்டிலேயே முடங்கியிருந்த மக்கள் சுற்றுலா தலங்களை நோக்கி படையெடுக்க தொடங்கியுள்ளனர். இதனை சரியாக யூகித்த இந்தியன் ரயில்வே, ஐஆர்சிடிசி மூலம் ஆன்மீகச் சுற்றுலா மற்றும் இன்பச் சுற்றுலா ஏற்பாடுகளை சலுகை விலையில் ஏற்பாடு செய்துள்ளது. உணவு, தங்குமிடம், பயணச் செலவு என அனைத்தும் மிக குறைந்த விலையில் ஏற்பாடு செய்துள்ளதால், சுற்றுலா செல்ல விரும்புபவர்கள் இதனை பயன்படுத்திக்கொள்ளலாம்.
அதன்படி, கொச்சின், மூணாறு, தேக்கடி, குமரக்கோட்டம் ஆகிய பகுதிகளுக்கு 6 நாள் இன்பச் சுற்றுலா அட்டவணையை வெளியிட்டுள்ளது. கேரளாவின் முக்கிய சுற்றுலா தளங்களை உள்ளடக்கிய இந்த பயணத்தை 6 நாட்கள் சுற்றுலா வாசிகள் என்ஜாய் பண்ணலாம். செப்டம்பர் 10 ஆம் தேதி இரவு அகமதாபாத் ரயில் நிலையத்தில் இருந்து சுற்றுலா பயணம் தொடங்குவதாக ஐ.ஆர்.சி.டி.சி தெரிவித்துள்ளது. நபர் ஒருவருக்கு கட்டணமாக 23, 500 ரூபாய் மற்றும் வரி நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில்
நியூஸ்18 தமிழ் இணையதளத்தை
இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்..
செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
இந்தக் கட்டணம் தங்குமிடம், பயணச் செலவு, உணவு என அனைத்தையும் உள்ளடக்கியது. தங்குமிடம் அனைத்தும் 3 ஸ்டார் ஹோட்டல்கள் எனத் தெரிவித்துள்ள ஐ.ஆர்.சி.டி.சி, லோக்கல் பயணத்துக்கு ஏ.சி வண்டிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும், பயணத்தின்போது காலை உணவு மற்றும் இரவு உணவுகள் பரிமாறப்படும் என கூறியுள்ளது.
முதல் நாள்
ஐ.ஆர்.சி.டி.சியின் 6 நாள் பயணத்தில் முதல் நாளை சுற்றுலாப் பயணிகளை கொச்சினில் தொடங்குகின்றனர். அங்கு ஹோட்டல்களில் தங்கவைக்கப்படும் அவர்கள், மாலையில் செராய் கடற்கரைக்கு அழைத்துச் செல்லப்படுகின்றனர்.
2-ம் நாள்
முதல் நாள் பொழுதை கொச்சினில் கழித்தபிறகு 2ம் நாளில் மூணாறு அழைத்துச் செல்லப்படுகின்றனர்.
கொச்சினில் இருந்து மூணாறுக்கு 135 கிலோ மீட்டர் சாலைப் பயணம். சுற்றுலாவுக்கு பிரசித்திப்பெற்ற இடமான அங்கு டீ மியூசியத்துக்கு அழைத்துச் செல்லப்படுகின்றனர்.
Also read... வங்கி வாடிக்கயைாளர்கள் கவனத்திற்கு... 15 நாட்களுக்கு வங்கிகள் செயல்படாது
3-ம் நாள்
மூன்றாம் நாளும் மூணாற்றிலேயே தொடங்குகிறது. அங்கேயே இரவு தங்கவைக்கப்பட்டு காலை முதல் மாலை வரை முக்கியமான இயற்கை தளங்களுக்கு பயணிகள் அழைத்துச் செல்லப்படுகின்றனர். இயற்கையின் பேரழகை ரசித்த பிறகு மாலையில் ஹோட்டலுக்கு செல்ல வேண்டும். இரவு உணவுடன் அங்கேயே தங்க வைக்கப்படுவார்கள்.
4-ம் நாள்
நான்காம் நாள் காலை எழுந்தவுடன் தேக்கடிக்கு அழைத்துச் செல்லபடுவீர்கள். அங்கு காலை உணவு வழங்கப்படும். தேக்கடியில் பிரபலமான போட்டிங் அழைத்துச் செல்லபடுவார்கள். போட்டிங் செல்ல விரும்புபவர்கள் சொந்தமான கட்டணம் செலுத்திக் கொள்ள வேண்டும்.
5-ம் நாள்
காலை உணவு முடித்த பிறகு தேக்கடியில் இருந்து குமரக்கோட்டம் பயணம் செய்ய வேண்டும். அங்கு பிரபலமான ஹவுஸ் போட்டில் சுற்றுலாப் பயணிகள் தங்க வைக்கப்படுவர்கள். இயற்கை எழில் கொஞ்சும் பேரழகுக்கு சொந்தமான வேம்நாடு ஏரியை கண்டுகளிப்பீர்கள். அங்கேயே இரவு தங்கவைக்கப்படும் சுற்றுலாப் பயணிகளுக்கு வித்தியாசமான அனுபவங்கள் காத்திருக்கின்றன. அத்துடன் பயணம் நிறைவடைகிறது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.