ஹோம் /நியூஸ் /லைஃப்ஸ்டைல் /

3 நாட்களில் 7 கண்டங்களுக்கு பயணம் செய்து உலக சாதனை படைத்த இந்தியர்கள்..!

3 நாட்களில் 7 கண்டங்களுக்கு பயணம் செய்து உலக சாதனை படைத்த இந்தியர்கள்..!

3 நாட்களில் 7 கண்டங்களுக்கு பயணம் செய்து உலக சாதனை

3 நாட்களில் 7 கண்டங்களுக்கு பயணம் செய்து உலக சாதனை

முந்தைய சாதனையை தாண்டி நாளை வேறொருவரால் முறியடிக்கப்படும் ஒரு சாதனையை இன்று நாங்கள் செய்து வெற்றி பெற்றதாக இருவரும் தெரிவித்துள்ளனர்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Chennai, India

வெறும் 3 நாட்களில் ஏழு கண்டங்களுக்கும் பயணம் செய்ய முடியும் என்று சொன்னால் நம்ப முடிகிறதா? அதை நிதர்சனத்தில் இரண்டு இந்தியர்கள் சாத்தியமாக்கி உலக சாதனை படைத்துள்ளனர். 

இதற்கு முன்னதாக  ஐக்கிய அரபு எமிரேட்ஸைச் சேர்ந்த டாக்டர் கவ்லா அல்ரோமைதி  7 கண்டங்களையும் பிப்ரவரி 2020 இல் 3 நாட்கள், 14 மணி நேரம், 46 நிமிடங்கள் மற்றும் 48 வினாடிகளில் பயணித்து சாதனை படைத்திருந்தனர்.

அதன்பிறகு சென்ற ஆண்டு இந்தியாவைச் சேர்ந்த டாக்டர் அலி இராணி மற்றும் சுஜோய் குமார் மித்ரா ஆகியோர், மிகக் குறுகிய காலத்தில் ஏழு கண்டங்களுக்கும் பயணம் செய்து புதிய கின்னஸ் சாதனை படைத்துள்ளனர். அவர்கள் ஏழு கண்டங்களுக்கும் 3 நாட்கள், 1 மணி நேரம், 5 நிமிடங்கள் மற்றும் 4 வினாடிகளில் பயணித்துள்ளனர்.

இவர்கள் இருவரும் பயணத்தில் ஆர்வமுள்ள ஒவ்வொருவரும் எதாவது ஒரு புதிய சாதனை படைக்க வேண்டும் என்று நம்புபவர்கள். அதற்காகத் தான் இந்த முயற்சியைத் தொடங்கியதாகக் கூறுகின்றனர். தங்களது சாதனையையும் முறியடிக்க மற்றவர்கள் முயற்சி செய்ய வேண்டும் என்றும் தெரிவித்தனர்.

கின்னஸ் உலக சாதனைக்கு இருவரும் அளித்துள்ள அறிக்கையில், "முந்தைய சாதனையை தாண்டி நாளை வேறொருவரால் முறியடிக்கப்படும் ஒரு சாதனையை இன்று நாங்கள் செய்து வெற்றி பெற்றதாக" இருவரும் தெரிவித்துள்ளனர்.

கின்னஸ் சாதனை சான்றிதழை டாக்டர் அலி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். 7 கண்டங்களையும் 86 மணிநேரத்தில்; பயணித்த  முந்தைய சாதனையை விட 13 மணிநேரம் குறைவாக, அதாவது 73 மணிநேரத்தில் பயணித்து முறியடித்துள்ளனர்.

இருவரும் கடந்த ஆண்டு டிசம்பர் 4 ஆம் தேதி அண்டார்டிகாவில் தங்கள் பயணத்தைத் தொடங்கினர். அங்கிருந்து வட அமெரிக்கா, தென் அமெரிக்கா, ஆப்பிரிக்கா, ஐரோப்பா, ஆசியா, என்று பயணித்து  டிசம்பர் 7 ஆம் தேதி ஆஸ்திரேலியாவின் மெல்போர்னுக்கு வந்து 7 கண்டங்களையும் 3 நாட்களில் கடந்துள்ளனர்.

First published:

Tags: Travel, World record