சாகச பயணம் என்பது இன்றைய எல்லா இளைஞர்களின் பாக்கெட் லிஸ்ட்டில் உள்ள ஒரு முக்கிய செயலாக மாறி உள்ளது. இளமையின் துள்ளலோடு அந்த வயதிற்கே உரிய துடுக்கையும் தைரியத்தையும் சோதிக்கும் களமாக சாகச பயணம் அமைகிறது.
இந்திய மக்களுக்கு நாட்டின் வடக்கில் உள்ள இமயமும் மேற்குத்தொடர்ச்சி மலையும் பெரிய வரபிரசாதம் என்றே சொல்ல வேண்டும். வெயில்காலத்தில் மேற்கு தொடர்ச்சி மலையும், பனி விழும் நேரம் இமயமும் சரியாக கைகொடுக்கும்.
இமயமலை வளைந்து சீனாவை ஒட்டிய வடக்கிழக்கு பிராந்தியத்தின் அரணாக, எல்லையாக நிற்பதோடு இயற்கை சுற்றுலாவிற்கு சிறந்த இடமாக திகழ்கிறது. ஆனால் அதிக மக்களுக்கு இங்குள்ள இடங்களும் அதன் சிறப்புகளும் தெரிவதில்லை. சுற்றுலா மூலம் உள்ளூர் பொருளாதாரத்தை நிலைநிறுத்தவும், வடகிழக்கு மாநில உள்ளூர் வேலைவாய்ப்பை அதிகரிக்கவும் இந்திய ராணுவம் ஒரு முயற்சியை மேற்கொண்டுள்ளது.
இதையும் படிங்க :பொள்ளாச்சியில் சர்வதேச பலூன் திருவிழா அறிவிப்பு - சிறப்புகள் என்ன?
சுற்றுலாவை மேம்படுத்த ஒவ்வொரு மாநிலத்தின் தனி மாநில அரசுகளால் பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டாலும், சிக்கிம் முதல் அருணாச்சலப் பிரதேசத்தின் கிழக்கு முனை வரையிலான பெரும்பாலான எல்லைப் பகுதிகளில் ஒருங்கிணைந்த சுற்றுலா வளர்ச்சியை சாகச நடவடிக்கைகள் மூலம் மேற்கொள்ள இந்திய ராணுவம் ஒரு முயற்சியை மேற்கொண்டது.
சமீபத்திய அறிக்கைகளின்படி, இந்த ஆண்டு, ஒரு டிரான்ஸ்-தியேட்டர் சாகச நடவடிக்கை, லைன் ஆஃப் ஆக்ச்சுவல் கன்ட்ரோலில் (எல்ஏசி) ஏற்பாடு செய்யப்பட்டது. இதில் நதிகளின் போக்கில் ராஃப்டிங், மலையேற்றம், மலை பகுதிகளில் பைக்கிங் போன்ற பல சாகச நடவடிக்கைகள் இருந்தன. இதில் உள்ளூரைச் சேர்ந்த பொதுமக்கள் ஆர்வத்துடன் கலந்துகொண்டனர்.
மூன்று மாத கால தொடர் பயணம் ஆகஸ்ட் கடைசி வாரத்தில் தொடங்கி ஆறு மலையேறும் பயணத்தில், 700 கிமீ (16,500 அடி உயரம் வரை) ஏழு மலையேற்றங்கள், 1,000 கிமீக்கு மேல் இல்லாத சாலைகளில் ஆறு சைக்கிள் பயணங்கள் ஆகியவை அடங்கும். ஆறு பள்ளத்தாக்குகள் மற்றும் மூன்று ஆறுகள் வழியாக 132 கிமீ தூரம் செல்லும் மூன்று வெள்ளை நீர்-படகு பயணங்களை செய்துள்ளனர்.
இதையும் படிங்க: வீட்டுக்கு நடுவே சர்வதேச எல்லை... இரட்டைக் குடியுரிமை கொண்ட ஒரே இந்திய கிராமம்... எங்கு உள்ளது தெரியுமா..?
பெரும்பாலான இடங்கள் இந்திய எல்லைப்பகுதியில் அமைந்து இருந்ததால் எல்.ஏ.சி வழியாக உள்ள பெரும்பாலான பாதைகள் பொதுமக்களால் ஒருபோதும் ஆராயப்படவில்லை. ஆனால் இப்போது இந்திய ராணுவமும் இணைந்து சுற்றுலா திட்டம் போடுவதால் எல்லையை ஒட்டிய இடங்களுக்கு சுற்றுலா பயணிகளால் எளிதாக சென்று வர முடிந்தது.
முக்கியமாக இந்தியா-நேபால் -திபெத் மூன்று நாட்டு சந்திப்பில் அமைந்துள்ள மவுண்ட் ஜோன்சாங் மலை உச்சி பகுதிக்கு சுற்றுலா பயணிகள் எளிதாக சென்று மூன்று நாட்டின் பகுதிகளையும் ஒருங்கே காணும் ஒரு அறிய வாய்ப்பை பெற்றுள்ளனர்.
வரும் காலத்தில் இதுபோன்ற பல புதிய சாகச சுற்றுலா நிகழ்ச்சிகளை நடத்த இருப்பதாக இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது. அதோடு மேலும் நாட்டின் மற்ற பகுதிகளில் இருந்தும் வெளி நாடுகளில் இருந்தும் பார்வையாளர்களைக் கவரும் எண்ணற்ற பயண திட்டங்களை உருவாக்கி வருகிறது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Indian army, Tourism, Travel