முகப்பு /செய்தி /லைஃப்ஸ்டைல் / இந்தியாவின் முதல் மெட்ரோ ரயில் நிலைய சினிமா தியேட்டர் எங்கு தொடங்கப்பட்டது தெரியுமா..?

இந்தியாவின் முதல் மெட்ரோ ரயில் நிலைய சினிமா தியேட்டர் எங்கு தொடங்கப்பட்டது தெரியுமா..?

இந்தியாவின் முதல் மெட்ரோ ரயில் நிலைய சினிமா தியேட்டர்

இந்தியாவின் முதல் மெட்ரோ ரயில் நிலைய சினிமா தியேட்டர்

மால்கள், மல்டிப்ளக்ஸ்  திரையரங்குகள் பார்த்திருப்பீர்கள். மெட்ரோ ரயில் நிலையத்தில் திரையரங்குகள் இருப்பதை நீங்கள் கேள்விப்பட்டிருக்கிறீர்களா?

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Nagpur, India

பொதுவாக நண்பருக்களுக்காக மெட்ரோ ஸ்டேஷனில் அமர்ந்து இருக்கும் நேரம்  மொபைலில் ரீல்கள் அல்லது ஷார்ட்ஸை ஸ்க்ரோலிங் செய்துக்கொண்டு காலத்தை கழித்துக்கண்டு இருப்போம். நீண்ட நேரம் ஆனால் மெட்ரோ நிலையத்தில் இருப்பவரே நம்மை சந்தேக கண்களோடு பார்ப்பார். இனி அந்த கவலையே இல்லை. காத்திருக்கும் நேரத்தில் ரயில் நிலையத்திலேயே ஒரு திரைப்படத்தை பார்க்கலாம்.

மால்கள், தனிபட்ட மல்டிப்ளக்ஸ்  திரையரங்குகள் போட்டவற்றில் தான் திரையரங்குகள் இருந்து பார்த்திருப்பீர்கள். மெட்ரோ ரயில் நிலையத்தில் திரையரங்குகள் இருப்பதை நீங்கள் கேள்விப்பட்டிருக்கிறீர்களா? அதுவும் எங்கோ வெளிநாட்டில் இருப்பதை பற்றி நாங்கள் பேசவில்லை இந்தியாவில் இருப்பதை பற்றி தான் கேட்கிறோம்.

நிஜமாதாங்க சொல்றோம்..! இந்தியாவின் ஒரு மெட்ரோ ரயில்  நிலையத்தில் மக்கள் படம் பார்க்கும் விதத்தில் ஒரு திரையரங்கு உள்ளது. இந்தியாவின் ஆரஞ்சு நகரம் என்று அழைக்கப்படும் நாக்பூரில் தான் இந்தியாவின் முதல் மெட்ரோ ரயில் நிலைய திரை அரங்கம் அமைந்துள்ளது.

நாக்பூரில் உள்ள ஜெய்பிரகாஷ் நகர் மெட்ரோ ரயில் நிலையத்தில், AM சினிமா சிறப்பு  திரை அரங்கை திறந்தது. சாதாரண திரை அரங்குகளை போலவே மெட்ரோ ஸ்டேஷனில் உள்ள திரையரங்கிற்கான டிக்கெட்டுகளை அங்குள்ள பாக்ஸ் ஆபிஸ்  அல்லது ஆன்லைனில் புக் மை ஷோ பயன்பாட்டைப் பயன்படுத்தி வாங்கலாம்.

அதே போல காலை 9 மணிக்கு முதல் காட்சி தொடங்குகிறது. இரவு இறுதி காட்சி 10 மணிக்கு தொடங்குகிறது. ஆக நாள் முழுவதும் படம் ஓடிக்கொண்டு இருக்கும். இந்த ஸ்டேஷன் திரையரங்கில் மொத்தம் 2 திரைகள் உள்ளன. ஸ்க்ரீன் 1ல் 80 இருக்கைகளும், ஸ்க்ரீன் 2ல் 82 இருக்கைகளும் உள்ளன. இந்த தியேட்டரில் 3டி படங்களுக்கான வசதி கூட இருக்கிறதாம்.

இதையும் படிங்க: இந்தியாவில் உள்ள இந்த கிராமத்தில் யாருக்கும் பெயரே கிடையாதாம்... காரணம் தெரிந்தால் நீங்களே ஆச்சரியப்படுவீங்க..!

அதேபோல் படம் பார்க்கும் பொது ஸ்னாக்ஸ் இல்லாமல் எப்படி என்று யோசிக்கிறீர்களா? அதுக்கும் வச்சுருக்காங்களே..   தியேட்டரில் ஒரு சிறிய கஃபே உள்ளது. அங்கு பாப்கார்ன், சாண்ட்விச்கள், பிரஞ்சு பிரைஸ், குளிர் பானங்கள் விற்கப்படுகிறது.

அதனால் மக்களே நாக்பூர் பக்கம் போனால் இந்த மெட்ரோ ரயில்நிலைய தியேட்டரை மிஸ் பண்ணிராதீங்க... நம்ம சென்னை மெட்ரோல கூட இப்படி ஒன்னு வச்சா நல்லா இருக்கும்ல...

First published:

Tags: Metro Rail, Nagpur, Theatre