Home /News /lifestyle /

சுற்றுலா பயணிகளுக்கு குட் நியூஸ்..! இந்திய- பூட்டான் எல்லை கதவுகள் மீண்டும் திறப்பு.. களைகட்ட இருக்கும் சுற்றுலாதலங்கள்!

சுற்றுலா பயணிகளுக்கு குட் நியூஸ்..! இந்திய- பூட்டான் எல்லை கதவுகள் மீண்டும் திறப்பு.. களைகட்ட இருக்கும் சுற்றுலாதலங்கள்!

இந்திய- பூட்டான் எல்லை திறப்பு

இந்திய- பூட்டான் எல்லை திறப்பு

பூட்டான் ஃபூன்ஷோலிங் மற்றும் பாரோ வழியாக மட்டுமே நுழைவு அனுமதிகளை வழங்கியிருந்தன. ஆனால் இப்போது கெலேபு , சம்ட்ரூப் மற்றும் ஜொங்கர் ஆகிய மூன்று கூடுதல் நுழைவு வாயில்கள் திறக்கப்படுகிறது

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Chennai |
அஸ்ஸாம் எல்லையில் உள்ள சம்ட்ரூப், ஜொங்கர் மற்றும் கெலேபுவில் உள்ள இந்தியா-பூடான் எல்லைக் கதவுகள் செப்டம்பர் 23 முதல் சுற்றுலாப் பயணிகளுக்காக மீண்டும் திறக்கப்படும் என்று பூட்டான் அரசு அறிவித்துள்ளது.

COVID-19 தொற்றுநோய் காரணத்தால் இரு நாட்டின் எல்லைகள் மூடப்பட்டது. 2.5 வருட இடைவெளிக்குப் பிறகு, முதல் முறையாக இப்பொது தான்  திறக்கப்படுகிறது. COVID-19 தொற்று குறைந்துவிட்டதால், அந்தந்த அரசாங்கங்கள் செப்டம்பர் 23 முதல் இந்தியா-பூடான் எல்லையை மீண்டும் திறக்க தயாராக உள்ளன.

முன்னதாக பூட்டான் ஃபூன்ஷோலிங் மற்றும் பாரோ வழியாக மட்டுமே நுழைவு அனுமதிகளை வழங்கியிருந்தன. ஆனால் இப்போது சுற்றுலாப் பயணிகளுக்காக கெலேபு , சம்ட்ரூப் மற்றும் ஜொங்கர் ஆகிய மூன்று கூடுதல் நுழைவு வாயில்களைச் சேர்த்துள்ளனர். இதனால் பூட்டானின் பல்வேறு இடங்களை எளிதாக அடைந்து சுற்றி பார்க்கலாம்.

பயணிகள் கவனத்திற்கு.. பெட்வா நதிக்கரை நகரமான ஓர்ச்சாவில் உள்ள சிறந்த இடங்கள்!

இதைப் பற்றி உள்துறை மற்றும் கலாச்சார விவகார அமைச்சகத்தின் இமயமலை இராச்சியத்தின் இயக்குனர் (சட்டம் மற்றும் ஒழுங்கு) தாஷி பென்ஜோர் கூறுகையில், பூடான் அரசு இந்தியாவுடனான சர்வதேச எல்லை செப்டம்பர் 23 அன்று திறக்கப்படும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. எல்லையைத் திறந்து சுற்றுலா பயணிகளுக்கு நல்ல அனுபவத்தை வழங்க அனைவரும் தயாராக உள்ளதாகவும் அவர் கூறினார்.

சுற்றுலா பயணிகளிடம் இருந்து கணிசமான மேம்பாட்டு நிதி (SDF) வசூலிக்கப்படும் என்றும், இது சுற்றுச்சூழல் பாதுகாப்பு, சேவைகள் மற்றும் உள்கட்டமைப்பை மேம்படுத்துவதற்கு செலவிடப்படும் என்றும் அவர் கூறினார்.

சுற்றுலா திட்டங்களைப் பொறுத்தவரை, பூடான் அரசாங்கம் சுற்றுச்சூழல் சுற்றுலா, பறவைகளைப் பார்ப்பது மற்றும் பார்வையாளர்களுக்காக பல சிறப்பு பேக்கேஜ்களை வழங்கத் திட்டமிட்டுள்ளது. பயணிகள் தடையற்ற பயணத்தை அனுபவிப்பதை உறுதி செய்வதற்காக, ஒரு நிலையான இயக்க நடைமுறையும் (SOP) வெளியிடப்பட்டுள்ளது.

ஜம்முவில் உள்ள வைஷ்ணவி தேவியை வழிபட அருமையான வாய்ப்பு... IRCTC-ன் அசத்தல் பேக்கேஜ் அறிமுகம்!

இரவில் எல்லை பகுதியில் தங்கிவிட்டு அடுத்த நாள் பூடானின் வேறு பல இடங்களுக்கு பயணிக்கத் திட்டமிடும் பார்வையாளர்களுக்கு இந்திய ரூபாய் 1200 கட்டணமாக வசூலிக்கப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

மேலும், தங்கள் நாட்டிற்கு வரும் சுற்றுலாப் பயணிகள் தங்களது வாக்காளர் அடையாள அட்டை மற்றும் பிற தொடர்புடைய ஆவணங்களைக் கொண்டு வருமாறு பூட்டான் அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனர்.
Published by:Ilakkiya GP
First published:

Tags: India, Travel

அடுத்த செய்தி