• HOME
  • »
  • NEWS
  • »
  • lifestyle
  • »
  • கேரளாவுக்கு டூர் செல்ல திட்டமா? நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய லேட்டஸ்ட் அப்டேட் இது தான்..

கேரளாவுக்கு டூர் செல்ல திட்டமா? நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய லேட்டஸ்ட் அப்டேட் இது தான்..

காட்சி படம்

காட்சி படம்

கேரளா செல்லும் உள்நாட்டு பயணிகளுக்கான முக்கிய அப்டேட்டை ஏர் இந்தியா நிறுவனம் வெளியிட்டுள்ளது.

  • Share this:
இந்தியாவில் கடந்த 19 மதங்களுக்கும் மேலாக கொரோனா தொற்று நீடித்து வரும் நிலையில் இரண்டாம் அலை தற்போது மிகவும் குறைந்து நாட்டின் பல மாநிலங்களில் இயல்பு நிலை திரும்பி உள்ளது. மக்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பும் வகையில் மாநில அரசுகள் பல்வேறு தளர்வுகளை அறிவித்திருந்தாலும், குறிப்பிட்ட சில கட்டுப்பாடுகள் இன்னும் தொடர்கின்றன. ஏனென்றால் 2-ம் அலியின் வீரியம் குறைந்திருந்தாலும், எந்நேரமும் மூன்றாம் அலை ஏற்படலாம் என்று நிபுணர்கள் எச்சரித்து உள்ளனர்.

எனினும் பல மாதங்களாக வீட்டிலேயே முடங்கி கிடந்த மக்கள் தற்போது குடும்ப உறுப்பினர்கள் மற்றும் நண்பர்களுடன் வெளிமாநிலங்களுக்கு சுற்றுலா செல்ல துவங்கி உள்ளனர்.
இதனிடையே அண்டை மாநிலமான கேரளாவில் தொற்று பாதிப்பு மெல்ல மெல்ல குறைந்து வருகிறது. எனவே கடவுளின் தேசம் என்றழைக்கப்படும் கேரளாவிற்கு டூர் செல்ல திட்டம் வைத்திருப்பவர்களுக்கு தற்போது மகிழ்ச்சியான செய்தி ஒன்று வெளியாகி இருக்கிறது. அதன்படி நாட்டின் தேசிய விமான சேவை நிறுவனமான ஏர்இந்தியா தனது அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில் தகவல் ஒன்றை ஷேர் செய்து இருக்கிறது.



அதில் "உள்நாட்டு பயணிகளுக்கான முக்கிய அப்டேட்" என்று குறிப்பிட்டு அந்த பதிவில் "முழுமையாக தடுப்பூசி போட்டு கொண்ட (2 டோஸ் கொரோனா தடுப்பூசி) சுற்றுலா பயணிகளுக்கு ஒரு நல்ல செய்தி உள்ளது, கேரளாவிற்கு செல்ல உங்களுக்கு இனி ஆர்டி-பிசிஆர் சோதனை தேவையில்லை "என்று ஏர்இந்தியா குறிப்பிட்டு உள்ளது. ஏர்இந்தியா-வின் இந்த ட்விட்டரின்படி கொரோனா தடுப்பூசியின் 2 டோஸ்களையும் போட்டு கொண்டவர்கள் கேரளாவிற்கு செல்லும் போது அவர்கள் நெகட்டிவ் ஆர்டி-பிசிஆர் அறிக்கை இல்லாமல் பயணம் செய்யலாம்.



கேரளாவில் ஒருநாள் கொரோனா பாதிப்பு இன்னும் ஆயிரக்கணக்கில் இருந்து கொண்டு தான் இருக்கிறது. கொரோனாவிற்கு எதிரான முக்கிய கேடயமாக தடுப்பூசி இருந்து வரும் நிலையில், தடுப்பூசிகளின் செயல்திறன் எதிர்பாராததை விட சிறப்பாக இருப்பதாக நிபுணர்கள் குறிப்பிட்டுள்ளனர். எனவே முழுமையாக தடுப்பூசி போட்டு கொண்டுள்ளவர்களை தயக்கமின்றி மாநிலத்திற்கும் நுழைய அனுமதிக்க கேரள அரசு முடிவெடுத்துள்ளது.

also read : தலைநகர் டெல்லியை பற்றி உங்களுக்குத் தெரியாத சுவாரஸ்யமான தகவல்கள்

முழுமையாக தடுப்பூசி போட்டு கொண்டுள்ளவர்கள் கேரளாவிற்கு செல்லும் போது ஆர்டி-பிசிஆர் நெகட்டிவ் ரிசல்ட்டை காட்ட வேண்டாம் என்றாலும், 2 டோஸ் தடுப்பூசிகளையும் போட்டு கொண்டுள்ளதற்கான சான்றிதழை கட்டாயம் எடுத்து செல்ல வேண்டும் என்று ஏர்இந்தியா அந்த ட்விட்டில் குறிப்பிட்டு இருக்கிறது.

கேரளாவை பொறுத்த வரை இரவுநேர ஊரடங்கு மற்றும் ஞாயிற்றுகிழமை ஊரடங்கு உள்ளிட்டவை தொடரும் என்று அம்மாநில அரசால் சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. கடந்த செப்டம்பர் 4 அன்று அம்மாநில முதல்வர் பினராயி விஜயன், சுகாதார அதிகாரிகளுடன் நடித்திய ஆய்வு கூட்டத்திற்கு பிறகு மேற்கண்ட ஊரடங்கு முறைகள் தொடரும் என்று அறிவித்தது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Tamilmalar Natarajan
First published: