Home /News /lifestyle /

அமெரிக்காவிற்கு பயண விசா வேண்டுமா.. 2024 வரை காத்திருங்கள்.

அமெரிக்காவிற்கு பயண விசா வேண்டுமா.. 2024 வரை காத்திருங்கள்.

visa

visa

அமெரிக்க விசா விண்ணப்பித்து நீண்ட நாட்கள் காத்திருந்தாலும் நேர்முக அழைப்பு வந்தால் 10 நாட்களில் விசா கிடைத்துவிடுகிறது. 10 ஆண்டுகள் வரை பலமுறை சென்று வரும் அனுமதியை அமெரிக்கா அளிக்கிறது.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
சமீபத்தில் டெல்லியைச் சேர்ந்த ஒருவர் இந்த ஆண்டு கிறிஸ்துமஸை நியூயோர்க்கில் கொண்டாட எண்ணி விசா வலைத்தளத்திற்கு சென்று பார்த்துள்ளார். அமெரிக்க  விசாவிற்கான நேர்காணல் தேதி மார்ச் 2024 என்று  வந்துள்ளது கண்டு அதிர்ந்துள்ளார்.

அமெரிக்கா தவிர்த்து, ஐரோப்பிய நாடுகள், கனடா,யு.கே ஆகிய நாடுகளின் விசாக்களின் நிலையும் இதே மாதிரி தான் உள்ளது.
அமெரிக்க விசாவிற்கு குறைந்தது 500 நாட்கள்  காத்திருக்க வேண்டி உள்ளது.

விசா எண்ணிக்கை:
கொரோனா காலத்தில் பல அமெரிக்க நிறுவனங்கள், தங்கள் நிறுவனத்தில் உள்ள பெரும்பாலான பணியாளர்களை பணிநீக்கம் செய்தது. அதில் இந்தியர்களின் எண்ணிக்கை அதிகமாக இருந்தது. அதோடு கொரோனா காலத்தில் வீட்டில் இருந்து வேலை செய்யும் நிலை இருந்ததால் பல இந்தியர்கள் தங்கள் தாய் நாட்டுக்குத்  திரும்பினர்.

இப்போது மீண்டும் பணிக்குத் திரும்ப அமெரிக்க விசாவுக்கு விண்ணப்பித்து வருகின்றனர். ஒரே நேரத்தில் லட்சக்கணக்கான விண்ணப்பங்கள் குவிந்து வருவதால் தான் இந்த காலதாமதம் ஆகிறது  என்று அமெரிக்க தூதரகம் விளக்கம் அளித்துள்ளது.

பயணிகள் கவனத்திற்கு.. மேகாலயாவில் அத்திவேர் பாலம் கொண்ட மாவ்லின்னாங் கிராமத்திற்கு ஒரு பயணம்..!

விசா வழங்கும் அலுவலகங்களில் கொரோனா காலகட்டத்தில் செய்த ஆட்குறைப்பை இப்போது தான் சரி செய்து வருகிறோம். அதனால் விசா காத்திருப்பு விரைவில் சரி செய்யப்படும் என்று கூறியுள்ளது. விசா கிடைக்கும் வரை டிக்கெட்டுகள் எடுக்க வேண்டாம் என்றும் கோரிக்கை வைக்கின்றனர்.

அதே நேரம் ஏற்கனவே அமெரிக்க விசா வைத்திருந்தவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும். புதிதாக விண்ணப்பிக்கும் நபர்களுக்கு சிறிது காலத்திற்குள் விசா அளிக்கப்படும் என்று அமெரிக்கத் தூதரக செய்தித்தொடர்பாளர் தெரிவித்தார். அதோடு சுற்றுப்பயணம் வரும் நபர்களை விட, மாணவர்கள், தொழில் முனைவோர், தொழிலதிபர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும் என்றும் தெரிவித்துள்ளது.

அமெரிக்க விசா விண்ணப்பித்து நீண்ட நாட்கள் காத்திருந்தாலும் நேர்முக அழைப்பு வந்தால் 10 நாட்களில் விசா கிடைத்துவிடுகிறது. 10 ஆண்டுகள் வரை பலமுறை சென்று வரும் அனுமதியை அமெரிக்கா அளிக்கிறது.

வெளிநாடு பயணத்தில் ஆசையா? விசா இல்லாமல் பயணம் செய்யக் கூடிய 10 ஆசிய நாடுகளின் பட்டியல் இதோ !

பிரிட்டிஷ் விசா:
அமெரிக்கா அளவு இல்லாவிடினும் பிரிட்டனுக்கு செல்ல விண்ணப்பிக்கப்பட்ட விசாக்களின் எண்ணிக்கையும் கணிசமான அளவு உயர்ந்துள்ளது. பிரிட்டனின் கணக்குப்படி 2021 ஏப்ரல் முதல் 2022 மார்ச்  வரையான காலகட்டத்தில் சுமார் 1,06,000 விசிட்டர் விசாக்கள் இந்தியர்களுக்கு வழங்கப்பட்டுள்ளதாக பிரிட்டன் தூதரக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன . இது முந்தைய ஆண்டை விட 328 % அதிகமாகும்.

ஆனால் தற்போது தங்கள் நாட்டில் அதிக இந்திய மாணவர்கள் சேர வேண்டும் என்று மாணவர்கள் விசாவிற்கு முன்னுரிமை தந்து வருவதால் விசிட்டர் விசாவில் தாமதம் ஏற்பட்டு வருவதாக கூறியுள்ளனர். தாமதத்திற்கு மன்னிப்பு கோரி விரைவில் சரி செய்யப்படும் என்றும் தெரிவித்துள்ளனர்.



ஐரோப்பிய நாடுகள் பெரும்பாலும் தங்கள் விசா தளங்களில் நேர்முக சந்திப்பை இன்னும் திறக்கவே இல்லை. மிக குறைந்த நாடுகளே விசா விண்ணப்பங்களை வெளியிட்டு வருகிறது. செப்டம்பர் இறுதியில் செல்வதற்கான விசா விண்ணப்பங்களை சுவிட்சர்லாந்து வெளியிட்டுள்ளது. ஆஸ்திரியா நாடும் கூடுதல் கட்டணத்தோடு விசா சந்திப்புகளை ஏற்பாடு செய்து வருகிறது. இந்த நாடுகளின் விசா மூலம் ஐக்கிய ஐரோப்பிய நாடுகளுக்கான ஷெங்கன் மாநில விசா பெற இந்தியர்கள் முயற்சித்து வருகின்றனர். இந்த விசா மூலம் ஐக்கிய ஐரோப்பிய நாடுகளுக்குள் பயணிக்க இயலும்.

கனடா நாட்டிலும் அதிக எண்ணிக்கையில் விண்ணப்பங்கள் வந்து குவிவதால் காலம் ஆகிறது என்று விளக்கம் அளித்துள்ளது. அதோடு 2022 முதல் 5 மாதங்களில் சுமார் 123500 இந்தியர்களுக்கு கனடிய நுழைவு மற்றும் கனடிய குடியுரிமை வழங்கியுள்ளதாக தெரிவித்துள்ளது. மேலும் மக்களை உள்ளே அனுமதிக்க சிறிது காலம் எடுக்கும் என்றும் தெரிவிக்கின்றனர்.
Published by:Ilakkiya GP
First published:

Tags: American visa, Canada, UK, USA

அடுத்த செய்தி