கடந்த பத்தாண்டுகளில் ஒவ்வொரு மூன்று நிமிடங்களுக்கும் ஒரு வனவிலங்கு வேட்டைக்காரர்களால் கொல்லப்பட்டதாக சமீபத்திய ஆய்வு ஒன்றில் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. யானைகள், சிங்கங்கள் மற்றும் ஆபத்தான காண்டாமிருகங்கள் உட்பட கடந்த ஆண்டுகளில் 1.7 மில்லியனுக்கும் அதிகமான விலங்குகள் கொல்லப்பட்டுள்ளன என்பதையும் ஆய்வுகள் வெளிப்படுத்தியுள்ளது.
டெய்லி மெயில் (DailyMail ) வெளியிட்ட அறிக்கையின்படி, எட்வர்டோ கோன்கால்வ்ஸின் (Eduardo Goncalves) புத்தகமான "டிராபி லீக்ஸ்: டாப் ஹண்டிங் அண்ட் இண்டஸ்ட்ரி சீக்ரட்ஸ்"-ல் (Trophy Leaks: Top Hunters And Industry Secrets) இது தொடர்பான புள்ளிவிவரங்கள் வெளிவந்துள்ளன. இந்த புத்தகம் மேலும் உயரடுக்கு வர்க்கத்துக்கும் தொழில்துறையினருக்கும் இடையிலான தொடர்புகள் குறித்து கவனம் செலுத்தியுள்ளது.
கோன்கால்விசின் புத்தகம் ட்ராபி ஹண்டிங் (trophy hunting) தொழில் குறித்து பல கூற்றுக்களை முன்வைத்துள்ளது. அதில் குறிப்பாக தென்னாப்பிரிக்க ஜனாதிபதி சிரில் ரமபோசா (Cyril Ramaphosa) பல்வேறு வேட்டைக்காரர்களுக்கு அரிய உயிரினங்களை விற்பனை செய்வதன் மூலம் பெரும் தொகையை எடுத்துள்ளார் என குற்றம் சாட்டியிருந்தது. இனப்பெருக்கம் செய்யும் திட்டத்தின் உறுப்பினர்களில் ரமபோசாவும் ஒருவர் என்பதையும் இந்த புத்தகம் வெளிப்படுத்தியது. மேலும், சுமார் 800 வேட்டைக்காரர்களுக்கு மேல் ஆப்பிரிக்கன் பிக் 5 (African Big 5) விருது வென்றிருக்கலாம் எனவும் அந்த புத்தகத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
புதிய வகை கொரோனா பரவும் நேரத்தில் விமானப் பயணமா? உங்களுக்கான சில டிப்ஸ்..
இந்த விருதை வெல்ல, வேட்டையாடும் ஒரு நபர் கருப்பு அல்லது வெள்ளை காண்டாமிருகம், சிறுத்தை, சிங்கம், எருமை மற்றும் ஒரு யானையை கொல்ல வேண்டும். உலகின் மிகவும் ஆபத்தான உயிரினங்களை சுட்டுக் கொல்ல நாம் எவ்வாறு அனுமதித்தோம் என்பதைப் பார்த்து நம் வருங்கால சந்ததியினர் ஆச்சரியப்படுவார்கள் என்று கோன்கால்வ்ஸ் தனது புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார். மேலும், அவர் தனது புத்தகத்தில் சுட்டிக்காட்டியதாவது, ட்ராபி ஹண்டிங் என்பது ஒரு சில இரத்தவெறி கொண்ட நபர்களைப் பற்றியது அல்ல. ஆனால் இது ஒரு பாரிய உலகளாவிய தொழிற்துறையைப் பற்றியது.
இது அசாதாரண சக்தியை வளர்த்து, அரசாங்கங்களை கையாளுகிறது என்று குறிப்பிட்டுள்ளார். கோன்கால்வ்ஸ், ட்ராபி ஹண்டிங்கை தடை செய்வதற்கான பிரச்சாரத்தின் நிறுவனர் மற்றும் ஒரு எழுத்தாளர் ஆவார். பிராண்ட் ட்ராபி ஹண்டிங் ஒரு "செயற்கை தேர்வு" எனவும், அது யானைகள் போன்ற பெரிய விலங்குகளை குறிவைக்கிறது. அதே நேரத்தில் பலவீனமான மற்றும் சிறிய விலங்குகளை விட்டுச்செல்கிறது எனவும் குறிப்பிட்டுள்ளார்.
ஹெலிகாப்டரில் இருந்து காட்டு பன்றிகளின் கும்பல்களுக்கு எதிராக துப்பாக்கிச் சூடு நடத்த வேட்டைக்காரர்களுக்கு வாய்ப்பளிக்கும் "ஹோக்போகாலிப்ஸ் நவ்" (Hogpocalypse Now) என அழைக்கப்படும் புதிய விமான வேட்டை பற்றிய தகவல்களும் அவரது புத்தகத்தில் இடம்பெற்றுள்ளது. டெக்சாஸை தளமாகக் கொண்ட ஹெலிகாப்டர் பிக் ஹண்டிங் என்ற நிறுவனத்தின் வலைத்தளம் டெக்சாஸ் மாநிலத்தில் இந்த வேட்டையாடும் அனுபவத்தை வழங்குகிறது. ட்ராபி ஹண்டிங்கை ஊக்குவிக்கும் ஹோக்போகாலிப்ஸ் நவ் போன்ற வலைத்தளங்கள் இருந்தபோதிலும், ட்ராபி ஹண்டிங்கை தடை செய்வதற்கான கோன்கால்வ்ஸின் பிரச்சாரம் லியோனார்டோ டிகாப்ரியோ மற்றும் ஜோனா லும்லி உள்ளிட்ட பிரபலங்களின் ஆதரவைக் பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Deer, Deforestation, Wild Animal