ஹோம் /நியூஸ் /லைஃப்ஸ்டைல் /

இந்தியா டூ மியான்மார்... ஒரு சிறந்த சாலை பயண ட்ரிப் ஐடியா இதோ !

இந்தியா டூ மியான்மார்... ஒரு சிறந்த சாலை பயண ட்ரிப் ஐடியா இதோ !

மியான்மர்

மியான்மர்

மே 11, 2018 அன்று இரு நாடுகளுக்கும் இடையே இந்தோ-மியான்மர் எல்லைக் கடக்கும் ஒப்பந்தம் கையெழுத்தானது. அதன் அடிப்படையில் இந்தியாவிலிருந்து மியான்மருக்கு சாலை வழியாகப் பயணம் செய்வது எளிதானதே.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Chennai, India

நீண்ட தூரம் இருசக்கர வாகனத்தில் சாலைப் பயணம் செய்ய வேண்டும் என்று ஆசைப்படுகிறீர்களா? நாட்டுக்குள்ளேயே  போவதை விட நாடு விட்டு நாடு சாலை வழியாக போகும் ஒரு ட்ரிப் ஐடியா சொல்லடிறோம் கேளுங்கள்….

நாடு விட்டு நாடு சாலை வழியாக ட்ரிப் போகலாமா என்று ஆச்சரியப்படுகிறீர்களா? நமது அண்டை நாடான மியான்மருக்கு சாலைப் பயணத்தை மேற்கொள்ள வாய்ப்புகள் உள்ளது. மே 11, 2018 அன்று இரு நாடுகளுக்கும் இடையே இந்தோ-மியான்மர் எல்லைக் கடக்கும் ஒப்பந்தம் கையெழுத்தானது. அதன் அடிப்படையில் இந்தியாவிலிருந்து மியான்மருக்கு சாலை வழியாகப் பயணம் செய்வது எளிதானதே.

மிசோரம், அருணாச்சலப் பிரதேசம், மணிப்பூர் மற்றும் நாகாலாந்து ஆகிய நான்கு இந்திய மாநிலங்களுடன் மியான்மர் எல்லை அமைந்துள்ளது. ஒப்பந்தத்தின்படி, இரண்டு நாடுகளுக்கு இடையே இரண்டு சர்வதேச நுழைவு-வெளியேறும் சோதனைச் சாவடிகள் உள்ளன.

இதையும் படிங்க: சென்னை அருகே இத்தனை அழகான தீவுகள் இருக்கா... இது தெரியாம போச்சே...!

ஒன்று மணிப்பூரில் உள்ள மோரே மற்றும் தாமு என்ற இரட்டை நகரங்களில் அமைந்துள்ளது. மற்றொன்று மிசோரமில் உள்ள சவ்காவ்தார், ரிஹ்காவ்தார் இடங்களில் உள்ளன. சாதாரண சுற்றுலாப் பயணிகள் விசாவுடன் செல்லுபடியாகும் பாஸ்போர்ட் வைத்திருந்தால் போதுமானது.

எந்த வழி சிறந்தது?

இந்தியாவில் இருந்து மியான்மாருக்கு குறைந்த நேரத்தில் செல்ல விரும்பினால் மணிப்பூரில் உள்ள நுழைவிடத்தை நீங்கள் தேர்வு செய்ய வேண்டும். அது உங்கள் நேரத்தை பெரிதும் மிச்சப்படுத்தும். இம்பால் விமான நிலையம் (மணிப்பூர்) மற்றும் மோரே எல்லைக்கு இடையே பயணிக்க சுமார் 3.5 மணிநேரம் மட்டுமே ஆகும். அதே சமயம் மிசோரமில் உள்ள நுழைவு வழியாக பயணித்தால் சுமார் 10 மணிநேரம் ஆகும். எல்லையில் இருந்து 242 கிமீ தொலைவில் உள்ள லெங்புய் விமான நிலையம் உள்ளது.

மியான்மருக்கு உங்கள் சொந்த காரில் செல்ல முடியுமா?

ஆம், அது முற்றிலும் சாத்தியம். இருப்பினும், இதற்காக, நீங்கள் கார்னெட் டி பாஸ்(Carnet De Pass) மற்றும் சர்வதேச ஓட்டுநர் உரிமம் (IDP) பெற வேண்டும். இதை பிராந்திய போக்குவரத்து ஆணைய அலுவலகம் மூலம் விண்ணப்பித்து பெற்றுக்கொள்ளலாம். கார்னெட்டைப் பொறுத்தவரை, நீங்கள் குறைந்தபட்ச பாதுகாப்பு வைப்புத் தொகையைச் செலுத்த வேண்டும்.

மியான்மர் விசா பெறுவது எப்படி?

மியான்மர் பயணிகள் விசா பெறுவது அவ்வளவு சிரமமான காரியம் ஒன்றும் இல்லை. இன்றைய காலகட்டத்தில் நீங்கள் விசா பெற நீங்கள் தூதரகத்திற்குக் கூட செல்ல வேண்டியதில்லை. ஒரு மின்னணு விசா விண்ணப்பம் போதுமானது. மியான்மார் விசாவிற்கு கட்டாமணமாக 4070 ரூபாய் மட்டுமே வசூலிக்கப்படும்.அதன் பின்னர் பறக்கும் ராசாளிகளாக வண்டியை கிளப்பிக்கொண்டு போவது தான்.

இதையும் படிங்க:நேபாளுக்கு போக ஆசை இருக்கா... IRCTC-ன் அற்புதமான பேக்கேஜ் இதோ!

சென்னையில் இருந்து NH 16 ஐ நூல் பிடித்து கிளம்பினால் கொல்கத்தா வரை சென்று விடலாம். அதன் பின்னர் இந்தியாவின் கிழக்கு - மேற்கு தேசிய நெடுஞ்சாலையான NH 27 இல் திரும்பினால் அஸ்ஸாமின் போர்காட் வரை செல்லலாம்.

அங்கிருந்து தென்கிழக்கு வழியாக NH 2, NH 102 வழியாக சுமார் 3257 கிமீ சென்றால் எல்லையை அடைவோம். 3 நாட்கள் பயணிக்கும் இந்த பயணம் நிச்சயம் ஒரு புது அனுபவத்தை கொடுக்கும். வாழ்க்கைல ஒரு முறையாவது மிஸ் பண்ணிடாம மியான்மார் போயிட்டு வாங்க மக்களே.

Published by:Ilakkiya GP
First published:

Tags: Myanmar, Travel, Travel Guide, Trip