மூன்று நாட்கள் பயணமாக ’கோவா’ செல்வோர் கவனத்திற்கு..!

முதல் முறை செல்வோர் எப்படியெல்லாம் கோவா பயணத்தை கொண்டாடலாம் என்று யோசனை வழங்குகிறது இந்தக் கட்டுரை.

மூன்று நாட்கள் பயணமாக ’கோவா’ செல்வோர் கவனத்திற்கு..!
கோவா பயணம்
  • News18
  • Last Updated: October 9, 2019, 10:43 PM IST
  • Share this:
இளைஞர்களுக்கான கொண்டாட்ட இடம் என்றால் அந்த லிஸ்டில்  கோவா இடம்பெற்றிருக்கும் . குறைந்தது இரண்டு நாள் பயணம் என்றாலும் சென்று ஒரு கை பார்த்துவிடுவோம் என்று திட்டங்களே இல்லாமல் பலரும் கோவாவிற்குப் பறந்து விடுவார்கள். பல முறை சென்றவர்கள் என்றால் பிரச்னை இல்லை. முதல் முறை செல்வோர் நிலை..? அவர்களுக்கு உதவுவதே இந்தக் கட்டுரை.

ஏன் கோவா செல்ல வேண்டும் ?

இளைஞர்கள் கோவாவின் கடற்கரை அழகை ரசிப்பது இரண்டாம் கட்ட ஆசை என்றால் முதல் ஆசை இரவு நடக்கும் கேளிக்கை விருந்து நிகழ்ச்சிகள்தான். அதற்கு பெயர்போன கோவாவிற்கு  ஆயிரக்கணக்கான சுற்றுலாவாசிகள் வந்து செல்கிறார்கள். அதோடு கடல்சார் உணவுகள், விளையாட்டு திடல்கள் என கோவாவின் சூழல் வெளிநாட்டிற்கு சென்று வந்த அனுபவத்தை அளிக்கிறது.


சரி மூன்று நாளை கோவாவில் எப்படிக் கழிப்பது?

முதல் நாள் : கோவா செல்வதற்கு முன்னரே அங்கு எந்த ஹோட்டல் சிறந்தது, சிறந்த உணவு கிடைக்கும் ரெஸ்டாரண்ட் எது என்பன போன்ற விஷயங்களை கூகுள் செய்து தெரிந்துகொள்ளுங்கள். பின் ஆன்லைனில் முடிந்தால் முன்னரே விடுதியின் முன் பதிவு செய்துவிடுங்கள். இதனால் விடுதி தேடி அலைவதிலேயே நேரம் கடந்துவிடும். நேராக விடுதி சென்று குளித்து ஃப்ரெஷாகக் கிளம்புங்கள். அருகில் பைக் அல்லது கார் வாடகைக்கு எங்கு கிடைக்கும் என தெரிந்துகொண்டு வாடகைக்கு எடுத்துக்கொள்ளுங்கள். பைக்கை எடுத்துக்கொண்டு சிறந்த ரெஸ்டாரண்டை கண்டுபிடித்து கடல்சார் உணவுகளை ஒரு கட்டு கட்டுங்கள்.

அடுத்ததாக அங்கிருந்து நகர்ந்து பீச்சை நோக்கி படையெடுங்கள். நிறைய 20 க்கு மேற்பட்டவர்கள் மட்டுமே செல்லக் கூடிய பீச்சுகள் உள்ளன. பீச்சில் கேளிக்கைகளுக்கு பஞ்சமில்லாத காயாகிங், சர்ஃபிங், ஜெட் ஸ்கிங், ஸ்கூபா டைவிங், பாராசெய்லிங், ஸ்னோர்கெலிங் போன்ற நீர் விளையாட்டுகள் உள்ளன. அவற்றை நீங்களும் முயற்சித்து குதூகலிக்கலாம். அப்படியே அங்கு உணவுகள், குளிர்பானங்கள் கிடைத்தால் அதையும் உண்டு அனுபவியுங்கள்.

இவற்றை முடிக்க எப்படியும் மாலை ஆகிவிடும். அப்படியே வீடு சென்று உடையை மாற்றி இரவு பார்ட்டிக்கு தயாராகிவிடுங்கள். பார்ட்டிக்கு ஏற்ற ஆடை , அணிகலன்கள் அணிந்து கிளம்புங்கள். பின் எங்கு சிறந்த பார்ட்டி நிகழ்ச்சிகள் உள்ளன என்பதை தெரிந்துகொண்டு அங்கு கிளம்பி இரவை இன்பமாகக் கழியுங்கள்.இரண்டாவது நாள் : இரண்டாவது நாளும் குளித்து காலை உணவை முடித்துவிட்டு பைக்கை எடுத்துக்கொள்ளுங்கள். கோவாவில் காணக் கூடிய முக்கிய இடம் பனாஜி. இதை பழைய கோவா என்பார்கள். இங்கு நிறைய வரலாற்று சிற்பங்கள், கட்டிடங்கள் இருக்கின்றன அவற்றை ரசித்து சில புகைப்பட்ங்களை எடுத்துக்கொள்ளலாம். அடுத்ததாக மாலை கோவாவின் வடப் பகுதியில் சூரியன் மறையும் காட்சி மிகப் பிரபலம். அங்கு அரம்போல், மொர்ஜிம் மற்றும் அஷ்வெம் ஆகிய பீச்சுகள் மிகப் பிரபலம் அங்கு சென்றால் நிறைய கிளப் விளையாட்டுகள், நிகழ்ச்சிகள் நடைபெறும் அவற்றை ரசித்து கொண்டடலாம். அன்றைய இரவு சிறப்பாக முடியும்.மூன்றாவது நாள் : மூன்றாவது நாளும் காலை உணவை முடித்துவிட்டு கிளம்புங்கள். ஷாப்பிங் செய்யும் எண்ணம் இருந்தால் அருகில் இருக்கும் இடங்கள் கண்டறிந்து பிடித்த பொருட்களை வாங்குங்கள். ஆடை, அணிகலன்களின் விலைகளும் கோவாவில் குறைவுதான். ஷாப்பிங் முடித்துவிட்டு கோவாவின் புகழ்பெற்ற காசினோக்கள் பல உள்ளன.காசினோக்களிலும் ஷாப்பிங் செய்யலாம், உணவு அருந்தலாம். அப்படி ஷாப்பிங் வசதி கொண்ட ஐந்து ஸ்டார் கொண்ட காசினோ சென்றால் கோவாவின் இறுதி நாளை சிறப்பாகக் கழிக்கலாம். டைஸ் , பிளாக்ஜாக் விளையாட்டுகளில் பந்தயம் கட்டி பணமும் அள்ளலாம். கடைசி நாள் மறக்க முடியாத நாளாக அமையும்.
லைஃப்ஸ்டைல் தொடர்பான தகவல்களை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க.  லைஃப்ஸ்டைல் செய்திகள், சுவாரஸ்யமான வீடியோக்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.First published: October 9, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்