Home /News /lifestyle /

பயணிகள் கவனத்திற்கு.. சரணாலயத்தை சுற்றிப் பார்க்க ஜீப் சவாரி, யானை சவாரி கேட்டிருப்பீர்கள்.. ஹாட் ஏர் பலூன் சவாரி தெரியுமா?

பயணிகள் கவனத்திற்கு.. சரணாலயத்தை சுற்றிப் பார்க்க ஜீப் சவாரி, யானை சவாரி கேட்டிருப்பீர்கள்.. ஹாட் ஏர் பலூன் சவாரி தெரியுமா?

ஹாட் ஏர் பலூன்

ஹாட் ஏர் பலூன்

105 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் பரந்து விரிந்துள்ள பாந்தவ்கர் தேசியப் பூங்கா பெரிய பல்லுயிர் வளத்தை உயரத்தில் இருந்து காணலாம்

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Madhya Pradesh |
இதுவரை ஒரு சரணாலயத்திற்கு சென்றால் அதை சுற்றிப்பார்க்க ஜீப் சவாரி, படகு சவாரி, யானை சவாரி என்று வசதிகள் இருந்து பார்த்திருப்போம் . அது சரணாலயத்தின் குறிப்பிட்ட சில இடங்களை மட்டுமே காணமுடியும். அதை தாண்டி உள்ள பகுதிகளின் அழகு மனிதர்களுக்கு தெரியாமல் இருக்கும்.

ஆனால் இந்தியாவின் ஒரு பகுதியில் சரணாலயம், மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளை வானில் பறந்து கொண்டு ரசிக்கும் வசதி உள்ளது என்று உங்களுக்குத் தெரியுமா?

இந்தியாவின் முதல் ஹாட் ஏர் பலூன் வனவிலங்கு சஃபாரி 2021 ஆம் ஆண்டு மத்திய பிரதேசத்தின் புகழ்பெற்ற பாந்தவ்கர் புலிகள் சரணாலயத்தில் உருவாக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் சிறுத்தைகள், புலிகள், இந்திய சோம்பல் கரடிகள் என பல வன விலங்குகளை அதன் இயல்போடு உயரத்தில் இருந்து பார்க்கலாம்.

சாகசத்தோடு இயற்கையை ரசிக்க விரும்புபவராக நீங்கள் இருந்தால் இந்த பயணத்தை மிஸ் பண்ணிடாதிங்க!

பாந்தவ்கர் புலிகள் சரணாலய  ஹாட் ஏர் பலூன் சுற்றுலா...

பாந்தவ்கர் புலிகள் சரணாலய ரிசர்வ் மற்றும் பஃபர் மண்டலத்தில் முதல் சூடான காற்று பலூன் சுற்றுலா முயற்சி இப்பகுதியின் சுற்றுலாவை மேம்படுத்துவதோடு அதிக சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. ​​

வெள்ளை புலிக்கு பெயர் பெற்ற மத்திய பிரதேசத்தின் ரேவா மாவட்டத்தில் பார்க்கவேண்டிய இடங்கள்.

ஆப்பிரிக்க காடுகளைப் போலவே, இந்தியாவில் உள்ள சுற்றுலாப் பயணிகளும் அத்தகைய சவாரி அனுபவம் தரும் வகையில் இது உருவாக்கப்பட்டுள்ளது. கன்ஹா, பென்ச் மற்றும் பன்னா புலிகள் காப்பகங்களிலும் இதுபோன்ற சேவையை அறிமுகப்படுத்த அரசு திட்டமிட்டுள்ளது.

ஹாட் ஏர் பலூன் சேவை...

பலூன் சஃபாரி அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட வணிக ஹாட் ஏர் பலூன் ஆபரேட்டரான SkyWaltz Balloon Safari ஆல் இயக்கப்படும். நாட்டின் முதல் முழு உரிமம் பெற்ற பலூன் ஆபரேட்டர்கள் இதுவே ஆகும். ஏற்கனவே ராஜஸ்தான், டெல்லி NCR, மகாராஷ்டிராவில் செயல்படும் ஜெய்ப்பூரை தளமாகக் கொண்ட ஸ்கை வால்ட்ஸ் இந்த சேவையை இயக்குகிறது.

விலங்குகளின் பாதுகாப்பு  மற்றும் பார்வையாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளதாக வனத்துறை கூறியுள்ளது. தரையிறங்குதல் மற்றும் புறப்படுதல் ஆகியவை தாங்கல் மண்டலத்திற்குள் மட்டுமே அனுமதிக்கப்படும்.

ஒன்பது நபர்கள் கொள்ளளவு கொண்ட ஒவ்வொரு பலூனும் தாங்கல் மண்டலத்திலிருந்து புறப்பட்டு தேசிய இருப்புப் பகுதியின் மையப் பகுதிக்கு மேல் பறந்து, மண்டலத்திற்கு வெளியே தரை இறக்கப்படும்.

பாந்தவ்கரின் மையப் பகுதி அதன் அடர்ந்த காடுகளைத் தவிர ஒரு பழமையான கோயிலையும் பலூனில் இருந்து பார்க்கக்கூடிய கோட்டையையும் கொண்டுள்ளது.

பயணிகள் கவனத்திற்கு.. வாழ்நாளில் ஒரு முறையேனும் பார்க்கவேண்டிய இந்தியாவில் உள்ள தீவுகள் !

கட்டணம்:
ஹாட் ஏர் பலூன் சவாரி 45 நிமிடங்கள் முதல் ஒரு மணி நேரம் வரை நீடிக்கும். இந்த ஹாட் ஏர் பலூன் சேவைக்கு பெரியவர்களுக்கு ரூ.15,000+வரிகள் மற்றும் 5 முதல் 12 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு ரூ.9,000 என கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

1 முதல் 4 நபர்களை ஏற்றிச் செல்லும் பலூன்களுக்கு ரூ. 75,000 கட்டணமாகும். 5 முதல் 8 நபர்களை ஏற்றிச் செல்லும் பலூன்களுக்கு ரூ. 1 லட்சம் + வரிகளுடன் கூடிய பிரத்யேக பட்டய பலூன் சஃபாரியை முன்பதிவு செய்யலாம்.

சாதகமற்ற வானிலை காரணமாக விமானம் ரத்து செய்யப்பட்டால் முழுத் தொகையும் திரும்பப் பெறப்படும் என்று அதன் அதிகாரபூர்வ இணையதளம் கூறுகிறது.

முன்பதிவு:

சவாரிக்கான முன்பதிவுகள் Sky Waltz இன் www.skywaltz.com இணையதளத்தில் செய்து கொள்ளலாம். முன்பதிவு செய்யும் சுற்றுலாப் பயணிகள் ஹோட்டலில் இருந்து அழைத்து வரப்பட்டு, சஃபாரிக்குப் பின் மீண்டும் இறக்கிவிடப்படுவார்கள்.
Published by:Ilakkiya GP
First published:

Tags: Madhya pradesh, Tourism, Travel Guide, Trip

அடுத்த செய்தி