Home /News /lifestyle /

புதுமணத் தம்பதிகளே ஹனிமூன் கொண்டாட இந்தியாவில் சிறந்த இடங்கள் எது தெரியுமா?

புதுமணத் தம்பதிகளே ஹனிமூன் கொண்டாட இந்தியாவில் சிறந்த இடங்கள் எது தெரியுமா?

இலட்சத்தீவுகள்

இலட்சத்தீவுகள்

ஹனிமூன் வாழ்கையை இருவரும் தனியாக கையாளத் தொடக்கமாக அமைகிறது

  • News18
  • Last Updated :
ஹனிமூன் என்பது தம்பதிகளுக்குளான காதல் பரிமாற்றம் மட்டுமல்லாமல். அவர்களுக்குள் சிறந்த புரிதலை ஏற்படுத்துகிறது. வாழ்கையை இருவரும் தனியாக கையாளத் தொடக்கமாக அமைகிறது. அந்தத் தொடக்கம் எந்த ஒரு இடையூருகளும் இன்றி இருவருக்கும் பிடித்தவாறு அந்தப் பயணம் அமைந்தால் அதைவிடச் சிறப்பு வேறெதுவும் இருக்க முடியாது.  குறிப்பாக பிப்ரவரி மாதத்தில் மட்டும் இந்தியாவின்  சில மாநிலங்களில் பனி சூழ கண்கவர் திருவிழாக்கள் கொண்டாட்டங்கள்,  நடைபெறும். அவற்றைக் காண்பதும் இளம் தம்பதிகளுக்கு சிறந்த நினைவாக அமையும்.  அவ்வாறு,  சிறந்த இடங்கள் எவை என்பதைக் கீழேக் காணலாம். 

கோவா

கோவா


கோவா, கடல் படர்ந்த சொர்க்கம் எனலாம் . அந்த அளவிற்கு கோவாவின் கடல் நம்மை அதன் அழகியலுக்குள் இழுத்துச் செல்லும்.  கண்ணாடித் துகள்களைக் கொண்டி வைத்ததைப் போல் மின்னும் கடல் பரப்பும், அதன் தெளிவும் கண்களை கூச வைத்துவிடும். அதேபோல் பசுமை நிறைந்த மலைத் தொடர்கள், ஆங்காங்கே தென்படும் அருவிகள் என மலைக்க வைக்கும் சுவாரஸ்யங்கள் காத்துக் கொண்டிருக்கும் இடம் கோவா. இளம் தம்பதிகள் தங்கள் தேன் நிலவைக் கொண்டாட  இதைவிடச் சிறந்த இடம் வேறெங்கு வேண்டும்! தம்பதிகள் தங்களுக்குள் காதலைப் பகிர்ந்து கொண்டு , அந்யோன்யமான வாழ்கைக்குள் தொடர சிறந்த நினைவுகளுக்கு விதையாகும்.  இதைத் தவிர  பாராக்ளைடிங், ஜெட் ஸ்கீ , டால்ஃபின், பீச் கேண்டில் லைட் டின்னர் என கண்டு ரசிக்க ஏராளம் கோவாவில் காணலாம்.

ஜெய்சல்மெர்

ஜெய்சல்மார்


பழமை மற்றும் வரலாற்றை விரும்பும் ஜோடி ஜெய்சல்மெர் செல்வது சிறந்த இடமாகும். இது ராஜஸ்தானில் அமைந்துள்ள பாலைவன  பாரம்பரியம் நிறைந்தது. ஒட்டகச் சவாரி பாலவன மணல் பரப்பின் அழகியல் வரலாற்றுத் தடங்கள் என ஆச்சரியத்திற்கு உள்ளாக்கும் அனுபவங்களைப் பெறலாம். குறிப்பாக இங்கு பிப்ரவரியில் நடக்கும் சடங்கு திருவிழாக்கள் நம்மை அதன் கொண்டாட்டத்திற்கு இட்டுச் செல்லும். அதேபோல் பாலைவன மணல் மலைகளுக்கு இடையே சூரியன் மறையும் காட்சி காணக் கிடைக்காத அற்புத அனுபவம்.

கோவளம்

கோவளம்


காதல் தம்பதிகள் ஹனிமூன் கொண்டாட இந்தியாவில் இதைவிட ரொமாண்டிக்கான இடம் வேறெதுவும் இருக்க முடியாது. அந்த அளவிற்கு உங்களுக்குளான அன்யோன்யத்தை வளர்க்க சிறந்த சூழல் கோவளத்தில் கிடைக்கப் பெறும். குறிப்பாக பிப்ரவரி மாதத்தில் பனிக்காலம் என்பதால் மூடு பனி உங்களை உறையச் செய்துவிடும். நாவூற வைக்கும் கேரள உணவு, நீர் விளையாட்டுகள், படகு சவாரி என உங்களை உற்சாகத்தில் குதூகளிக்கச் செய்யும் விஷயங்கள் ஏராளம் நிறைந்திருக்கும். குறிப்பாக அழகு கொஞ்சும் சமுத்ரா பீச், ஹவா பீச் என மகிழ்ச்சிக்குப் பஞ்சம் இருக்காது.

இலட்சத் தீவுகள்

இலட்சத்தீவுகள்


இந்தியவின் எழில் கொஞ்சும் சுற்றுளாத் தளங்களில் தவிர்க்க முடியாத மிக முக்கிய இடம் இலட்சத் தீவுகள். கடல் ஆளும் தீவு தம்பதிகளுக்கு ஏதுவான சூழல் என ரொமாஸுக்கு பஞ்சமில்லாமல் ஹனிமூனைக் கழிக்கலாம். குறிப்பாக பிப்ரவரி மாதத்தில் அரபிக் கடலின் ரம்மியத்தில் மூழ்கி முத்தெடுக்கலாம். பசுமையான தோற்றம், கடல் மணலில் கால்தடம் என உங்கள் வாழ்கையில் நீங்கா தடம் பதிக்கும் நினைவுகளை இலட்சத் தீவில் பெறலாம்.

கஜுராஹோ

கஜுராஹோ


உங்கள் மனைவி கலைகளை விரும்புபவர் என்றால் கஜுராஹோ அழைத்துச் செல்லுங்கள். பிறகு நீங்கள் கேட்காமலே முத்த மழைக் கொட்டும். ஆம், இங்கு கலைச் சிற்பங்களுக்கு பெயர்போன இடம். குறிப்பாக சங்க இலக்கிய கலைகளை சிலைகளாகக் கானலாம். காதலை கற்சிலையில் வடிவமைத்திருக்கும் சிறப்பு இங்கு மட்டுமே சாத்தியம். இங்கு பிப்ரவரி மாதத்தில் கதக், பரதநாட்டியம்,குச்சுபுடி,ஒடிசி, கதகளி என நடன நிகழ்ச்சிகள் ஏராளம் நடக்கும். அவர்களின் கலாச்சாரமே மிகப் பிரமாண்டமாக இருக்கும். அவறைக் காண்பதற்கே நேரம் பத்தாது. குறிப்பு சிற்பங்களை ரசிப்பதை மட்டுமே ரசிக்காமல்  உங்கள் துணையையும் ரசித்து வர்ணிக்க மறந்து விடாதீர்கள். இதுவும் உங்கள் ஹனிமூனிற்கு அவசியம்.

பவானித் தீவு

பவானித்தீவு


ஆந்திரமாநிலம் விஜயவாடாவில் அமைந்துள்ள இந்தத் தீவு இந்தியாவின் மிகப் பெரும் தீவுகளில் இதுவும் ஒன்று. கிருஷ்ணா ஆற்றில் இடையே அமைந்துள்ளது. இங்கு ஹனிமூன் தம்பதிகளை மகிழ்ச்சி படுத்தும் பல விஷயங்கள் இங்கு இருக்கின்றன. ஜெட் ஸ்கீ, சோலார் போட்டிங், ரிங்கோ ரைடிங்,பனானா போட் ரைடிங்,காயாகிங்,பாராசைலிங் என பல பொழுதுபோக்கு அம்சங்கள் நிறைந்திருக்கின்றன. காலை வீட்டிலிருந்து கிளம்பினால் மாலைவரை உங்களை சளைப்படையச் செய்யாமல் இருக்க பல பொழுதுபோக்கு அம்சங்கள் உள்ளன.

ரந்தம்போர்

ரந்தம்போர்


இயற்கை, காடு, விலங்குகள் என அட்வென்சர் விரும்பிகளுக்கு ஏற்ற இடம் ரந்தம்போர். ரஜஸ்தானின் மிக முக்கிய சுற்றுளாத் தளம். புலிகளின் சரணலையம் எனலாம். குறிப்பாக வட இந்தியாவின் நான்காவது தேசியப் பூங்கா இங்கு தான் அமைந்திருக்கிறது. பறவைகள் சத்தம், இயற்கை காற்று என தம்பதிகள் தங்கள் காதலை வெளிப்படுத்த அற்புதமான இடம். ரந்தம்போர் கோட்டையில் மேல்பகுதியிலிருந்து வனத்தைக் காண உங்களுக்கு இரண்டு கண்கள் பத்தாது. அத்தனை அழகாக இருக்கும். அந்த சமயத்தில் பட்டென உங்கள் துனையிடம் காதலைச் சொல்லி முத்தமிடுங்கள்.  அதவிட உங்கள் துணைக்கு இன்பம் வேறென்ன வேண்டும்.

Also See..

Published by:Sivaranjani E
First published:

Tags: February, Honeymoon, Lifestyle

அடுத்த செய்தி