நேபாளம் - தெற்காசியாவின் மிகவும் அழகான நாடுகளில் ஒன்றாகும். இதனாலேயே நேபாளம் சுற்றுலா பயணிகளிடையே மற்றும் சாகச பிரியர்களிடையே மிகவும் பிரபலம். மிகவும் பிரபலம் என்றாலே அதிகம் செலவாகும் என்பதை மறக்க வேண்டாம். நேபாளத்தின் தலைநகர் காத்மாண்டு - உலகின் மிக விலையுயர்ந்த இடங்களில் ஒன்றாகும். ஆனால் சில புத்திசாலித்தனமான வழிகளை பின்பற்றும் பட்சத்தில் பட்ஜெட் டிராவலர்களால் கூட குறைந்த செலவில் நேபாளத்தை சுற்றி பார்க்க முடியும்!
நேபாளத்தை சென்றடைவது எப்படி?
நேபாளத்தில் உள்ள ஒரே 'ஆக்டிவ்' விமான நிலையமான காத்மாண்டுவுக்கு விமானம் வழியாக செல்வதற்குப் பதிலாக, சாலைப் பயணத்தை மேற்கொள்ளுங்கள். தில்லி மற்றும் அதன் அருகிலுள்ள இடங்களிலிருந்து பைரவாவுக்கு அருகிலுள்ள சுனௌலி க்ராஸிங் பார்டர், பாட்னா வழியாக ரக்சௌல் பார்டர், காங்டாக் வழியாக பானிடாங்கி மற்றும் தில்லி-உத்தரகாண்ட் வழியாக பன்பாசா வழியாக நீங்கள் நேபாளத்திற்குள் செல்லலாம். நேபாளத்தின் பல்வேறு இடங்களுக்கு செல்ல தினசரி நேரடி இரவு நேர பேருந்துகள் உள்ளன.
எங்கே தங்கலாம்?
நீங்கள் காத்மாண்டு அல்லது அருகிலுள்ள பிற நகரங்களை அடைந்தவுடன், ஒரு தங்குமிடத்தைத் தேட வேண்டும். நீங்கள் ஒரு நிலையான பட்ஜெட்டில் பயணம் செய்கிறீர்கள் கவலை வேண்டாம்! இங்கே நிறைய தங்கும் விடுதிகள், ஹோம்ஸ்டேகள் மற்றும் பட்ஜெட் ஹோட்டல்கள் உள்ளன.
also read : ரிஷிகேஷ் ரகசியங்கள்: எந்த சுற்றுலா வழிகாட்டியும் இதுவரை சொல்லாத குறிப்புகள்..!
நேபாளம் செல்ல எது உகந்த காலம்?
ஆஃப்-சீசன் எப்போதுமே நல்லது. ஆஃப்-சீசன் என்றால், குளிர்காலம் மற்றும் பருவமழை காலம் என்று அர்த்தம். இன்னும் குறிப்பாக, நேபாளத்திற்குச் செல்ல குளிர்காலமே சிறந்த நேரம்.
எங்கே, என்னெவெல்லாம் சாப்பிட வேண்டும்?
நேபாளத்தில் இருக்கும்போது, உள்ளூர்வாசி போல சாப்பிடுங்கள். உள்ளூர்வாசிகள் சாப்பிடும் இடத்தில் சாப்பிடுங்கள். ஆரோக்கியமான மற்றும் சுவையான நேபாளி தாலியை தவறவிட வேண்டாம். ஒரு இடத்தைப் பற்றியும், அதன் அழகிய கலாச்சாரத்தைப் பற்றியும் உணவின் மூலம் தெரிந்து கொள்ளலாம். சர்வதேச மெனுவைக் கொண்ட பெரும்பாலான உணவகங்களை விட உள்ளூர் உணவு மிகவும் மலிவானதாக இருக்கும்.
also read : சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் இந்தியாவின் டாப் 5 பாரம்பரிய இடங்கள் இவை தான்!
நேபாளத்திற்குள் பயணம் செய்வது எப்படி, என்னென்ன செய்ய வேண்டும்?
உள்ளூர் பேருந்துகளை பயன்படுத்தவும். இந்த பொதுப் பேருந்துகள் நேபாளத்தின் அனைத்துப் பகுதிகளையும் உள்ளடக்கியது மற்றும் மலிவானதும் கூட. லாங்டாங், அன்னபூர்ணா பகுதி மற்றும் எவரெஸ்ட் பேஸ் கேம்ப்பில் உள்ள எளிமையான மலையேற்றங்களில் ஒருவர் சுயாதீனமாக ட்ரெக்கிங் செய்ய முடியும். அதாவது நீங்கள் ஒரு வழிகாட்டியை நியமிக்க வேண்டியதில்லை, அதற்காக செலவு செய்ய வேண்டியதும் இல்லை.
இருந்தாலும் கூட உங்களுக்கு நன்றாக தெரிந்த இடமாக இருந்தாலும் கூட தன்னந்தனியாக ட்ரெக்கிங் செய்வது நல்லதல்ல. உங்களைப் போன்ற எண்ணம் கொண்ட பல பட்ஜெட் பயணிகளை நீங்கள் நேபாளத்தில் காணலாம்; அவர்களுடன் கூட்டு சேர்ந்து கொள்ளவும்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.