மன அழுத்தம் குறையும்... உறவுகள் மேம்படும்...! வெக்கேஷன் சென்று வந்தால் ஏற்படும் உடல் மாற்றங்கள்

தினசரி வாழ்க்கையில் இதுபோன்ற இடைவெளி புத்துணர்ச்சியான வாழ்க்கைக்கு வழிவகுக்கும்

Web Desk | news18
Updated: June 27, 2019, 3:01 PM IST
மன அழுத்தம் குறையும்... உறவுகள் மேம்படும்...! வெக்கேஷன் சென்று வந்தால் ஏற்படும் உடல் மாற்றங்கள்
பயணம்
Web Desk | news18
Updated: June 27, 2019, 3:01 PM IST
வெக்கேஷன் சென்று வருவதால் எந்த மாதிரியான மாற்றங்கள் ஏறடுகிறது என அமெரிக்க சைராகஸ் பல்கலைக்கழகம் ஆய்வு ஒன்றை நடத்தியது.

”கடந்த 12 மாதங்களில் அடிக்கடி வெக்கேஷன் சென்று வாந்தோரிடம் நடத்திய ஆய்வில் அவர்களுக்கு வளர்ச்சிதை மாற்ற அறிகுறிகள் தெரிந்து” என்று ஆராய்ச்சியாளர் பிரைஸ் ருஷ்கா கூறியுள்ளார்.

மேலும் அதில், தினசரி வாழ்க்கையில் இதுபோன்ற இடைவெளி புத்துணர்ச்சியான வாழ்க்கைக்கு வழிவகுக்கும் என்று குறிப்பிட்டுள்ளது. அதில் இன்னும் என்ன மாதிரியான மாற்றங்கள் உடல் அளவில் ஏற்படுகின்றன என்று பட்டியலிட்டுள்ளது.
மன அழுத்தம் குறையும் : வெக்கேஷன் சென்று வருவதால் குடும்பத்தால் மற்றும் அலுவலகத்தால் ஏற்படும் மன அழுத்தம் குறையும் என அமெரிக்கன் சைக்கலாஜிகல் அசோசியேஷன் மற்றும் கன்னடியன் ஸ்டடி நடத்திய ஆய்வுகளில் நிரூபிக்கப்பட்டுள்ளது.

நல்ல தூக்கம் : ஆன்சைட்டி ஸ்ட்ரெஸ் என மன ரீதியான அவஸ்தையால் தூக்கமும் பாதிக்கப்படுகிறது. வெக்கேஷனால் ஸ்ட்ரெஸ் குறையும்போது நல்ல தூக்கமும் வருகிறது.

Loading...

சுறுசுறுப்பு அதிகரிக்கிறது : தினசரி வேலைகளுக்கு நடுவே செல்லும் வெக்கேஷன் நல்ல புத்துணர்ச்சி உணர்வை உண்டாக்குவதால் தினசரி வேலையும் புதிதாகத் தோன்றுகிறது. இதனால் உற்சாகமாக வேலையைச் செய்யத் துவங்குவோம்.உறவுகள் மேம்படும் : தொடர் வேலையில் உறவுகளை கவனிக்கவும் நேரமில்லை. குறிப்பாக பெண்கள் அனுபவிக்கும் சுழலும் வேலைகளால் குடும்ப வாழ்க்கையில் சலிப்பு ஏற்படுகிறது. இதை சரிசெய்ய வெக்கேஷன் சிறந்த மருத்துவம் என்கிறது ஆய்வுகள்.

சுய வளர்ச்சி : வெக்கேஷன் என்னும் போது புது இடங்களுக்குச் செல்வது, புதிய மனிதர்களை சந்திப்பது ,புது கலாச்சாரங்களை தெரிந்துகொள்வது என வாழ்க்கையில் பல மாற்றங்கள் ஏற்படும். இது நம்மையே புதிதாக உணர வைக்கும்.
லைஃப்ஸ்டைல் தொடர்பான தகவல்களை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க.  லைஃப்ஸ்டைல் செய்திகள், சுவாரஸ்யமான வீடியோக்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.First published: June 27, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...