கர்நாடகம் என்றாலே கொண்டாட்டம் தான். ஒரு புறம் கடல், மலை, காவிரி, அரக்கு பள்ளத்தாக்கு, காஃபி தோட்டம், என்று பசுமை படரும். மறுபுறம் விஜயநகர பேரரசு, கலை சொட்டும் கோவில்கள், மண்டபங்கள், மாளிகைகள் என்று எங்கு பார்த்தாலும் கற்கள் காவியம் பேசும். பெங்களுருவில் , மங்களூரு, மைசூரு என்று நகர வாழ்க்கை என்று எங்கு காணினும் சுற்றுலாத்தலமாக திகழும்.
14-16 ஆம் நூற்றாண்டில் கர்நாடகத்தை ஆண்ட விஜயநகர பேரரசின் முக்கிய தலமாக அடையாளம் காணப்படுவது ஹம்பி. இன்றைய 50 ரூபாய் நோட்டில் நீங்கள் பார்க்கும் தேர் மண்டபம் கொண்டுள்ள ஹம்பி நகரமே கல்லால் செய்யப்பட்ட கலைக்கூடம் என்றே சொல்ல வேண்டும்.
யுனெஸ்கோ ஹம்பியை பாரம்பரிய தலமாக அறிவித்ததில் இருந்து உள்ளூர் மற்றும் வெளிநாட்டு பயணிகளின் எண்ணிக்கை என்பது அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. அதுவும் வெயில் குறைந்து குளிர்காலம் வந்ததும் ஹம்பியை நோக்கி படை எடுப்பவர்கள் எண்ணிக்கை என்பது அதிகரித்து வருகிறது.
ஜி 20 மாநாடு தலைமை பொறுப்பை ஏற்ற இந்தியா ஹம்பியில் தனது மாநாட்டின் ஒரு பகுதியை நடத்தி இந்த இடங்களை உலகறிய செய்ய உள்ளது.
இதையும் படிங்க: சுற்றுலாவை மேம்படுத்த வடகிழக்கு எல்லையில் சாகச பயணங்களை நடத்தும் இந்திய ராணுவம்..!
இந்நிலையில் புதிய ஆண்டின் தொடக்கத்தில் ஹம்பியில் ஒரு கலாச்சாரத் திருவிழா நடைபெற இருக்கிறது. மூன்று நாட்கள் நடைபெறும் ஹம்பி உத்சவத்தில் , ஹம்பியில் சில கலாச்சார நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளது. ஜனவரி 27 முதல் ஜனவரி 29, 2023 வரை இந்த உட்சவம் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
முதலில், ஜனவரி 7 மற்றும் 8 ஆகிய தேதிகளில் திருவிழா கொண்டாட முடிவு செய்யப்பட்டது, ஆனால் மாநில அரசு தேதியை (தற்காலிகமாக) ஜனவரி 27-29 என்று மாற்றியுள்ளது.
ஹம்பி உத்சவ் - காயத்ரி பீடம், விருபக்ஷேஸ்வரா கோவில் மற்றும் எடுரு பசவண்ணா கோவில் ஆகிய மூன்று இடங்களில் விழா நடைபெற உள்ளது. அதற்கான ஏற்பாடுகளை அதிகாரிகள் தொடங்கிவிட்டனர். அதோடு இங்குள்ள கோவில்கள் நினைவுச்சின்னங்களை மின் விளக்குகளால் ஒளிரவைக்கும் வேலைகள் நடைபெற்று வருகிறது.
ஹம்பி உட்சவதில் யானை ஊர்வலம், காத்தாடி திருவிழா மற்றும் மிக முக்கியமாக, சில முக்கிய மற்றும் புகழ்பெற்ற பாரம்பரிய பாடகர்கள் மற்றும் நடனக் கலைஞர்களின் நிகழ்ச்சிகள் இருக்கும். விஜயநகர பேரரசர்களின் வரலாற்றை பறைசாற்றும் நிகழ்வுகளும் இங்கு நடைபெறும்.
ஒவ்வொரு வருடமும் வெகு விமரிசையாக கொண்டாடப்படும் இந்தத் திருவிழா வரும் வருடமும் உலகின் மக்களை மகிழ்விக்க காத்திருப்பதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
ஹம்பி உட்சவத்திற்கு செல்லும் பயணிகள் இங்குள்ள விருபாக்ஷர் கோவில், நூறுகால் மண்டபம், ஹேமகூட்டா மலைக்கோவில், ஹஸாலா ராமர் கோவில், விட்டலர் கோவில், பாதாள சிவலிங்க கோவில் , ராணியில் குளியல் குளம் , யானை தொழுவம் என்று எதையும் மிஸ் பண்ணாமல் பார்த்து வாருங்கள்.
இதையும் படிங்க: இந்தியாவில் மாற்றுத்திறனாளிகளுக்கான முதல் ஊதாத் திருவிழா நடைபெற இருக்கிறது.. எங்கு தெரியுமா?
இந்த நகரமே வட இந்திய - தென்னிந்திய கட்டிடக்கலைகள் கலந்து உருவாக்கப்பட்டதாகும். அதோடு இங்குள்ள நினைவு சின்னங்கள் இந்து, சமணம், இஸ்லாம் என்று அனைத்து மதங்களையும் குறிக்கும் படைப்புகளைக் கொண்டுள்ளது.
இந்த நகரத்தில் கட்டிடங்கள் பக்கா கிரானைட் கற்களால் ஆனது. அந்த கற்களை உடைக்க இன்றைய காலம் போல் அப்போது இயந்திரங்கள் கிடையாது. அதை உடைக்க கல்லில் சிறு துளைகள் போடு அதில் மரத்துண்டுகள் வைத்து தண்ணீர் ஊற்றி விடுவார்களாம். கணம் இறங்கி கல் விரிசல் விட்டு பிளக்குமாம். அப்படி வெட்டி அடுக்கிய கட்டிடங்களை பார்க்காமல் இருக்கலாமாநூறுகால் மண்டபத்தில் சில இசைத்தூண்களும் உண்டு. அதைத் தட்டினால் ஸ்வரங்கள் கேட்கும். இவற்றை எல்லாம் மிஸ் செய்து விடாதீர்கள்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.