இந்தியாவில் உள்ள கோவில்கள் அனைத்தும் தனக்கென தனி கதைகளையும் வழக்கங்களையும் வைத்திருக்கும். கோவில்களில் வைக்கப்படும் வேண்டுதல், படைக்கும் பொருட்கள் என்பது மாறுபடும். அப்படி ஒரு வினோத காணிக்கை செலுத்தும் வழக்கம் உள்ள கோவிலை பற்றி பார்ப்போம்.
பொதுவாக கோவில்களில் இறைவனுக்கு காணிக்கை என்பது பணம், பால், பழம், பூ, பிரசாதம், காய்கறி என்று தான் இருக்கும். ஆனால் குஜராத்தில் உள்ள ஒரு கோவிலில் மக்கள் நண்டை காணிக்கையாக படைக்கின்றனர். அதுவும் உயிரோடு இருக்கும் நண்டை தெய்வத்திற்கு காணிக்கையாக செலுத்தும் வழக்கம் உள்ளது.
குஜராத்தில் உள்ள சூரத்தில் ராம்நாத் கெலா மகாதேவ் சிவன் கோயில் உள்ளது. இங்கு உயிருள்ள நண்டுகளை காணிக்கையாக செலுத்த ஆண்டுதோறும் பக்தர்கள் குவிகின்றனர். குறிப்பாக காது நோய்களால் பாதிக்கப்பட்ட மக்கள் இங்கு அதிகம் வருகின்றனர். நண்டுகளை இறைவனுக்கு காணிக்கையாக செலுத்தினால் காது தொடர்பான நோய்கள் தீரும் என்பது நம்பிக்கை.
இந்து நாட்காட்டியின்படி, மகர சங்கராந்திக்குப் பிறகு வரும் 'பௌஷ்' மாதத்தின் மங்களகரமான புதன்கிழமை அன்று இந்த விஷேச காணிக்கை செலுத்தும் நிகழ்வு நடைபெறுகிறது. இது சூரத் மக்களால் 'உத்தரயன்' என்றும் அழைக்கப்படுகிறது.
தபி ஆற்றின் கரையோரத்தில் அமைந்துள்ள ராம்நாத் கெலா மகாதேவ் கோயிலில் ஆற்றில் இருந்து பிடிக்கப்பட்டுள்ள உயிருள்ள நண்டுகளை சிவலிங்கத்திற்கு படைக்கின்றனர். அப்படி படைப்பதால் பக்தர்கள் நினைத்தது நடக்கும் என்று நம்புகின்றனர். முக்கியமாக காத்து பிரச்சனைகள் வராது என்று நம்புகின்றனர்.
Also Read : அந்த ஊருக்கே தண்ணீர் தொட்டிகள்தான் அடையாளம்... ரசனை நயத்துடன் காட்சியளிக்கும் வீடுகள்..!
சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் அனுமதி பெற்ற பிறகு மீனவர்களிடம் இருந்து நண்டுகள் கோயில் நிர்வாகத்தால் சேகரிக்கப்படுகின்றன. காணிக்கை காலம் முடிந்தவுடன் அவை தபி ஆற்றில் விடப்படுகின்றன.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Gujarat, Hindu Temple, Travel