ஹோம் /நியூஸ் /lifestyle /

சுற்றுலாவை மேம்படுத்த சூப்பர் திட்டம்.. தமிழ்நாடும் தேர்வு.. வருகிறது 'ஸ்வதேஷ் தர்ஷன் 2'!

சுற்றுலாவை மேம்படுத்த சூப்பர் திட்டம்.. தமிழ்நாடும் தேர்வு.. வருகிறது 'ஸ்வதேஷ் தர்ஷன் 2'!

ஸ்வதேஷ் தர்ஷன் 2

ஸ்வதேஷ் தர்ஷன் 2

மத்தியப் பிரதேசம், கர்நாடகா, தமிழ்நாடு, உத்தரப் பிரதேசம் மற்றும் மகாராஷ்டிராவை உள்ளடக்கிய பதினைந்து மாநிலங்கள் முதல் கட்டத்தின் ஒரு பகுதியாகும்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Chennai, India

இந்தியாவின் புதிய உள்நாட்டு சுற்றுலாக் கொள்கை ஒரு பகுதியாக நாடு முழுவதும் உள்ள 15 மாநிலங்களில் சில நகரங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. அவற்றுள் பிரயாக்ராஜ், சித்ரகூட் மற்றும் குவாலியர் ஆகிய நகரங்கள் அடங்கும்.

இது தீம் அடிப்படையிலான சுற்றுலா சுற்றுகளில் இருந்து விலகி, இலக்கு சுற்றுலாவை மேம்படுத்துவதில் கவனம் செலுத்துகிறது. ஜனவரி முதல் தொடங்கப்படும் 'ஸ்வதேஷ் தர்ஷன் 2' இன் முதல் கட்டத்தின் ஒரு பகுதியாக இந்த முயற்சி எடுக்கப்படுகிறது.

மத்தியப் பிரதேசம், கர்நாடகா, தமிழ்நாடு, உத்தரப் பிரதேசம் மற்றும் மகாராஷ்டிராவை உள்ளடக்கிய பதினைந்து மாநிலங்கள் முதல் கட்டத்தின் ஒரு பகுதியாகும். ஒவ்வொரு மாநிலத்திலிருந்தும் இரண்டு இடங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுற்றுலா அமைச்சக வட்டாரங்கள் தெரிவித்தன.

எலெட்ரிக் வாகனங்களுக்கு 5 நிமிடத்தில் சார்ஜ் ஏற்றும் தொழில்நுட்பம்.. நாசா கண்டுபிடிப்பு !

உத்தரப்பிரதேசத்தில் ஜான்சி மற்றும் பிரயாக்ராஜ், மத்தியப் பிரதேசத்தில் குவாலியர், சித்ரகூட் மற்றும் கஜுராஹோ மற்றும் மகாராஷ்டிராவில் அஜந்தா மற்றும் எல்லோரா ஆகியவை அடையாளம் காணப்பட்ட சில முக்கிய இடங்களாகும்.

மாநில சுற்றுலாத் துறைகளுடன் கலந்தாலோசித்த பிறகு, அந்த இடங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாகவும், ஸ்வதேஷ் தர்ஷன் திட்டம் 100% மத்திய நிதியுதவி பெறுவதற்காக தற்போது சுற்றுலாத் துறை அமைச்சர் ஜி. கிஷன் ரெட்டியின் ஒப்புதலுக்காக மத்திய அரசு காத்திருப்பதாகவும் அந்த வட்டாரங்கள் தெரிவித்தன..

சுற்றுலா மற்றும் இலக்கு மைய அணுகுமுறையுடன் நிலையான மற்றும் பொறுப்பான இடங்களை மேம்படுத்துவதற்காக அரசாங்கம் சமீபத்தில் இந்தத் திட்டத்தை ஸ்வதேஷ் தர்ஷன் 2.0 (SD2.0) என மறுசீரமைத்தது.

உருகும் பனிப்பாறைகள்.. வெளிவரும் படிந்துபோன வைரஸ்கள்... மீண்டும் தொற்று நோய்? அதிர்ச்சி ரிப்போர்ட்

இந்தத் திட்டம் "உள்ளூர்களுக்கான குரல்" என்ற மந்திரத்துடன் மறுசீரமைக்கப்பட்டுள்ளது. சுற்றுலா அமைச்சகத்தின் உயர் அதிகாரி ஒருவர் கூறுகையில், இந்தத் திட்டம், உள்நாட்டு சுற்றுலாப் பயணிகளைக் குறிவைப்பதை அடிப்படை நோக்கமாகக் கொண்டுள்ளது.

அமைச்சின் கூற்றுப்படி, 2021 ஆம் ஆண்டில் உள்நாட்டு சுற்றுலாப் பயணிகளின் வருகை சுமார் 677 மில்லியனாக இருந்தது, 2022 இல் அது 572 மில்லியன் ஆகும்.

Published by:Ilakkiya GP
First published:

Tags: Tourism, Travel