நம் ஊரில் உள்ள கதைகளில் கடவுள்கள் பேசுவதை கேட்டிருப்போம். திடீரென்று ஊரில் ஒரு கல்லை கண்டுபிடிப்பார்கள். அடுத்து சில நாட்களுக்குள் அந்த கல் தான் காவல் தெய்வம். அதற்கு ஒரு கோவில் காட்ட சொல்லி கடவுள் கனவில் வந்து சொன்னது என்று சொல்லுவார்கள். ஒரு சிலர் அதையும் மீறி கற்சிலையே பேசியது என்று சொல்வார்கள்.
நம்ம ராஜகாளியம்மன் படத்துல ரம்யாகிருஷ்ணன் எழுந்து வந்து பேசியதை போல் அழகாக பல கதைகள் நம் ஊர் கிராமங்களில் உலா வருவதை பார்த்திருப்போம். ஆனால் உண்மையாகவே இந்தியாவில் உள்ள ஒரு கோவிலில் கற்சிலைகள் பேசுவதாக நம்புகிறார்கள். பார்த்தவர் யாரும் இல்லை என்றாலும் அதை இல்லை என்று யாராலும் நிரூபிக்க முடியவில்லை.
சிலை எப்படி பேசும் என்று நீங்கள் கேட்கலாம். நம்பிக்கை இல்லை என்றால் பிகார் பக்கம் வண்டியை விடுங்கள். அம்மாநிலத்தில் பக்சரில் உள்ள ராஜராஜேஸ்வரி திரிபுர சுந்தரி கோயிலில் தான் பேசும் கடவுள்கள் இருக்கின்றன. ஒரு கடவுள் மட்டும் இல்லை. இங்குள்ள அனைத்து கடவுளும் ஊர் அடங்கிய பின்னர் பேசுமாம்.
ஊர் அடங்கிய பின்ன யாரிடம் போய் கடவுள் பேசும் என்று தானே யோசிக்கிறீர்கள். இந்த கோவிலில் உள்ள கடவுள்கள் ஒருவருக்கு ஒருவர் இரவில் பேசிக்கொள்ளுமாம். இரவு நேரத்தில் அடைக்கப்பட்ட கோவிலை சுற்றி யாரும் இல்லாத நேரத்திலும் இந்த கோவிலில் இருந்து யாரோ சிலர் பேசும் சத்தம் கேட்கிறதாம். இது இன்று நேற்று நடப்பது அல்ல பல நூறு ஆண்டுகளாக தினமும் நடக்கிறதாம்.
400 ஆண்டுகளுக்கு முன்பு பவானி மிஸ்ரா என்ற தந்திரி, தாந்த்ரீக வழிபாடுகள் செய்து தாந்த்ரீக சக்திகளைப் பெறுவதற்காக இந்தக் கோயில் கட்டியதாக வரலாற்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர். இந்தக் கோயில் கட்டப்பட்ட முதல் நாளிலிருந்து, உள்ளூர் மக்கள் இந்த கோவிலில் இருந்து இரவில் பல்வேறு ஒலிகளைக் கேட்டுள்ளனர்.
ஒலி மிகவும் தெளிவாக இருந்தாலும் அந்த வார்த்தைகளை யாராலும் புரிந்து கொள்ள முடியவில்லை. மேலும், ஒலிகள் எங்கிருந்து வருகின்றன என்பதை அவர்களால் கண்டுபிடிக்க முடியவில்லை. இந்த மர்மத்தை கண்டறிய விஞ்ஞானிகள் குழு அந்த இடத்தைப் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். அந்தி வேளைக்குப் பிறகு, மனிதர்கள் யாரும் இல்லாதபோதும் கூட இங்கு பேசும் ஒலி கேட்பதை உறுதிப்படுத்தினர்.ஆனால் இன்று வரை அந்த ஒலிகள் எங்கிருந்து வருகிறது என்பதை மட்டும் கண்டுபிடிக்க முடியவில்லை.
இதையும் படிங்க: அழிவின் விளிம்பில் உள்ள உலகின் டாப் 10 இயற்கை அதிசயங்கள்..!
இக்கோயிலில் திரிபுரா, தூமாவதி, பகலாமுகி, தாரா, காளி, சின்னமஸ்தா, ஷோடசி, மாதங்கி, கமலா, உக்ர தாரா, புவனேஸ்வரி போன்ற பல்வேறு அவதாரங்களில் துர்கா தேவியின் பல தெய்வங்கள் உள்ளன. அது மட்டும் இல்லாமல் தத்தாத்ரேய பைரவர், படுக் பைரவர், அன்னபூர்ண பைரவர், கால பைரவர் மற்றும் மாதங்கி பைரவர் என்று பைரவரின் பல அவதாரங்களையும் காணலாம்.
பேசும் கடவுள்கள் குடியிருக்கும் இந்த கோவிலுக்கு ஆண்டுதோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். பகலில் ரம்யமாக காட்சியளிக்கும் இந்த கோவில் இரவில் மட்டும் மர்ம இடமாக மாறி விடுகிறது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Bihar, Hindu Temple