Home /News /lifestyle /

கோவாவில் புதிய உத்தரவு -பீச் செல்ல பிளான் பண்ணியிருக்கீங்களா? அப்ப ஜாக்கிரதையா இருங்க

கோவாவில் புதிய உத்தரவு -பீச் செல்ல பிளான் பண்ணியிருக்கீங்களா? அப்ப ஜாக்கிரதையா இருங்க

கோவா

கோவா

கோவா பீச்சில் குடித்தால் இனி ரூ. 10,000 அபராதம் விதிக்க கோவா சுற்றுலாத் துறை முடிவு செய்துள்ளது. 

இந்தியாவில் உள்ள கடலோர சுற்றுலா இடங்களில் முதன்மை இடத்தில் இருப்பது கோவா மாநில கடலோரமாகும். கோவா கடற்கரையில் ரம்மியமான சூழ்நிலை இருப்பதால் அங்கு செல்வதற்கு சுற்றுலா பயணிகள் அதிக ஆர்வம் காட்டுவது உண்டு. ஒவ்வொரு ஆண்டும் சுமார் 40 லட்சம் சுற்றுலா பயணிகள் கோவா கடற்கரைக்கு வந்து செல்கிறார்கள். இந்தியர்களை தவிர வெளிநாடுகளில் இருந்து வரும் சுற்றுலா பயணிகளிலும் கணிசமானவர்கள் கோவா கடற்கரைக்கு செல்ல தவறுவது இல்லை. கோவா கடலோரத்தில் மது அருந்துவது மிக பிரதானமான பொழுது போக்காக உள்ளது. 

சுங்கவரி குறைப்பு காரணமாக கோவா கடற்கரையில் மிக குறைந்த விலையில் மதுபானங்கள் விற்கப்படுவதும் இதற்கு உதவுவதாக உள்ளது. ஆனால் கடந்த சில ஆண்டுகளாக கோவா கடலோரத்தில் சட்டம்- ஒழுங்கு அதிக அளவில் சீர் குலைந்து வருகிறது. கோவா கடற்கரைக்கு வரும் சுற்றுலா பயணிகள் அங்கேயே அசைவ உணவுகளை சமைத்து சாப்பிட்டு மது அருந்தி தகராறில் ஈடுபடுவதாக புகார்கள் எழுந்தன. 

ஆனால் இப்போது நிலைமையோ வேறு! தற்போது விடுமுறை நாட்களில் கோவா பீச்களில் மதுவை குடிக்க நினைக்கிறீர்களா? அப்படியென்றால் நீங்கள் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்! உங்களுடைய இந்த செயல் உங்களை சிக்கலில் ஆழ்த்தக்கூடும். நியூ இயர் கொண்டாட்டங்களுக்குப் பிறகு கோவா பீச்சின் பல பகுதிகள் மது பாட்டில்களால் குவிந்து கிடந்ததை அடுத்து, கடற்கரைகளில் குடித்தால் ரூ. 10,000 அபராதம் விதிக்க கோவா சுற்றுலாத் துறை முடிவு செய்துள்ளது. 

இதுகுறித்து செய்தி நிறுவனமான பி.டி.ஐ-யிடம் பேசிய மாநில சுற்றுலா இயக்குநர் மெனினோ டிசோசா, கடற்கரைகளில் மது குடிப்பதற்கு எதிராக மக்களை எச்சரிக்கும் போர்டுகள் நிறுவப்பட்டுள்ளன. திருத்தப்பட்ட சட்டத்தை காவல்துறை மூலம் மாநில சுற்றுலாத் துறை அமல்படுத்தும் என்றும், சுற்றுலா போலீஸ் படை ஒருபுறம் இருந்தாலும் இந்த சட்டத்தை மாநில அரசே நிறைவேற்றும் என்றும் அவர்  கூறினார். 

மாநில அரசு, 2019 ஜனவரியில், சுற்றுலா வர்த்தக சட்டத்தில் தனிநபர்களுக்கு ரூ.2,000 அபராதம் மற்றும் கடற்கரைகளில் மது குடிக்கும் குழுக்களுக்கு ரூ .10,000 அபராதத்தை விதித்தது. ஏனெனில் அப்போது அங்குள்ளவர்களை சோதனை செய்தபோது குறைந்தது 83 பேருக்காவது கொரோனா பாசிட்டிவ் இருந்தது. அதே நேரத்தில் கோவாவில் 105 பேர் தொற்றுநோயிலிருந்து மீண்டனர். இதன் மூலம், கடலோர மாநிலமான கோவாவில் தொற்றுநோய்களின் எண்ணிக்கை 51,709 ஐ எட்டியுள்ளது, இதில் 50,088 நோயாளிகள் தொற்றுநோயிலிருந்து மீண்டுள்ளனர். இந்த நோயால் இதுவரை 744 பேர் இறந்துள்ளனர், மேலும் இப்போது 877 பேர் ஆக்டிவ் நோயாளிகளாக உள்ளனர்.


உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
Published by:Tamilmalar Natarajan
First published:

Tags: Beach, Goa, Government

அடுத்த செய்தி