குளிர்காலம் தொடங்கி விட்டது இமயமலை பகுதியில் பனிப்பொழிவுகளும் தொடங்கிவிட்டது. இமயமலை அடிவார பகுதிகளுக்கு பயணத்திட்டங்களும் தொடங்கி இருக்கும் நவம்பர் முதல் ஜனவரி வரையிலான காலம் சுற்றுலாவுக்கு ஏற்ற காலமாக உள்ளது.
நீங்களும் வட இந்தியாவிற்கு போக திட்டமிடுகிறீர்களா? இதையும் உங்கள் லிஸ்டில் சேர்த்துக்கொள்ளுங்கள். காஷ்மீரில் நவம்பர் மாதம், குங்குமப்பூ விழா மற்றும் படகு திருவிழா நடைபெற உள்ளன. நவம்பர் முதல் இரண்டு வாரங்கள் காஷ்மீர் பள்ளத்தாக்கின் வளமான பாரம்பரியம் மற்றும் கலாச்சாரத்தை கொண்டாடுவதாக இத்திருவிழாக்கள் இருக்கும். இந்தத் திருவிழாக்களைக் காண உலகம் முழுவதிலிருந்தும் பல்வேறு சுற்றுலா பயணிகள் காஷ்மீர் வருகின்றனர்.
காஷ்மீர் பாம்போர் பகுதியில், குங்குமப்பூ விழா மூன்று நாட்கள் நடைபெறும். உலகின் மிக மதிப்புமிக்க தங்க மசாலா பொருளாக கருதப்படும் குங்குமப்பூ எவ்வாறு அறுவடை செய்யப்படுகிறது என்பதை பார்க்க இது ஒரு அரிய வாய்ப்பாக இருக்கும். குங்குமப்பூ விவசாயிகளிடம் இருந்தே நேரடியாக வாங்கலாம்! குங்குமப்பூவை முன்னிலைப்படுத்தி இந்த கலாச்சாரத் திருவிழா நடைபெறுகிறது.
12 கிமீ நதியில் ராஃப்டிங் பண்ணத் தயாரா... தென்னிந்தியாவில் அதற்கான இடம் இதோ!
ஹவுஸ்போட் திருவிழா காஷ்மீர் பள்ளத்தாக்கின் தனித்துவமான பாரம்பரிய மலை சிகரங்கள் மற்றும் பள்ளத்தாக்கில் சுற்றுலாவை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. படகு திருவிழாவானது காஷ்மீர் செல்லும் ஒவ்வொரு பயணியும் கட்டாயம் பார்க்க வேண்டிய பட்டியலில் முதலிடத்தில் இருக்க வேண்டியது நினைக்கிறன். காஷ்மீரி படகுகள் தால் ஏரியில் ஷிகாரா சவாரி செய்வது காண்பவர் கண்ணை கொள்ளைகொள்ளும்.
எப்படி அடைவது:
ஜம்மு தலைநகர் ஸ்ரீநரில் இருந்து இரண்டு மணிநேரம் பயணித்தால் பாம்பூரை அடையலாம். ஸ்ரீநகர் வரை விமானம் மூலம் அடையலாம் அல்லது ரயில் வழி அடைந்து அங்கிருந்து தனி வாகனம் மூலமாகவோ பேருந்து மூலம் செல்லலாம்.
சாலை வழியாகப் பயணம் செய்தால், பாதுகாப்புச் சோதனைகள் சீரான இடைவெளியில் நடைபெறுவதால், சரியான வண்டியின் ஆதாரங்கள் மற்றும் அடையாள அட்டைகளை எடுத்துச் செல்லுங்கள். இரவில் பயணம் செய்வதை தவிர்க்க அறிவுறுத்தப்படுகிறது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 46, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Boats, Jammu and Kashmir, Saffron, Travel Guide, Travel Tips