முகப்பு /செய்தி /லைஃப்ஸ்டைல் / விமான பயணத்தில் 30% வரை தள்ளுபடி பெற இதை பண்ணுங்க மக்களே!

விமான பயணத்தில் 30% வரை தள்ளுபடி பெற இதை பண்ணுங்க மக்களே!

விமான பயணம்

விமான பயணம்

ஏற்கனவே ஐரோப்பிய மற்றும் அமெரிக்கா விமான நிறுவனங்களில் விமான பயணிகளுக்கு இந்த சலுகை கட்டணம் வளைக்கப்பட்டு வருகிறது.

  • News18 Tamil
  • 2-MIN READ
  • Last Updated :
  • Chennai, India

நேரம் குறையவா இருக்கு, அவசரமா போகணும்,நீண்ட நேரம் பயணம் முடியாது, நீங்க தூரம் பயணிக்க வேண்டும் என்ற நிலையில் தான் விமானத்தை நாம் தேர்ந்தெடுப்போம். ஆனால் நீண்ட நாட்களுக்கு முன்னால் டிக்கெட் புக் செய்யும்போது கட்டணம் குறைவாக இருக்கும். கடைசி நேரத்தில் டிக்கெட் போடும் போது அதிக கட்டணம் வசூலிக்கப்படும். ஆனால் அந்த நேரத்தில் கூட அதிகபட்சம் 30% தள்ளுபடி பெற வாய்ப்புள்ளது.

அந்த தள்ளுபடி பெற உங்களிடம் லக்கேஜ் இல்லாவிட்டால் போதும். லக்கேஜ் இல்லையென்றால் தள்ளுபடி கிடைக்குமா என்று உங்களுக்கு சந்தேகம் வரும். அதற்கு ஒரு உதாரணம் சொல்கிறோம். பொதுவாக ஒரு பயணி 7 கிலோ கேபின் பேக்கேஜ் மற்றும் 15 கிலோ செக்-இன் லக்கேஜை எடுத்துச் செல்ல முடியும். அது போக கூடுதல் லக்கேஜ் எடுத்துச்செல்ல கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுவதை கவனித்திருப்பீர்கள். 

சாதாரணமாக விமானம் இலகுவாக தாங்கும் எடையை விட அதிக எடை உள்ளிடும்போது அதற்கு கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுவது போல இலகுவாக பறக்க உதவுபவர்களுக்கு அதற்கான சலுகையை வழங்க வேண்டும் தானே? அது தான் இந்த சலுகை குறிப்பிடுகிறது. இது எதோ முதன் முதலில் கொண்டுவரப்போகும் சலுகை அல்ல.

ஐரோப்பிய மற்றும் அமெரிக்கா விமான நிறுவனங்களில் கையில் ஒரு பை மட்டும் வைத்திருக்கும் விமான பயணிகளுக்கு சலுகை கட்டணம் ஏற்கனவே வழங்கி வரும் நடைமுறை உள்ளது. இதை பார்த்து 2021 இலேயே இந்திய சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகம் (DGCA) இந்த நடவடிக்கையை மேற்கொண்டது.

ஆனால்,பெரும்பாலான பயணிகள் லக்கேஜ் இல்லாமல் பயணம் செய்யவில்லை என்பதால் அது நடைமுறையில் இல்லாமல் போய்விட்டது. இந்த நிலையில் தற்போது அதிக விமான பயணிகளை ஈர்க்க வேண்டும் என்ற வகையில் இந்த சலுகையை மீண்டும் வழங்க இருப்பதாக அறிவித்துள்ளது.

 இதன் காரணமாக ஏராளமான பயணிகள் பயனடைவார்கள் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், இது குறித்து விமான போக்குவரத்து ஒழுங்குமுறை இயக்குனரகம் விரைவில் அதிகாரப்பூர்வ அறிக்கை வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சலுகை பெற என்ன செய்ய வேண்டும் என்று தானே யோசிக்கிறீர்கள். நீங்கள் டிக்கெட் போடும் போதே உங்கள் லக்கேஜ் விபரங்களின் கீழ் செக்-இன் லக்கேஜ் ஏதும் இல்லை. கைப்பை மட்டும் தான் என்பதை தேர்ந்தெடுத்தால் போதுமானது. ஆனால் புக்கிங் செய்யும் போது லக்கேஜ் இல்லை என்று போட்டுவிட்டு செக் -இன் செய்யும்போது லக்கேஜ் இருந்தால் இந்த சலுகை செல்லுபடி ஆகாது. லக்கேஜ்களுக்கு கூடுதல் கட்டணத்தை செலுத்தியாக வேண்டும். 

இதையும் படிங்க: வேலை செஞ்சுட்டே 7 கண்டங்கள் 375 துறைமுகங்கள் கொண்ட 3 வருட கப்பல் பயணம் பண்ணலாம்..!

இந்த சலுகையை அதிகாரபூர்வமாக விமான போக்குவரத்து ஒழுங்குமுறை அறிவித்தபின்னர், ஸ்பைஸ் ஜெட், ஏர் ஏசியா, ஏர் இந்தியா போன்ற சில விமான நிறுவனங்கள் லக்கேஜ் இல்லாமல் செல்லும் பயணிகளுக்கு சலுகையை அறிவிக்க உள்ளன என்ற செய்தியை கேட்டு விமான பயணிகள் உற்சாகம் அடைந்துள்ளனர்.

அதே நேரத்தில் உள்நாட்டு விமான பயன்களுக்கு பயணங்களுக்கு மட்டுமே இந்த சலுகை வழங்கப்படும் என்றும் வெளிநாட்டு பயணம் செய்யும் பயணிகளுக்கு இந்த சலுகை கிடையாது என்பதையும் நினைவில் வைத்து கொள்ளுங்கள்.

First published:

Tags: Flight travel, Travel