முகப்பு /செய்தி /லைஃப்ஸ்டைல் / இமயமலை பகுதியில் இலவசமாக மலை ஏறி விளையாட ஒரு அற்புதமான வாய்ப்பு..!

இமயமலை பகுதியில் இலவசமாக மலை ஏறி விளையாட ஒரு அற்புதமான வாய்ப்பு..!

பனி மலையேற்றத் திருவிழா

பனி மலையேற்றத் திருவிழா

சாதாரணமாக இந்த பனி மலை ஏற கட்டணம் வசூலிக்கப்படும். ஆனால் இந்த பனி ஏறும் திருவிழாவின் போது யாருக்கும் கட்டணம் கிடையாது

  • 1-MIN READ
  • Last Updated :
  • chennai |

பனிக்காலம் முடிவடைய உள்ளது. ஆனால் இன்னும் லடாக்கில் புதிய பனி உருவாகி வருகிறது. கூடுதலாக இந்த வருடம் பனி அதிகமாக இருப்பதால் பிப்ரவரி மாதம் இறுதி வரை பனி பொழிவு அதிகம் இருக்கும் என்று எதிர்பார்க்க படுகிறது. இந்த சமயத்தில் இமாலய சாகச விரும்பிகளுக்கு விருப்பமான லடாக்கில்  பனிக்கால லடாக் ஐஸ் க்ளைம்பிங்  திருவிழாவின் 4வது பதிப்பு நடைபெற உள்ளது.

குளிர் காலம் வந்தாலே பனி பிரதேசம் சென்று விளையாட வேண்டும் என்பது அனைவரின் கனவாக இருக்கும். புதிய பனி சேர்ந்து வெண்படலம் போர்த்தி அழகாக காட்சி அளிக்கும் பனிமலையில்  ஏறி சாகசம் செய்ய திருவிழா வேறு நடத்தினால் யாருக்கு தான் விருப்பம் இருக்காது?

ஆண்டு தோறும் நடக்கும் பனி ஏறும் விழா இந்த ஆண்டு லடாக்- லேயில் உள்ள கேங்கிள்ஸ் கிராமத்தில் பிப்ரவரி 1 முதல் 5 வரை   நடைபெற உள்ளது. இந்த விழாவிற்கு, லடாக் மலை வழிகாட்டி சங்கம் கேங்கிள்ஸ் கிராமத்தை தயார் செய்து வருகிறது.  இந்த திருவிழாவிற்கு உலகம் முழுவதிலுமிருந்து அதிக எண்ணிக்கையிலான சாகச விரும்பிகள் வருவார்கள் என்று எதிர்பார்க்கின்றது.

லடாக் ஐஸ் க்ளைம்பிங் திருவிழாவில் எதையெல்லாம் அனுபவிக்கலாம் ? 

பனி பிரதேசத்தில் சாகச விரும்பிகள் முதலில் செய்யம் செயலே பனி மலை ஏற்றம் தான். ஆயிரக்கணக்கில் செலவு செய்து அதற்கான நிபுணர்களிடம் பயிற்சி செய்து வந்து இங்கே பனிமலை ஏறுவார்கள். அவர்களை தவிர மற்றவர்கள் ஏறுவது அரிது.

ஆனால் இந்த விழாவில், பனி ஏறுதல், பனி சறுக்குதல் போன்ற போட்டிகளின் வாய்ப்புகள் அனைவருக்கும் வழங்கப்படுகிறது. அது போக பனிமலை ஏறுவதற்கான  பாதுகாப்பு  கியர்கள்  அனைத்தையும் விழா ஏற்பாட்டாளர்களே வழங்க உள்ளனர்.  அதனால் நமக்கு அந்த செலவு இல்லை. விளையாட்டுக்கு போனால் போதும்.

இதையும் படிங்க: வாகனங்கள் தானாக 20 கிமீ வேகத்தில் நகரும் இந்தியாவின் காந்த மலை சாலை....! - சுவாரஸ்ய தகவல்!

பனி பிரதேச சாகச விளையாட்டு நிபுணர்கள் உங்களுக்கு எப்படி விளையாட வேண்டும் என்று கற்றுக்கொடுப்பதோடு உங்களுக்கு உதவியும் செய்வார்கள். சிறந்த அம்சம் என்னவென்றால், சாதாரணமாக இந்த பனி மலை ஏற கட்டணம் வசூலிக்கப்படும். ஆனால் இந்த பனி ஏறும் திருவிழாவின் போது யாருக்கும் கட்டணம் கிடையாது. முற்றிலும் இலவசம்.  யார் வேண்டுமானாலும் பங்குபெறலாம்.

இந்தியாவில் குளிர்கால சுற்றுலா மற்றும் சாகச விளையாட்டுகளுக்கு  சிறந்த இடமாக லடாக்கை பிரபலப்படுத்த இந்த நிகழ்வு உதவும். மேலும், சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதன் முக்கியத்துவம் குறித்த விழிப்புணர்வையும் அறிவையும் பரப்புவதை இந்த விழா நோக்கமாகக் கொண்டுள்ளது.

எனவே அடுத்த மாதம் எங்கே செல்லலாம் என்று யோசித்துக்கொண்டு இருந்தால் இந்த திருவிழாவை நிச்சயம் மிஸ் பண்ணிடாதீங்க.. ஆயிரக்கணக்கில் காசு கொடுத்து பனி மலை ஏறுவதை விட இலவசமாக நிறைய மக்களுடன் இந்த மலை ஏற்றம் செய்வது குதூகல உணர்வை தரும்.

First published:

Tags: Ladakh, Travel