முழுமையாக தடுப்பூசி போட்டுக்கொண்ட இந்தியர்கள் இனி ஐக்கிய அரபு அமீரகத்திற்கு பயணிக்கலாம்...

ஐக்கிய அரபு அமீரகம் (UAE)

அந்நாட்டில் கொரோனா பாதிப்புகளின் தினசரி எண்ணிக்கை குறைந்து வருவதால் இந்த நடவடிக்கையை அரசாங்கம் மேற்கொண்டுள்ளது.

  • Share this:
முழுமையாக தடுப்பூசி போட்டுக்கொண்ட இந்தியர்களுக்கு விமானப் பயணக் கட்டுப்பாடுகளை நீக்குவதாக ஐக்கிய அரபு அமீரகம் (UAE) அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பு செப்டம்பர் 12ம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளதாகவும் அந்நாட்டு அரசாங்கம் தெரிவித்துள்ளது. மேலும் பயணிகள் போட்டுக்கொள்ளும் தடுப்பூசி உலக சுகாதார நிறுவனத்தால் அங்கீகரிக்கப்பட்டதாக இருக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளது.

இந்தியாவை தவிர, பாகிஸ்தான், வங்கதேசம், நேபாளம், இலங்கை, வியட்நாம், நமீபியா, சாம்பியா, காங்கோ ஜனநாயக குடியரசு, உகாண்டா, சியரா லியோன், லைபீரியா, தென்னாப்பிரிக்கா, நைஜீரியா மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளைச் சேர்ந்தவர்களும் செப்டம்பர் 12 முதல் ஐக்கிய அரபு அமீரகத்திற்கு பயணிக்க அனுமதி வழங்கியுள்ளது.

மேலும், இந்தியாவிலிருந்து துபாய்க்கு திரும்பும் விமானங்களுக்கான ரிட்டர்ன் விமான கட்டணம் ரூ.13,000-த்திற்கும் குறைவான விலையில் இருந்து ஆரம்பமாகிறது. Skyscanner என்ற இணையதளத்தின் மூலம் விமான டிக்கெட்டுகளை முன்பதிவு செய்வதற்கான விமான கட்டணங்கள் குறித்த தகவல் கிடைத்தது. அதன்படி, தற்போது எமிரேட்ஸ் விதித்துள்ள கட்டணம் கொரோனாவுக்கு முன்பு இருந்ததைவிட குறைவாக உள்ளது. இரு நாடுகளுக்கிடையே ஒரு நிறுத்தம் கொண்ட Etihad இண்டிரெக்ட் விமான டிக்கெட்டுகளை ரூ.13,000-த்தில் முன்பதிவு செய்ய முடியும். அதேபோல இடையில் எந்த நிறுத்தமும் இல்லாமல் ஸ்பைஸ்ஜெட் மூலம் இயக்கப்படும் நேரடி விமானங்களை ரூ.22,000 கொடுத்து முன்பதிவு செய்யலாம்.

கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு, UAE முழுமையாக தடுப்பூசி போடப்பட்ட பயணிகளுக்கான சுற்றுலா விசாக்களை மீண்டும் தொடங்குவதாக அறிவித்திருந்தது. அந்நாட்டில் கொரோனா பாதிப்புகளின் தினசரி எண்ணிக்கை குறைந்து வருவதால் இந்த நடவடிக்கையை அரசாங்கம் மேற்கொண்டுள்ளது. ஏனெனில், அரபு அமீரகத்தில் கடந்த வாரம் முதல் தினசரி பாதிப்பு 1,000 க்கும் குறைவாகவே பதிவு செய்யப்பட்டு வருகிறது. தடுப்பூசி பெற்றுக்கொண்டவர்களின் விகிதம் 92 சதவிகிதமாக இருப்பதாக அந்நாட்டு அரசாங்கம் தெரிவித்துள்ளது. மால்டாவுக்குப் பிறகு உலகிலேயே அதிகபட்ச மக்களுக்கு தடுப்பூசி செலுத்திய நாடாக UAE விளங்குகிறது.இதையடுத்து, அடையாளம் மற்றும் குடியுரிமைக்கான ஃபெடரல் ஆணையம், தேசிய அவசர நெருக்கடி மற்றும் பேரிடர் மேலாண்மை ஆணையம் (NCEMA) ஆகிய இரண்டும் இணைந்து ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதில், உலகளாவிய சுகாதார அமைப்பால் (WHO) அங்கீகரிக்கப்பட்ட தடுப்பூசிகளைப் பெற்ற அனைத்து நாடுகளுக்கும் சுற்றுலா விசாக்களுக்கான விண்ணப்பம் திறந்திருக்கும் என்று அறிவித்தது.

ஒர்க் ஃபிரம் ஹோம் செய்துகொண்டே டூர் போகனுமா? மசினக்குடி முதல் ஷில்லாங் வரை... நெட்வொர்க் பிரச்னை இல்லா 5 இடங்கள்...

இதுதொடர்பாக NCEMA கடந்த வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கையில், "WHO- வால் அங்கீகரிக்கப்பட்ட எந்தவொரு தடுப்பூசியையும் முழுமையாக போட்டுக்கொண்டவர்கள் மற்றும் ஆறு மாதங்களுக்கும் மேலாக இடைநீக்கம் செய்யப்பட்ட பட்டியலில் உள்ள நாடுகளில் ஏதேனும் ஒன்றில் தங்கியிருப்பவர்கள், புதிய நுழைவு அனுமதியின் கீழ் எங்கள் நாட்டிற்கு வரலாம். நுழைந்த பிறகு அவர்களின் சுகாதார நிலையை சரிபார்க்க வேண்டும், ” என்று குறிப்பிட்டிருந்தது.கோவிட் -19 தொற்றுநோய் காரணமாக ஒரு வருட தாமதத்திற்குப் பிறகு அக்டோபர் 1 ஆம் தேதி முதல் எக்ஸ்போ 2020 உலக கண்காட்சியைத் துபாய் திறக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்வு உலகின் மிகப்பெரிய எக்ஸ்போஸ்களில் ஒன்றாகும் மற்றும் பல மாதங்கள் நடைபெறும் இந்த நிகழ்விற்கு ஏராளமான மக்கள் வருவார்கள் என்று அந்நாட்டு அரசாங்கம் எதிர்பார்த்துள்ளது. சுற்றுலாத்துறையை மேம்மபடுத்த அந்நாட்டு அரசாங்கம் இப்போது தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்துவருகிறது.

 
Published by:Sivaranjani E
First published: