ஐக்கிய அரபு எமிரேட்ஸுக்கு பயணம் செய்ய நினைக்கிறீர்களா? அப்படி நீங்கள் நினைத்தால், உங்கள் பாஸ்போர்ட்டில் உங்கள் பெயரை முதலில் சரி செய்து கொள்ளுங்கள்.
பயணிகளுக்கு ஒவ்வொரு நாடும் ஒவ்வொரு பயண நிபந்தனைகளை விதித்து பார்த்திருப்போம். இந்த ஆவணங்கள் எல்லாம் வேண்டும். இந்த காரணங்கள் இருந்தால் தான் அனுமதிப்போம் என்று கேட்டிருப்போம். ஆனால் அமீரகம் மட்டும் பயணியின் பெயரில் ஒரு ட்விஸ்ட் வைத்துள்ளது.
அதும் தென் இந்தியர்களுக்கு இது பெரிய ட்விஸ்ட் தான். வெளிநாட்டவர்களும் வடமாநிலத்தவர்களும் பேரில் நபரின் பெயர், குடும்ப பெயர் என 2 பகுதியைக் கொண்டிருப்பர். அது பாஸ்ப்போர்ட்டில் ஃபர்ஸ்ட் நேம், லாஸ்ட் நேம் என்று கொடுக்கப்பட்டிருக்கும். ஆனால் பெரும்பாலான தென்னிந்தியர்களுக்கு பெயரில் 1 பகுதி தான் இருக்கும். அப்படி இருக்கும் போது பாஸ்போர்ட் ஒரு பெயர் இடம்பெற்றிருக்ககூடும்.
இதையும் படிங்க: நீர் விளையாட்டுகள், டெண்டு வீடு, ஏரித்தீவு... நவம்பர் 28 கோலாகலமாக தொடங்கும் ஜல் மஹோத்சவம்..!
ஆனால், ஐக்கிய அரபு அமீரகம் தற்போதுள்ள பயண வழிகாட்டுதல்களில் புதிய மாற்றத்தின்படி கடவுச்சீட்டில் ஒற்றைப் பெயரைக் கொண்ட எந்தவொரு பயணிகளும் ஐக்கிய அரபு எமிரேட்ஸுக்கு அல்லது அங்கிருந்து செல்ல அனுமதிக்கப்பட மாட்டார்கள். பாஸ்போர்ட்டில் உங்கள் பெயர் முதல் மற்றும் கடைசி பெயர் இரண்டும் இருக்க வேண்டும்.
இந்த விதி அனைத்து வகையான விசாக்களுக்கும் (சுற்றுலா மற்றும் பணி) விசாக்களுக்கும் பொருந்தும்.
ஐக்கிய அரபு எமிரேட்ஸில் உள்ள அதிகாரிகளின் கூற்றுப்படி, உங்களின் முதல் மற்றும் கடைசி பெயர் இரண்டும் உங்கள் பயண ஆவணத்தில், அதாவது உங்கள் பாஸ்போர்ட்டில் சரியாக அறிவிக்கப்பட வேண்டும்.
இருப்பினும், உங்கள் பாஸ்போர்ட்டில் ஒரு பெயர் இருந்து, அமீரக குடியிருப்பு அனுமதி அல்லது வேலைவாய்ப்பு விசா இருந்தால், பாஸ்போர்ட்டில் ஒரே பெயர் முதல் மற்றும் கடைசி பெயராக புதுப்பிக்கப்படும் வரை பயணம் அனுமதிக்கப்படும். ஆனால் விரைவாக அதை இரட்டை பெயராக மாற்ற வேண்டும்.
அபுதாபி, துபாய், ஷார்ஜா, அஜ்மான், உம்முல்-குவைன், புஜைரா மற்றும் ராஸ் அல் கைமா ஆகிய ஏழு எமிரேட்டுகளின் கூட்டமைப்பு அரேபிய தீபகற்பத்தின் மொத்த பகுதிகளுக்கும் இது பொருந்தும் என்று ஐக்கிய அரபு அமீரகம் அறிவித்துள்ளது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Passport, Travel, Travel Guide, UAE