ஹோம் /நியூஸ் /லைஃப்ஸ்டைல் /

’வேலை செய்து கொண்டே ஊர் சுற்றுலாம்’ மசினகுடி to முசோரி - உங்களுக்கான சூப்பர் ப்ளான்!

’வேலை செய்து கொண்டே ஊர் சுற்றுலாம்’ மசினகுடி to முசோரி - உங்களுக்கான சூப்பர் ப்ளான்!

ஒர்க் ஃபிரம் ஹோம் டிராவல்

ஒர்க் ஃபிரம் ஹோம் டிராவல்

வீட்டில் இருந்தே வேலை செய்பவர்கள், வித்தியாசமாக டூர் சென்று அங்கிருந்தே பணியாற்றுகின்றனர். இது ஒரு புதுமையான அனுபவமாக இருப்பதாகவும், கொரோனா கொடுத்த வரம் எனவும் கூறுகின்றனர்.

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :

  கொரோனா வைரஸ் காலத்தில் வீட்டில் முடங்கிய மக்கள், மெல்ல மெல்ல பொதுவெளியில் சுதந்திரமாக உலவத் தொடங்கியிருக்கிறார்கள். சுற்றுலா இடங்களும், மக்களின் வருகைக்காக திறக்கப்பட்டிருகின்றன. கூண்டுக் கிளிபோல் இருந்த மக்கள், இப்போது கொடுக்கப்பட்டிருக்கும் தளர்களினால் புத்துணர்ச்சியடைந்து சுற்றுலா இடங்களுக்கு படையெடுத்து வருகின்றனர். வீட்டில் இருந்தே வேலை செய்பவர்கள், வித்தியாசமாக டூர் சென்று அங்கிருந்தே பணியாற்றுகின்றனர். இது ஒரு புதுமையான அனுபவமாக இருப்பதாகவும், கொரோனா கொடுத்த வரம் எனவும் கூறுகின்றனர்.

  வீட்டில் இருந்து வேலை செய்யும் நீங்கள், டூர் செல்ல வேண்டும் என விரும்பினால் கீழே கொடுக்கப்பட்டுள்ள இந்த இடங்கள் சிறந்த தேர்வாக இருக்கும்.

  1. ஜிபி, ஹிமாச்சலப் பிரதேசம்

  வீட்டிற்குள்ளேயே அடைந்து கிடக்கும் நீங்கள், மலைப் பிரதேசமான இடத்திற்கு செல்ல வேண்டும் என விரும்பினால் ஹிமாச்சலப் பிரதேசத்தில் உள்ள ஜிபிக்கு செல்லுங்கள். வேலைகளால் ஏற்படும் மன அழுத்தத்தில் இருக்கிறீர்கள் என்றால், உங்களுக்கான சிறந்த மருந்து, அந்த மலைகளின் அழகில் பொதிந்து கிடக்கிறது. அந்த கண்கொள்ளா அழகை ரசித்தவாறே உங்கள் பணியை தொடரலாம். நன்னீர் சூழ்ந்த குடிசைகள், சுற்றுலாப் பயணிகளை வரவேற்கின்றன. ஆசுவாசமாக ஓய்வெடுத்துக் கொண்டு, நீரோடைகளை ரசித்தவாறு வேலை செய்யலாம்.

  கேரளாவுக்கு டூர் செல்ல திட்டமா? நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய லேட்டஸ்ட் அப்டேட் இது தான்..

  2. ஷில்லாங், மேகாலயா

  அமைதியான நிலப்பரப்பு, மேகக் கூட்டங்களின் கூடாரமாகவும் மேகாலயா உள்ளது. கிழக்கின் ஸ்காட்லாந்து என அழைக்கப்படும் மேகாலயாவில், ரசனைக்கு பஞ்சமில்லாத இயற்கை எழில் கொஞ்சும் இடங்கள் ஏராளமாக இருக்கின்றன. சுற்றுலாப் பயணிகள் இயற்கை எழில் சூழ்ந்த பகுதியில் தங்கிக்கொள்ள குடிசைகளும், ரெசார்ட்டுகளும் உள்ளன. பயணத்திட்டத்தை மேற்கொள்ளும் முன்னர், நீங்கள் தங்க விரும்பும் இடங்கள் உள்ளிட்டவைகளை ஆன்லைன் மூலம் கண்டுபிடித்து, அதன்பிறகு பயணத்தை மேற்கொள்ளுங்கள்.

  3. வர்கலா, கேரளா

  காடு, மலைகளைக் கடந்து கடற்கரையை விரும்புபவர் நீங்கள் என்றால், கேரளாவில் இருக்கும் வர்கலா சிறந்த இடம். அரபிக்கடலின் முத்து எனக் கூறப்படும் இந்த இடத்தில் நீளமான கடற்கரை அமைந்துள்ளது. நீர் விளையாட்டுகள் இருப்பதால் சிறந்த பொழுதுபோக்கு அம்சங்கள் கொண்ட இடமாகவும் இது இருக்கும். தெளிவான கடல் நீரில் மூழ்கி திளைக்கும் வாய்ப்பு அங்குண்டு. பாரா கிளைடிங், பாராசைலிங், ஜெட் பனிச்சறுக்கு விளையாட்டுகள் வர்கலா கடற்கரையில் மிகவும் பிரபலம். சர்ஃபிங் செல்லலாம்.

  4. முசோரி, உத்தரக்காண்ட்

  உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள முசோரி மலைகளின் ராணி என அழைக்கப்படுகிறது. 2015 ஆம் ஆண்டு முதல் அங்கு இலவச வைஃபை வழங்கப்பட்டு வருகிறது. மலைப்பகுதி மக்களின் வாழ்வியலை நேரடியாக நீங்கள் காண முடியும். இமயமலையின் வரம்புகளின் கண்கவர் காட்சியை முசோரியில் இருந்து தெளிவாக காணலாம். ஆண்டு முழுவதும் குளிர்ந்த வானிலை இருக்கும் மலைப்பாங்கான இடம் முசோரி. சுற்றுலாப் பயணிகளை சிவப்பு கம்பளமிட்டு வரவேற்கிறது.

  5. மசினகுடி, தமிழ்நாடு

  வன விலங்குகளை காண விரும்பினால், தமிழ் நாட்டில் உள்ள மசினகுடிக்கு செல்லலாம். இயற்கையின் அழகை, அங்கேயே தங்கி ரசிக்கும் வசதிகள் உள்ளன. காடுகளுக்குள் உள்ள ஹோம்டேக்குகளில் இலவச வைஃபை வசதிகளும் உள்ளன. அங்கு சென்றால் நிச்சயம் யானைகள், மான், புலி, சிறுத்தையை காணும் வாய்ப்புகள் அதிகம். இதற்காகவே, மசினகுடிக்கு அதிகம் செல்பவர்களை நீங்கள் பார்க்க முடியும். அருகில் இருக்கும் முதுமலை வனப்பகுதியில் யானை சவாரி உள்ளது.

  வீட்டில் இருந்து வேலை செய்வதால் ஒருவிதமான மனச்சோர்வு ஏற்பட வாய்ப்புகள் இருக்கிறது. காரில் பயணம் செய்து இதுபோன்ற இயற்கை பாங்கான இடத்தில் அமர்ந்து வேலை செய்யும்போது மனதிற்கு அமைதியும், புத்துணர்ச்சியும் கிடைக்கும். வேலைக்கு லீவு கொடுக்காமல் ஊர் சுற்றலாம்.

  Published by:Sivaranjani E
  First published:

  Tags: Tour, Travel Tips, Work From Home