Home /News /lifestyle /

இந்தியா வரும் பயணிகளின் கவனத்திற்கு.. "ஏர் சுவிதா" படிவத்தை நிரப்புவது எப்படி? என்பதை தெரிந்துக்கொள்ளுங்கள்!

இந்தியா வரும் பயணிகளின் கவனத்திற்கு.. "ஏர் சுவிதா" படிவத்தை நிரப்புவது எப்படி? என்பதை தெரிந்துக்கொள்ளுங்கள்!

விமான நிலையம்

விமான நிலையம்

Air Suvidha Form | பல விமான நிறுவனங்களும், ஏர் சுவிதா படிவத்தை நிரப்ப வேண்டியதன் அவசியத்தை பற்றி பயணிகளுக்கு தெரிவிப்பதில்லை.

    கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில், இந்தியா வரும் அனைத்து பயணிகளும் ‘ஏர் சுவிதா’ இணையப்பக்கத்திற்குச் சென்று, அதில் உள்ள படிவத்தில் கேட்கப்பட்டுள்ள விவரங்களை கட்டாயம் வழங்க வேண்டும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.

    சர்வதேச விமான பயணம் மேற்கொள்பவர்களுக்கான செயல்முறையை எளிதாக்குவதற்காக இந்த செயல்முறை உருவாக்கப்பட்டது. எனினும், வெளிநாடுகளில் இருந்து இந்தியா வரும் பயணிகள் பலருக்கும் இதை பற்றிய விவரம் தெரியாததால், விமான நிலையத்திற்கு சென்ற பின்னர் அவர்கள் கடும் சிரமத்தை எதிர்கொண்டனர். பல விமான நிறுவனங்களும், ஏர் சுவிதா படிவத்தை நிரப்ப வேண்டியதன் அவசியத்தை பற்றி பயணிகளுக்கு தெரிவிப்பதில்லை. பெரும்பாலான விமானப் பயணிகளுக்கு செக்-இன் கவுண்டர்களில் தான் விமான நிறுவன ஊழியர்களால் ’ஏர் சுவிதா’ தேவை குறித்து தகவல் தெரிவிக்கப்படுகிறது.

    அதுபோல, செக்-இன் கவுன்டர்களில் ’ஏர் சுவிதா’ பதிவு எண்ணை வழங்கவில்லை என்றால், விமான நிறுவனங்கள் போர்டிங் பாஸ்களை வழங்காது என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல், ஏர் சுவிதா படிவத்தை பூர்த்தி செய்வதென்பதும் எளிதானது அல்ல, அந்த படிவத்தில் கேட்கப்படும் ஆவணங்கள் இல்லாமல் பலர் தவிப்பார்கள்.

    இதனால், விமான நிலையத்தில் வைத்து ஏர் சுவிதா படிவத்தை நிரப்புவதற்காக பயணிகள் பலரும் தங்களது மொபைல், மடிக்கணினிகளுடன் கடுமையாக போராடி வருவதை காணலாம், பலர் இதுபோன்ற கடைசி நிமிட அவசரத்தால் படிவத்தை பூர்த்தி செய்ய முடியாமல், தங்களது விமானத்தை தவறவிட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

    அதனால், இந்தியாவிற்கு பயணம் செய்ய உள்ள பயணிகள் செய்ய வேண்டியவை குறித்து தெரிந்துக்கொள்ளவும்..

    1. RT-PCR நெகட்டிவ் சான்றிதழின் தேவையை சரிபார்க்கவும்

    a). இந்திய சுகாதாரத்துறை (https://www.newdelhiairport.in/pdf/ListofCountries-14June2022.pdf ) குறிப்பிட்ட நாடுகளின் பட்டியலில் முழுமையாக தடுப்பூசி போடப்பட்ட பயணிகள், COVID-19 RT-PCR நெகட்டிவ் அறிக்கையை (பயணத்திற்கு 72மணி நேரத்திற்கு முன்னதாக பரிசோதனை செய்யப்பட்டதை) கட்டாயமாக பதிவேற்ற வேண்டும் அல்லது கொரோனா தடுப்பூசியின் முழு முதன்மை தடுப்பூசியை சரியான தேதியியில் செலுத்திக்கொண்டதற்கான சான்றிதழை பதிவேற்றம் செய்ய வேண்டும்.

    b). இந்திய சுகாதாரத்துறை பட்டியலில் குறிப்பிடப்படாத நாடுகளில் இருந்து இந்தியா வருபவர்களாக இருந்தால் RT-PCR நெகட்டிவ் சான்றிதழ் கட்டாயம் கொண்டிருக்க வேண்டும்.

    c). அதனால், தகுந்த நேரத்தில் விமானம் கிளம்பு உள்ள நாட்டில் இருந்து பரிசோதனைக்குத் திட்டமிடுங்கள். உங்களிடம் நம்பகமான பயண ஏஜெண்ட் இருந்தால் நல்லது இல்லையெனில் உள்ளூர் ஹோட்டல் ஊழியர்களால் உங்களுக்கு உதவ முடியும்.

    2. நீங்கள் விமான நிலையத்திற்கு புறப்படுவதற்கு முன், முன்னதாக இல்லாவிட்டாலும், ஏற்கனவே படிவத்தை பூர்த்தி செய்துள்ளீர்கள் என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். விமான நிலையத்தில் வைத்து நிரப்பிக்கொள்ளலாம் என்று எண்ணி ஏர் சுவிதா படிவத்தை நிரப்பாமல் இருந்து விடாதீர்கள்.

    3. தேவைக்கு ஏற்ப உங்கள் ஆவணங்களை தயார் செய்து வைத்துக்கொள்ள அரை மணி நேரம் வைத்துக்கொள்ளுங்கள்.

    4. ஒவ்வொரு பயணிக்கும் கீழ்கண்ட ஆவணங்களை தயார் நிலையில் வைத்துக்கொள்ளுங்கள்..

    a). அடிப்படை பாஸ்போர்ட் விவரங்கள்

    b). விமான விவரங்கள் மற்றும் இருக்கை எண். செக்-இன் செய்யாதவர்கள் இருக்கை எண்ணுடன் ‘00’-ஐ சேர்க்க வேண்டும். “விமானத்தில் ஏறுவதற்கு முன், SDF-ஐ திருத்தி சரியான இருக்கை எண்ணை வழங்குவது பயணியின் பொறுப்பாகும். இது கட்டாயத் தேவையாகும், தொடர்பைத் தடமறிதல் நோக்கத்திற்காக இது அவசியமானது என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

    5. ஏர் சுவிதா தளத்தில் பதிவேற்றம் செய்வதற்கு தேவையான ஆவணங்கள்

    a). பாஸ்போர்ட்
    b). தடுப்பூசி சான்றிதழ்
    c). RT-PCR நெகட்டிவ் சான்றிதழ்

    6. கோப்பு விவரக்குறிப்புகள்.. முக்கியமானவை..

    a). மேலே குறிப்பிடப்பட்டுள்ள அனைத்து ஆவணங்களும் பிடிஎஃப் (PDF) (word doc, jpeg, png போன்ற பைல்களை பதிவேற்றம் செய்ய முடியாது) பைலாக இருக்க வேண்டும். அதனால், உங்களிடம் ஸ்கேன் செய்த இமேஜாக இருந்தால், அதனை கூகுகளின் உதவியுடன் பிடிஎஃப் பைலாக மாற்றி வைத்துக்கொள்ளவும்.

    b). பைல் நேமில் எந்த சிறப்பு எழுத்துகளும் இருக்க கூடாது. (ஹைபன் மற்றும் அடிக்கோடிற்கு மட்டுமே அனுமதி. அதனால், உங்கள் பைல் நேமில் ஸ்பேஸ் பயன்படுத்தியிருந்தால் கூட அந்த பைல் நேமை மாற்றிவிடவும். பைல

    c). இந்த பைல்கள் அனைத்தும் 1MB-க்கும் குறைவான அளவில் இருக்க வேண்டும். அதனால், பயணிகள் பைலின் அளவை குறைக்க ஏதேனும் செயலியை பயன்படுத்தி பைல் அளவை குறைத்து விடுங்கள்.

    7. https://www.newdelhiairport.in/airsuvidha/apho-registration தளத்தில் சென்று முதன்மைப் பயணியின் விவரங்களை முதலில் நிரப்பவும். உங்களுடன் வருபவர்கள் இருந்தால், படிவத்தின் முடிவில் பயணிகளின் எண்ணிக்கையைச் சேர்க்க வேண்டும் - பின்னர் அவர்கள் ஒவ்வொருவருக்கும் அனைத்து விவரங்களையும் மீண்டும் நிரப்ப வேண்டும்.

    8. தடுப்பூசி வரம்பிற்குள் வராத குழந்தைகள் உங்களுடன் பயணிக்க உள்ளார்கள் என்றால், அவர்களின் விவரத்தில் எதனை பதிவேற்றுவது என்று தெரியமால் திணற வேண்டாம். அதற்கு பதிலாக அதனை நீங்கள் காலியாக விட்டுவிடலாம். ஒருவேளை கட்டாயம் பூர்த்தி செய்ய வேண்டும் என படிவம் வலியுறுத்தினால், பெற்றோர் விவரங்களையே அதிலும் பதிவேற்றுவது தான் ஒரே வழி.

    9. இறுதியாக இந்த படிவத்தை சமர்ப்பிகும் முன்பு அதில் ஒரு பதிவு எண்/ விண்ணப்பக் குறிப்பு எண் வழங்கப்படும். அந்த எண்ணானது முதன்மை விண்ணப்பதாரரின் மின்னஞ்சலுக்கு  அனுப்பப்படும்.

    10. இந்த படிவத்தை நீங்கள் பிரிண்ட் அவுட்டாகவோ, அல்லது மொபைலிலோ விமான நிலையத்தில் காண்பிக்க வேண்டும். அதன் பின்னரே போர்டிங் பாஸ் வழங்கப்படும்.

     
    Published by:Esakki Raja
    First published:

    Tags: Airport, India

    அடுத்த செய்தி