முகப்பு /செய்தி /லைஃப்ஸ்டைல் / இனி கோவில்களில் ’ரோபோ யானை’.. கேரளாவில் முதன் முறையாக அறிமுகம்..!

இனி கோவில்களில் ’ரோபோ யானை’.. கேரளாவில் முதன் முறையாக அறிமுகம்..!

ரோபோ யானை

ரோபோ யானை

எல்லா விழாக்களுக்கும் உயிருள்ள விலங்குகளைப் பயன்படுத்துவதை நிறுத்துவோம் என்ற உறுதிமொழியின் ஒரு பகுதியாக அதிகாரிகளால் இந்த முயற்சி எடுக்கப்பட்டது.

  • News18 Tamil
  • 2-MIN READ
  • Last Updated :
  • Kerala, India

கோவில்கள் என்று சொன்னதும் நம் நினைவுக்கு ஒரு யானையும் நிச்சயம்  வரும். சிறுவர்களாக இருக்கும் போது, பயந்து பயந்து அந்த யானையின் அருகில் சென்று வாழைப்பழத்தை கொடுத்து அதை யானை அலேக்காக தூக்கி வாயில் போட்டு சாப்பிடுவதை வாய் பிளந்து பார்த்த அனுபவம் எல்லாம் பையாஸ்கோப் போட்டது போல் ஓடும்.

ஆனால், எல்லா கோவில்களிலும் யானைகள் சுதந்திரமாக இருக்க அனுமதிப்பதில்லை. சில இடங்களில் அது மனிதர்களால் கொடுமைகளுக்கு உண்டாக்கப்படுகிறது. ஏற்கனவே காட்டில் உள்ள யானைகள் எல்லாம் மின்வேலிகள்,  அதிவேக ரயில்களில் இருந்து வருகின்றன. அதன் வாழிடங்கள் சுருங்கி வருகின்றன. இந்நிலையில் கோவில்களில் யானைகளை துன்புறுத்துவதை  மாற்ற ஒரு புதிய முன்னெடுப்பை கேரள கோவில் கொண்டுவந்துள்ளது.

முதன்முதலாக, கேரளாவில் உள்ள திருச்சூர் மாவட்டத்தில் உள்ள இரிஞ்சாடப்பிள்ளி ஸ்ரீ கிருஷ்ணா கோயிலில்  ஊர்வல தெய்வங்களை சுமந்து செல்வது போன்ற சடங்குகளைச் செய்வதற்காக மோட்டார் பொருத்தப்பட்ட செயற்கை யானையை அறிமுகப்படுத்தியுள்ளது.  எல்லா விழாக்களுக்கும் உயிருள்ள விலங்குகளைப் பயன்படுத்துவதை நிறுத்துவோம் என்ற உறுதிமொழியின் ஒரு பகுதியாக அதிகாரிகளால் இந்த முயற்சி எடுக்கப்பட்டது.

11 அடி உயரமுள்ள இந்த 'ரோபோட்டிக் யானை', 800 கிலோ எடையுள்ள இரும்புச் சட்டத்தால் உருவாக்கப்பட்டுள்ளது. அதன் மீது ரப்பர் பூச்சு பூசப்பட்ட பார்ப்பதற்கு அசல் யானையை போலவே காட்சியளிக்கிறது.  பீப்பிள் ஃபார் எத்திகல் ட்ரீட்மென்ட் ஆஃப் அனிமல்ஸ் என்று அழைக்கப்படும் PETA இந்தியாவால் இந்த ரோபோ யானை கோயிலுக்கு நன்கொடையாக வழங்கப்பட்டுள்ளது.

ரோபோ யானைக்கு 'இரிஞ்சாடப்பிள்ளி ராமன்' எனப் பெயரிடப்பட்டு, 'நடையிறுத்தல்' விழாவும் நடத்தப்பட்டது. நடையிறுத்தல் விழா என்பது கேரள கோவில்களில் தெய்வத்திற்கு யானைகளை காணிக்கை செலுத்தும் சடங்கு.  விழாக்களில் நிஜ யானைகளை அலங்கரிப்பது போல் இரிஞ்சாடப்பிள்ளி ராமனை  இந்த விழாவில் அலங்கரித்து இருந்தனர்.

இது சம்பந்தமாக, PETA மேலும் கூறுகையில், இந்த ரோபோ யானை மாதிரியானது கோவில் விழாக்களில் யானைகள் துன்பப்படாமல் பாதுகாக்கும் எங்கள் முயற்சிகளில் ஒன்றாகும். இதனால் யானைகள் தங்கள் வன வாழ்க்கையையும் மறுவாழ்வு இல்ல வாழ்க்கையும் மேற்கொள்ளும். அதன்  இயற்கை சூழலில் வாழ வழிவகுக்கும் என்று தெரிவித்துள்ளது.

அறிக்கைகளின்படி, ரோபோ யானை ஒரே நேரத்தில் அதை இயக்குபவர் மற்றும்  ஐந்து பேரை ஏற்றிச் செல்ல முடியும். மேலும், அதன் தும்பிக்கையை சுவிட்  பயன்படுத்தி கட்டுப்படுத்த முடியும். துபாய் ஷாப்பிங் ஃபெஸ்டிவலுக்கு யானை சிலைகளை சப்ளை செய்து வரும் திருச்சூரில் உள்ள கலைஞர்கள் குழுவால் இந்த ரோபோ யானை உருவாக்கப்பட்டுள்ளது .

முதன்முதலாக, இந்த கேரளக் கோயில் சடங்குகளுக்காக உயிருள்ள யானைகளுக்குப் பதிலாக 'ரோபோ யானைகளை' கொண்டு வருகிறது

இது குறித்து கோயில் அர்ச்சகர் ராஜ்குமார் நம்பூதிரி கூறுகையில், கோயில் அதிகாரிகளும் இயந்திர யானையை பெற்றுக்கொண்டதில் மகிழ்ச்சி அடைந்தனர். மற்ற கோயில்களும் இந்த யோசனையை அமல்படுத்தினால் நன்றாக இருக்கும்.  யானைகளுக்கு பதிலாக ரோபோ யானைகளை அவற்றின் சடங்குகளுக்காக மாற்றத் தொடங்குவார்கள் என்றும் அவர்கள் நம்புவதாகவும் அவர் கூறினார்.

நம்பூதிரி மேலும் கூறுகையில், இந்த கோவிலை ஒரு குடும்பம் தான் எடுத்து நடத்துகிறது. அவர்கள் கடந்த காலங்களில் திருவிழாக்களுக்கு யானைகளை வாடகைக்கு எடுத்து வந்தனர். இருப்பினும், கடந்த சில ஆண்டுகளாக, அதிக விலை கொடுத்து, யானைகளை அழைத்து வந்தாலும் திருவிழாக் காலங்களில் யானைகள் மதம் பிடித்து வன்முறையில் ஈடுபடுவதும் அதிகரித்து வருவதைக் கருத்தில் கொண்டு, கோவில் யானைகளை அழைத்து வரும் நடைமுறையை நிறுத்தியது.

இதையும் பாருங்க: நதிகள் என்றால் கடலை சேரும்... ஆனால் கடலில் கலக்காத இந்திய நதிகள் பற்றி தெரியுமா..?

இருப்பினும், துபாய் ஷாப்பிங் திருவிழா கலைஞர்கள் குழு யானை சிலைகளை உருவாக்குவதைக் கேள்விப்பட்ட கோயில் அதிகாரிகள் அவர்களைச் சந்தித்து, அவர்களின் பரிந்துரைகளின்படி ஒன்றைச் செய்யுமாறு கேட்டுக் கொண்டனர். இதைத் தொடர்ந்து, விலங்குகளுக்கு எதிரான கொடுமைக்கு எதிராக செயல்படும் PETA இந்தியா, ஸ்பான்சர்ஷிப்புடன் களமிறங்கியது.பின்னர் இப்போது இரிஞ்சாடப்பிள்ளி ராமன் கோவில் சேவகன் ஆகிவிட்டான்.

First published:

Tags: Elephant, Hindu Temple