பயணிகளுக்கு அனைத்து வசதிகளையும் வழங்கும் முயற்சியில், பல ரயில்களின் தற்போதைய வழக்கமான ரேக்குகளை நவீன LHB (Linke Hofmann Busch) பெட்டிகளுடன் மாற்ற இந்திய ரயில்வே முடிவு செய்துள்ளது. LHB ஜெர்மனியில் வடிவமைக்கப்பட்ட பெட்டிகள் ஆகும். .
பாகல்பூர்-ஆனந்த் விஹார் விக்ரம்ஷிலா சூப்பர்பாஸ்ட், பாகல்பூர்-அஜ்மீர் ஷெரீப் எக்ஸ்பிரஸ், பாகல்பூர்-தாதர் எக்ஸ்பிரஸ், ஆங் எக்ஸ்பிரஸ், கரிப் ரத், நியூ ஃபராக்கா எக்ஸ்பிரஸ், பிரம்மபுத்ரா மெயில் உள்ளிட்ட ரயில்களில் நவீன எல்ஹெச்பி பெட்டிகள் ஏற்கனவே நிறுவப்பட்டுள்ளன.
இந்த LHB இன் முதல் நிலை ஏசி பெட்டிகளில் என்னென்ன அசத்தும் வசதிகள் இருக்கிறது தெரியுமா…

LHB பெட்டிகள் சாதாரண பெட்டியைப் போல் அல்லாமல் கொஞ்சம் அகலமானதாக அதிகபட்ச பயன்பாடு இருக்கும்படி வடிவமைக்கப்பட்டுள்ளது.
பெட்டி ஏறியதும் மிகவும் குறுகலான வாசலைப் பார்த்துப் பழகிய நமக்கு முதல் ஆச்சரியமே இதன் அகண்ட வாசல் தான். குப்பை தொட்டி, கண்ணாடி, நெருப்பு அணைக்கும் கருவியோடு அமைக்கப்பட்டுள்ளது.
சாதாரண ICF பெட்டிகளின் முதல் நிலை ஏசி கொச்சின் லாபி கொஞ்சம் குறுகலாக இருக்கும் ஆனால் இதன் லாபியே விசாலமாக இருக்கிறது. கேபின், கூப் ஆகிய இரண்டு அமைப்புகலோடு 24 பேர் பயணிப்பதாக உள்ளன. நகர்த்தும் கதவுகளோடு ரம்யமாக காட்சியளிக்கிறது.
கேபின்: கீழே மேலே என்று 2 அடுக்குகளோடு எதிர் எதிராக 4 படுக்கைகள் உள்ளன.
கூப் : கணவன் மனைவியாக பயணிப்பவர்களுக்கு அவர்களின் தனிமைக்கு ஏற்ற அமைப்பாக கூப் உள்ளது. கீழ் மேலாக 2 படுக்கைகளுடன் வீட்டின் நேர்த்தியான அலங்கரிக்கப்ப அரை போன்ற அமைப்பை கொண்டுள்ளது.
மதுரை தேனி சாலையில் வரலாறு கலந்த 3 மலைகளில் ட்ரெக்கிங் பயணம்…
படிகள் அமைப்பு : பழைய முறை வண்டிகளில் மேல் பெர்த்துக்கு ஏற கம்பியில் படி அமைப்பு இருக்கும். அப்படி இல்லாமல் இந்த பெட்டிகளில் படிக்கட்டு போலவே அமைப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதனால் எளிதாக வயதானவர்களும் மேலே ஏறலாம்.
ஏசி பரவல்: கீழே, மேலே படுக்கும் நபர்களுக்கு பரவலாக குளிர் பரவும் வண்ணம் ஏசி துளைகள் அமைக்கப்பட்டுள்ளது.
ஏர் பிரெஷ்னேர்: ஒவ்வொரு கேபின், கூப்பிலும் தனி தனியாக ரூம் பிரெஷ்னேர் வைக்கப்பட்டுள்ளது. இது அந்த அறையின் நறுமணத்தையும் புத்துணர்வையும் மேம்படுத்துகிறது.
வால்யூம் கன்ட்ரோல், ஸ்பீக்கர்: ரயிலின் பயணத்தின் போது பாடல்கள் கேட்கவும் அதன் சத்தத்தை கூட்ட, குறைக்கவும் வால்யூம் கன்ட்ரோல், ஸ்பீக்கர் ஆகியவை கொடுக்கப்பட்டுள்ளது.
வாசனை கட்டுப்படுத்தி: மூடப்பட்டிரும் அரை என்பதால் அதன் வாசனையை கட்டுப்படுத்த துளைகள் கொண்ட ஆடர் கண்ட்ரோலர் உள்ளது. இது அந்த அறையில் உள்ள கேட்ட வாசனையை வெளியேற்ற உதவும். நம் அறை புத்துணர்வுடன் திகழும்.
தனிப்பட்ட படுக்கைகளுக்கு புத்தகம் படிக்க சுழலும் விளக்குகள் உள்ளது. அறையில் இருக்கும் உணவு உண்ணும் மேடை தவிர்த்து வசதியாக அமர்ந்து சாப்பிட மடக்கும் மேசைகளும் கொடுக்கப்பட்டுள்ளன.
இரண்டு படுக்கைகளுக்கு பக்கத்திலும் ஸ்விட்சுகள் உள்ளன. அதே போல் எப்போதும் இருக்கும் அவசர கால உதவிக்கு உள்ள செயின், பைகள் வைக்கும் கேபின், தண்ணீர் பதில் வைக்கும் பைகள் எல்லாம் உள்ளது.
இங்குள்ள கழிவறை தான் ஆச்சரியமே: ஒவ்வொரு பெட்டியிலும் 2 இந்திய முறை, 2 வெளிநாட்டு முறை கழிவறை அமைப்பு உள்ளது.
முதல் நிலை ஏசி குளியலறையில் சோப் விநியோகிப்பான், சவர பொருட்கள் அனைத்தும் உள்ளது. ஷவர் அமைப்போடு வெந்நீர் இயந்திரமும் அமைக்கப்பட்டுள்ளது. இதை விட வேறென்ன வேண்டும்
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.