ஹோம் /நியூஸ் /லைஃப்ஸ்டைல் /

ஆசியாவின் முதல் ஆம்பிதியேட்டர் நம்ம நாட்டில் தான் இருக்கு... எங்க தெரியுமா?

ஆசியாவின் முதல் ஆம்பிதியேட்டர் நம்ம நாட்டில் தான் இருக்கு... எங்க தெரியுமா?

ரங் கர்

ரங் கர்

ரங் கரின் முழு அமைப்பும் பிரத்தியேகமாக சிவப்பு-சுடப்பட்ட செங்கற்கள், வைத்து ஒரு குறிப்பிட்ட வகை அரிசி மற்றும் முட்டைகளால் ஆன பசையை கொண்டு ஒட்டப்பட்டுள்ளது.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Assam, India

இன்றைய காலகட்டத்தில் பொழுது போக்கிற்கு சினிமா, சீரிஸ், வீடியோ கேம்ஸ், மால் என்று பல வசதிகள் உள்ளன. ஆனால் பழைய காலத்தில் இந்து எதுவும் கிடையாது. மல்யுத்தம், மாடுகள் சண்டையிடுவது, குதிரை பந்தயம் என்று சில விளையாட்டுகளே இருந்தன.

ஒரு ஊரில் ஏதாவது பந்தயம் நடக்கிறது என்றால் அதை காண பக்கத்துக்கு கிராமம் , பக்கத்துக்கு ஊரில் இருந்து எல்லாம் சாராய் சாரையாக மக்கள் அணிவகுத்து வருவர். அப்படி மக்கள் கூடி கேளிக்கை விளையாட்டுகள், நடனங்கள், நாடகங்களைக் காண அஸ்ஸாமில் ஒரு தனித்துவமான ஆம்பிதியேட்டர் கட்டிடம் கட்டப்பட்டுள்ளது.

ஆசியாவிலேயே எஞ்சியிருக்கும் ஆசியாவின் மிகப் பழமையான ஆம்பிதியேட்டர் என நம்பப்படும் ரங் கர், சிவசாகரில் உள்ள ஏழு அடுக்குகள் கொண்ட ரங்பூர் அரண்மனைக்கு அருகில் அமைந்துள்ளது. அஸ்ஸாமில் பூர்வ குடியான அஹோம் வம்சத்தின் மன்னர் ஸ்வர்கதேயோ பிரமத்த சிங்கவால் 18 ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டது.

இதையும் படிங்க : ஞானபழத்திற்காக முருகன் கோபித்துக்கொண்ட இடம் தெரியுமா.... இமயமலையில் இருக்கும் ஒரே முருகன் கோவில்!

இந்த 10 மீட்டர் உயரமுள்ள அரச விளையாட்டு மைதான கட்டிடத்திற்கு ரங் கர் என்று பெயர்.  ரங் கர்வாஸ் கட்டுவதற்கான முக்கிய நோக்கம் கலாச்சார நிகழ்ச்சிகள் மற்றும் பிஹு திருவிழாவின் போது ஏற்பாடு செய்யப்படும் யானை மற்றும் எருமை சண்டை போன்ற பாரம்பரிய விளையாட்டுகளைப் பார்ப்பதாகும்.

ரங் கர் நுழைவாயிலின் இருபுறமும் இரண்டு அழகிய கல் செதுக்கப்பட்ட முதலைக் கட்டமைப்புகள் காணப்படும். மேலும் ரங் கரின் பிரதான கட்டமைப்பின் கூரை தலைகீழாக வைக்கப்பட்டுள்ள ஒரு படகு போன்றது. . ரங் கரின் வெளிப்புறம் மலர் மற்றும் வடிவியல் வடிவமைப்புகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது.

ரங் கரின் முழு அமைப்பும் பிரத்தியேகமாக சிவப்பு-சுடப்பட்ட செங்கற்கள், வைத்து ஒரு குறிப்பிட்ட வகை அரிசி மற்றும் முட்டைகளால் ஆன பசையை கொண்டு ஒட்டப்பட்டுள்ளது. இந்த கட்டிடம் அஹோம் கட்டிடக்கலைக்கு ஒரு அழகான உதாரணம் எனலாம்.

நீங்கள் ரங் கர் உள்ளே நடக்கும்போது, ​​தனித்துவமான கட்டமைப்புகளால் அலங்கரிக்கப்பட்ட வளைவுகளின் தொடர்களைக் காண முடியும். அன்றைய மன்னர்கள் மற்றும் ராயல்டிகள் நிகழ்வுகளைப் பார்த்து மகிழும் இடத்தைக் காண மேலே செல்லும் ஒரு செங்குத்தான படிக்கட்டு ஒன்றும் உள்ளது.

இதையும் படிங்க : 3 ஆண்டுகளுக்கு பின் கொச்சி கோட்டையில் நடக்க இருக்கும் சர்வதேச கலை கண்காட்சி

ருபோஹி போதர் எனப்படும் பரந்த மைதானத்தால் சூழப்பட்ட ரங் கர், முன்பு காளைச் சண்டைகள், சேவல் சண்டைகள் மற்றும் மல்யுத்தம் ஆகியவை சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன, ஆனால் இப்போது அது ரங் கர் உச்சியில் இருந்து அழகாகத் தோற்றமளிக்கும் ஒரு அழகுபடுத்தப்பட்ட மைதானமாக சுற்றுலாத்தலமாக மட்டும் பராமரிக்கப்படுகிறது.

இயற்கை சீற்றங்கள் மற்றும் வானிலையின் தொடர்ச்சியான வெளிப்பாடு காரணமாக, இந்த ஆம்பிதியேட்டரின் சட்டகம் பலவீனமடைந்தது. ரங் கரின் மறுவடிவமைப்புக்கு மாநில அரசு சிமெண்டைப் பயன்படுத்தியது. 2007ல் கவுகாத்தியில் நடைபெற்ற 33வது தேசிய விளையாட்டுப் போட்டிகளின் சின்னமாக இது இருந்தது .

ஒரு வரலாற்று கட்டிடம் மட்டுமின்றி, ரங் கர் சிவசாகரில் பார்க்க ஒரு அற்புதமான இடமாகும். அழகான அமைப்பு மற்றும் அமைதியான சுற்றுப்புறம் இதை பார்வையிட வேண்டிய இடமாக மாற்றுகிறது.

First published:

Tags: Assam, Tourism, Travel, Travel Guide, Trip