ஜூலை மாதம் தொடங்கி மார்ச் மாத வெயில் தொடங்கும் காலம் வரை இமய மலை பகுதி முழுவதும் வரிசையாக திருவிழாக்களால் நிறைந்திருக்கும். அதன் உச்சம் இந்த டிசம்பர் இறுதியும் ஜனவரியும் தான். அப்படி வடகிழக்கு மாநிலத்தின் தனித்துவமான வருடாந்திர தேஹிங் பட்காய் திருவிழா ஜனவரியில் நடைபெற இருக்கிறது.
தினசரி காலை வேளையை ஒரு சிலரால் தேநீர் இல்லாமல் தொடங்க முடியாது. எப்படியாயினும் ஒரு டீ அடித்தால் தான் மெஷின் ஓடும் என்பார்கள். இந்தியாவில் முதல் தர தேநீர் என்றால் அது அசாம் தேநீர் தான். அந்தக் தேயிலை தோட்டத்தை சுற்றி நடக்கும் திருவிழா என்றால் சும்மாவா?
அஸ்ஸாம் அரசால் நடத்தப்படும் இந்த வருடாந்திர கலாச்சார விழா, அசாமின் டின்சுகியா மாவட்டத்தில் உள்ள சிறிய தேயிலை நகரமான லேகாபானியில் நடைபெறுகிறது. 2023 ஜனவரி 16-19 தேதிகளில் அஸ்ஸாமின் பல்வேறு கலாச்சாரங்களை ஒரே இடத்தில் அனுபவிக்க வேடிக்கையான மற்றும் தனித்துவமான வழியாக இது மாற உள்ளது.
இதையும் படிங்க: ஏரி முழுவதும் மனித எலும்புகள்.. தோண்ட தோண்ட பகீர்.. விலகாத மர்மம்.. திகில் படத்தை மிஞ்சும் நிஜக்கதை!
இந்த திருவிழாவில் அசாமில் வாழும் பல்வேறு பழங்குடியின மக்களின் தனித்துவமான கலாச்சார நிகழ்வுகள் அவர்களது பாரம்பரிய கலை பொருட்கள் அடங்கிய கண்காட்சி மாற்று விற்பனை நடைபெற இருக்கிறது. அதேபோல் அசாம் கலாச்சாரத்தின் பரந்துபட்ட உணவுகளை ருசிக்க அற்புதமான வாய்ப்பாக இருக்கும். மற்ற இந்திய உணவுகளை விட அசாம் உணவு சிறிது மாறுபட்டு திபெத்திய, சீன உணவுகளோடு ஒத்து இருக்கும்.
தேயிலை பாரம்பரிய சுற்றுப்பயணங்கள்
தேஹிங் - பட்காய் திருவிழாவின் ஒரு பகுதியாக, தேயிலை தயாரிக்கும் முழு செயல்முறையையும் நீங்கள் காணக்கூடிய புகழ்பெற்ற தேயிலை தோட்டங்களுக்கு பயணங்கள் இருக்கும். இதில் பாரம்பரிய முறை முதல் இன்றைய அதிநவீன தேயிலை தயாரிப்பு வரை அனைத்தையும் நேரில் பார்க்க சிறந்த வாய்ப்பாக இருக்கும்.
வனவிலங்கு பயணங்கள்
தேயிலை தோட்டங்கள் மட்டுமன்றி அசாம் பசுமையான அடர்காடுகளுக்கு புகழ் பெற்றது. ஒற்றை கொம்பு கொண்ட காண்டாமிருக்கம் இங்கும் ஒரே இந்திய பகுதி இது.
யானை சஃபாரிகளுக்கு பெயர் பெற்றது. திருவிழாவின் ஒரு பகுதியாக பயணிகள் அஸ்ஸாமின் அழகிய நிலப்பரப்பைக் காணவும், அதன் அழகை ரசிக்கவும் வாய்ப்பளிக்கும்.
இதையும் பாருங்க: டூர் ப்ளானா? மணாலியில் களைகட்டுது ஜனவரி கொண்டாட்டம்.. விவரம் இதோ!
பாரம்பரிய பயணங்கள்
பார்வையாளர்கள் வரலாற்று சிறப்புமிக்க டிக்பாய் எண்ணெய் வயல் மற்றும் சுத்திகரிப்பு நிலையத்திற்கும் அழைத்துச் செல்லப்படுகிறார்கள். டிசம்பர் 11, 1901 இல் தொடங்கப்பட்ட டிக்பாய் சுத்திகரிப்பு நிலையம் இந்தியாவின் பழமையான, செயல்பாட்டு சுத்திகரிப்பு நிலையம். மேலும் உலகின் பழமையான செயல்பாட்டு சுத்திகரிப்பு நிலையங்களில் ஒன்றாகும்.
அது மட்டுமின்றி இரண்டாம் உலகப் போரின் கல்லறைகளுக்கும், பழைய ஸ்டில்வெல் சாலைக்கும் அழைத்துச் செல்லப்படுகிறார்கள். பழைய சின்னமான சாலை ஒரு காலத்தில் மியான்மருக்கு செல்லும் பாதையாக இருந்தது.
சாகச விளையாட்டு
பிரம்மபுத்திரா நதிக்கரையில் பாராசெயிலிங், கயாக்கிங் மற்றும் ஆங்லிங் போன்ற பல சாகச விளையாட்டுகளும் நடைபெறுகின்றன. அவற்றை எல்லாம் ஒரே இடத்தில் இருந்து அனுபவிக்கும் வாய்ப்பை மிஸ் பண்ணிடாதிங்க மக்களே …
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Assam, Festival, Travel, Travel Guide