Home /News /lifestyle /

ஒரு வாரம் தென்னிந்தியாவில் ஜாலியா டூர் போகலாம்... IRCTC-ன் சூப்பரான பேக்கேஜ்

ஒரு வாரம் தென்னிந்தியாவில் ஜாலியா டூர் போகலாம்... IRCTC-ன் சூப்பரான பேக்கேஜ்

ஐ.ஆர்.சி.டி.சி

ஐ.ஆர்.சி.டி.சி

IRCTC-யின் அதிகாரப்பூர்வ இணையதளமான www.irctctourism.com-க்கு சென்று பயணிகள் இந்த சுற்றுலாப் பேக்கேஜை முன்பதிவு செய்யலாம்.

    இந்தியன் ரயில்வே உணவு மற்றும் சுற்றுலா கழகமான ஐ.ஆர்.சி.டி.சி (IRCTC) பல டூர் பேக்கேஜ்களை அறிமுகப்படுத்தியுள்ளது. அடுத்த மாதம் தென்னிந்தியாவில் உள்ள இடங்களைப் பார்க்க சுற்றுலா செல்ல வேண்டும் என நீங்கள் நினைத்துக் கொண்டிருந்தால் ஐஆர்சிடிசி அறிமுகப்படுத்தியுள்ள இந்த டூர் பேக்கேஜ்கள் சுலபமானதாக இருக்கும்.

    ஐஆர்சிடிசி ‘ஆசாதி கா அம்ரித் மஹோத்சவ்’ மற்றும் ‘தேகோ அப்னா தேஷ்’ திட்டங்களின் கீழ் ஆடம்பரமான மற்றும் மலிவு விலையில் டூர் பேக்கேஜை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த சுற்றுலா தொகுப்பிற்கு ‘தென்னிந்திய தெய்வீக சுற்றுப்பயண தொகுப்பு எக்ஸ் டெல்லி’ என பெயர் வைக்கப்பட்டுள்ளது. இந்த சிறப்பு சுற்றுலா தொகுப்பு 7 பகல் மற்றும் 6 இரவுகள் இருக்கும் என்றும், உணவு, தங்குமிடம் உள்ளிட்ட வசதிகள் சுற்றுலா பயணிகளுக்கு செய்து கொடுக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

    இதுகுறித்து ஐஆர்சிடிசி தனது ட்விட்டர் பக்கத்தில், “இந்த பேக்கேஜ் மூலம், நீங்கள் ராமநாதசுவாமி கோவில், மீனாட்சி கோவில், திருப்பதி பாலாஜி கோவில் போன்ற தென்னிந்திய புகழ்பெற்ற மற்றும் மிக அழகான கோவில்களை தரிசிக்கலாம்” என பதிவிட்டுள்ளது.

    சுற்றுலா தொகுப்பிற்கான செலவு :

    மூன்று நபர்களுக்கான பேக்கேஜின் விலை ரூ.45,260. இரண்டு நபர்களுக்கான பேக்கேஜ் ரூ.47,190, ஒரு நபருக்கு ஒரு நபர் செலவு ரூ.59,760 என குறிப்பிட்டுள்ளது. 5 முதல் 11 வயது வரை உள்ள ஒரு குழந்தையுடன் (படுக்கையுடன்) ஒரு நபர் பயணிப்பதற்கான செலவு ரூ.40,120 ஆகும். 5 முதல் 11 வயது வரையிலான குழந்தையுடன் ஒரு நபர் (படுக்கை இல்லாமல்) பயணிப்பதற்கான கட்டணம் ரூ.35,610 ஆகும்.

    டூர் பேக்கேஜ் ஹைலைட்ஸ்:

    பேக்கேஜ் பெயர் - தென்னிந்திய தெய்வீக சுற்றுப்பயண தொகுப்பு எக்ஸ் டெல்லி

    சுற்றுலா தளங்கள் - திருப்பதி, சென்னை, திருவனந்தபுரம், கன்னியாகுமரி, ராமேஸ்வரம் மற்றும் மதுரை

    சுற்றுப்பயணத்தின் காலம் - 6 இரவுகள் மற்றும் 7 நாட்கள்

    புறப்படும் தேதிகள் - ஆகஸ்ட் 19 மற்றும் செப்டம்பர் 16

    உணவுத் திட்டம் - காலை உணவு மற்றும் இரவு உணவு

    டூர் பேக்கேஜை முன்பதிவு செய்வது எப்படி?

    IRCTC-யின் அதிகாரப்பூர்வ இணையதளமான www.irctctourism.com-க்கு சென்று பயணிகள் இந்த சுற்றுலாப் பேக்கேஜை முன்பதிவு செய்யலாம். IRCTC சுற்றுலா வசதி மையங்கள், மண்டல அலுவலகங்கள் மற்றும் பிராந்திய அலுவலகங்கள் மூலமாகவும் முன்பதிவு செய்யலாம்.
    Published by:Sankaravadivoo G
    First published:

    Tags: IRCTC, Tour, Tourism

    அடுத்த செய்தி