முகப்பு /செய்தி /லைஃப்ஸ்டைல் / கங்கை கரையில் சர்வதேச யோகா திருவிழா தொடங்கியாச்சு..!

கங்கை கரையில் சர்வதேச யோகா திருவிழா தொடங்கியாச்சு..!

யோகா

யோகா

வகுப்புகளில் குண்டலினி யோகா, பவர் வின்யாச யோகா, ஐயங்கார் யோகா மற்றும் கிரியா யோகா ஆகியவை சொல்லித்தரப்பட உள்ளது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Rishikesh, India

உலகின் யோகா தலைநகரான ரிஷிகேஷில் யோகா கலையைக் கொண்டாடுவதற்காக உலக யோகா திருவிழா என்ற 1 வாரம் நடக்கும் திருவிழா இன்று தொடங்கியுள்ளது. மார்ச் 8-14, 2023, இடைப்பட்ட காலத்தில் நடக்கும் இந்த யோகா திருவிழாவிற்காக  உலகம் முழுவதிலுமிருந்து ஆயிரக்கணக்கான மக்கள் ரிஷிகேஷில் முகாமிட்டுள்ளனர்.

சர்வதேச யோகா திருவிழா என்பது பண்டைய அறிவியலான யோகாவின் பாரம்பரியத்தை உயிர்ப்புடன் வைத்திருக்கும் ஒரு நிகழ்வாகும். ஒவ்வொரு ஆண்டும் ரிஷிகேஷில் உள்ள உத்தரகாண்ட் சுற்றுலா மேம்பாட்டு வாரியத்துடன் மாநில சுற்றுலாத் துறையும் யோகா பயிற்சியாளர்களை ஒன்றிணைக்கும் முயற்சியாக இந்த விழாவை மேற்கொள்கின்றனர்.

சர்வதேச யோகா விழா நடக்கும் ஒரு வாரத்தில் 70 மணி நேர யோகா வகுப்புகள் நடைபெறும். இந்த சிறப்பு யோகா வகுப்புகள் உலகத்தரம் வாய்ந்த யோகா ஆசிரியர்களால் எடுக்கப்படும் என்று அறிவுகள் கூறுகின்றன. வகுப்புகளில் குண்டலினி யோகா, பவர் வின்யாச(Vinyasa) யோகா, ஐயங்கார் யோகா மற்றும் கிரியா(kriya) யோகா ஆகியவை சொல்லித்தரப்பட உள்ளது.

யோகா மட்டும் அல்லது, மதரீதியான கூட்டங்களையும் நடத்த உள்ளது. அதன்படி ரிஷிகேஷில் பல ஆன்மிக தலைவர்களின் பிரசங்கங்கள் மற்றும் உரையாடல்களும் நடைபெற இருக்கின்றன. அதோடு  அழகிய கங்கை கரையில் நடக்கும் ஆர்த்தி  தீப அலங்காரங்களையும் கண்டு ரசிக்கலாம்.

இந்த ஒரு வார விழாவில் உலகம் முழுவதிலுமிருந்து பல்வேறு யோகா ஆசிரியர்கள், ஆன்மீகத் தலைவர்கள் மற்றும் ஆரோக்கிய நிபுணர்களிடமிருந்து அனைத்து வகையான யோகாவையும் கற்றுக்கொள்வதற்கான வாய்ப்பை உங்களுக்கு வழங்கும். ஒவ்வொரு ஆண்டும், ரிஷிகேஷில் உள்ள மிகப்பெரிய ஆசிரமமான பர்மார்த் நிகேதன் ஆசிரமம், இந்தியா மற்றும் உலகம் முழுவதிலுமிருந்து ஆயிரக்கணக்கான பார்வையாளர்களை ஈர்த்து வருகிறது.

திருவிழாவிற்கான அனுமதி சீட்டுகள் பல வகைகளில் வருகின்றன: நடுத்தர குடியிருப்பு பாஸ்(pass)  ஒரு வாரத்திற்கு $650 அதாவது இந்திய மதிப்பில், 53364 ரூபாய் என்று விற்கப்படுகிறது. குழுவாக போகும் நபர்களுக்கு தள்ளுபடி $585- ரூ.48027  விலையிலும்,  கோர்ட்யார்ட் ரூம் ரெசிடென்ஷியல் பாஸ் (Courtyard Room Residential Pass) $550- ரூ.45154, தங்குமிடம் அல்லாத வார பாஸ் 36944 ரூபாய் என்றும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இந்திய குடிமக்கள் வார குடியிருப்பு பாஸ் ரூ.24629, மற்றும் தங்குமிடம் அல்லாத நாள் பாஸ் ரூ. 6157. முக்கிய குறிப்பு: டே பாஸ் குறிப்பிட்ட நாளுக்கு மட்டுமே செல்லுபடியாகும். ஆனால் இது அனைத்து வகுப்புகள், விரிவுரைகள், யோகா பயிற்சி பட்டறைகள் மற்றும் உணவுகளுக்கான அணுகலை உங்களுக்கு வழங்கும்.

இதையும் பாருங்க:  18, 19-ம் நூற்றாண்டுகளிலேயே உலகை சுற்றிவந்த பெண்கள்... வரலாற்று கதை தெரியுமா?

இருப்பினும், அதில் தங்கும் இடம் சேராது. உங்களுக்கு யோகா மற்றும் ஆன்மிகம் தான் விருப்பம் என்றால் இந்த விழவிற்கு சென்று வாருங்கள். அது போக ரிஷிகேஷை சுற்றி, குனாஜ்புரி தேவி கோவில் , நீலகந்த் மகாதேவ் கோவில், தேரா மன்சில் மற்றும் பாரத் மாதா கோவில், ஸ்வர்க் ஆசிரமம், தி பீட்டில்ஸ் ஆசிரமம், லக்ஷ்மன் ஜூலா மற்றும் கீதா பவன். போன்ற இடங்களை பார்க்கலாம்.

First published:

Tags: Yoga, Yoga day