முகப்பு /செய்தி /லைஃப்ஸ்டைல் / படகு சவாரியுடன் ராமேஸ்வரத்தில் தீவு சுற்றுலா.. பட்ஜெட் செலவில் மாலத்தீவு சென்று வந்த ஃபீல் கிடைக்கும்..!

படகு சவாரியுடன் ராமேஸ்வரத்தில் தீவு சுற்றுலா.. பட்ஜெட் செலவில் மாலத்தீவு சென்று வந்த ஃபீல் கிடைக்கும்..!

குருசடை தீவு

குருசடை தீவு

காலை 7 மணியிலிருந்து மதியம் 2 மணி வரை இயக்கப்படும் படகு சவாரிக்கு ஒரு நபருக்கு ரூ.400 கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

  • Local18
  • 2-MIN READ
  • Last Updated :
  • Rameswaram |

தமிழகத்தில் மொத்தம் 1076 கிமீ கடற்கரை நீளம் இருந்தாலும் தமிழகத்தை சுற்றியுள்ள தீவுகள் மீதான மவுசு குறையாது. அதற்கு காரணம் அதன் இயற்கையான அழகு தான். நிலத்தில் உள்ள கோட்டைகள், கோவில்கள், பூங்காக்கள், காடுகள் , மலைகள் என்று இருந்தாலும் சுற்றி கடல். நடுவில் பசுமையான சிறு தீவிற்குள் இருக்கும் பீல் தனி.

அப்படி தமிழகத்தை சுற்றி இருக்கும் தீவுகளை பார்த்தால் அதில் முதன்மையில் குருசடை தீவு இருக்கும். ராமேஸ்வரம் பாம்பன் முதல் தூத்துக்குடி வரை உள்ள மன்னார் வளைகுடா கடலில் 21 தீவுகள் உள்ளன என்பது நம்மில் பலருக்கு தெரியாது. அதில் ஒரு சில தீவுகளை மட்டுமே அணுகமுடியும்.

அதில் பாம்பன் குந்துக்காலுக்கு வெகு அருகே உள்ள குருசடை தீவு முக்கியமான ஒன்று அது போக புள்ளிவாசல்தீவு, சிங்கில் தீவு, பூமரிச்சான் தீவு ஆகியவை படகு மூலம் அணுகக்கூடியவை. ராமேஸ்வரம் மண்டபம் பகுதியிலிருந்து 7 கிமீ தொலைவில் அமைந்துள்ள அழகிய குருசடை தீவு சமீபகாலமாக சுற்றுலாப் பயணிகளிடையே பிரபலமாகி வருகிறது.

குருசடை தீவை பொறுத்தவரை இதன் அழகை சொல்லி முடியாது. தீவின் நிலப்பரப்போடு அதை சுற்றி அமைந்துள்ள தனித்துவமான பாலனோக்லோஸ்ஸஸ் என்ற அரிய வகை கடற்பாசிகள் இந்த தீவை மேலும் அழகாக மாற்றுகிறது. அதுமட்டுமின்றி தீவை சுற்றியுள்ள கடல் பகுதியில் அரிய வகை ஆமைகள், டால்பின்கள், கடல் குதிரை, டுகோங் கடல் பசு, நண்டுகள், கடல் பாசிகள், ஸ்டிங்ரே வகை மீன்கள், நட்சத்திர மீன்கள், கடல் அனிமோன்கள், சிப்பிகள், வண்ணமயமான கடற்பாசிகள் என 400 க்கும் மேற்பட்ட அரிய வகை உயிரினங்களை பார்க்க முடியும்.

அரிய வகை கடல் உயிரினங்களை பார்த்து விட்டு இந்த அமைதியான தீவின் கரையில் அமர்ந்து நேரத்தை கழிக்கலாம். நகரத்தின் இரைச்சலுக்கு நடுவில் வாழ்ந்து வந்த நமக்கு அமைதியான சூழலை இந்த தீவு ஏற்படுத்தி கொடுக்கும். குழந்தைகள், மற்றும் குடும்பத்துடன் செல்ல ஏற்ற இடமாக இருக்கும்.

படகு சவாரி:

கடந்த மார்ச் 11, 2022 முதல் குருசடை தீவிற்கு படகு சவாரி தொடங்கப்பட்டது. வனத்துறையும் ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள குண்டுகால் மற்றும் சின்னபாலம் பகுதி மக்களும் ஒன்றிணைந்து குருசடை தீவுக்கு படகு சேவையை இயக்குகின்றனர். தினமும் காலை 7 மணியிலிருந்து மதியம் 2 மணி வரை இயக்கப்படும் படகு சவாரிக்கு ஒரு நபருக்கு ரூ.400 கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இந்த தீவை சுற்றிப்பார்க்க சுமார் ஒரு மணி நேரம் எடுக்கும். ஆனால் அந்த நேரம் உங்கள் மனதில் அருமையான அனுபவத்தை பதிவு செய்யும். கடற்கரை மட்டுமல்லாது தீவிலும் பல அரிய வகை தாவரங்களையும் பறவைகளையும் காணலாம். தீவிற்குள் 1 கிலோமீட்டர் வரை உள்ளே சென்று பார்ப்பதற்கும் அனுமதிக்கப்படுகின்றனர்.

பயணிகளின் பாதுகாப்பிற்காக லைப் ஜாக்கெட்டும், பயிற்சி பெற்ற லைஃப் கார்டு ஒருவரும் படகில் பணியமர்த்தப்பட்டுள்ளார். அவர் உங்களை படகில் பாதுகாப்பாக அழைத்துச் செல்வதோடு அங்குள்ள வளங்களை பற்றியும் உங்களுக்கு விளக்குவார்.

இதையும் படிங்க : சென்னைக்கு அருகில் மீண்டும் திறக்கப்பட்ட நாகலாபுரம் நீர்வீழ்ச்சி... இந்த வார இறுதிக்கான ஸ்பாட் ரெடி!

குருசடை தீவுக்கு படகில் செல்லும் போது தெளிந்த நீர் வழியாக கடலின் பரப்பில் வளர்ந்திருக்கும் பவளப்பாறைகள் மற்றும் கடலில் குதித்தோடும் டால்பின்களை பார்த்து ரசிக்கலாம். ராமேஸ்வரம் செல்லும் போது குருசடை தீவை பார்க்க மறந்து விடாதீர்கள்.

First published:

Tags: Island, Rameshwaram, Travel