முகப்பு /செய்தி /லைஃப்ஸ்டைல் / வந்துட்டேன்னு சொல்லு திரும்ப வந்துட்டேன்னு சொல்லு... 7 ஆண்டுகளுக்கு பின் நடக்கும் எல்லோரா-அஜந்தா சர்வதேச திருவிழா

வந்துட்டேன்னு சொல்லு திரும்ப வந்துட்டேன்னு சொல்லு... 7 ஆண்டுகளுக்கு பின் நடக்கும் எல்லோரா-அஜந்தா சர்வதேச திருவிழா

எல்லோரா-அஜந்தா சர்வதேச திருவிழா

எல்லோரா-அஜந்தா சர்வதேச திருவிழா

பிப்ரவரி 12 ஆம் தேதி அவுரங்காபாத்தில் உள்ள ஒஸ்மான்புரா  சந்த் ஏக்நாத் ரங் மந்திரில் 'பூர்வரங்' என்றழைக்கப்படும் விழாவிற்கு ஏற்பாடு செய்துள்ளனர்

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Maharashtra |

ஏழு ஆண்டுகளுக்குப் பிறகு,  கலகலப்பாக திரும்பி வருகிறது எல்லோரா-அஜந்தா சர்வதேச திருவிழா. 7 ஆண்டுகளுக்கு பின்னர் வருவதால் நிகழ்ச்சியை ஆடம்பரமாகவும், கோலாகலமாகவும்  நடத்த மாவட்ட அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.

பிப்ரவரி 25 முதல் 27 வரை இந்த சர்வதேச திருவிழா டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கர் மராத்வாடா பல்கலைக்கழகத்தில் உள்ள சோனேரி மஹாலில் நடைபெற உள்ளது. இதற்கு முன்னதாக எல்லோரா-அஜந்தா சர்வதேச திருவிழா 2016 ஆம் ஆண்டு நடைபெற்றது. அதன் பிறகு பல காரணங்களால் தடை பட்ட  திருவிழாவை மீண்டும் எடுத்து நடத்த மாவட்ட நிர்வாகம் முடிவு செய்துள்ளது.

திருவிழாவிற்கு முன்பு...

முக்கிய கலாசார திருவிழாவிற்கு முன்னதாக, அதற்கு மக்களை ஊக்குவிக்கும் வகையில் பிப்ரவரி 12 ஆம் தேதி அவுரங்காபாத்தில் உள்ள ஒஸ்மான்புரா  சந்த் ஏக்நாத் ரங் மந்திரில் 'பூர்வரங்' என்றழைக்கப்படும் விழாவிற்கு ஏற்பாடு செய்துள்ளனர். இந்த  நிகழ்வில் பிரபலமான கலைஞர்களின் மராத்தி, இந்தி மற்றும் சூஃபி இசை நிகழ்ச்சிகள் நடைபெறும்.

சோனேரி மஹாலில் நடைபெறும் முக்கிய மூன்று நாள் எல்லோரா-அஜந்தா சர்வதேச விழாவில்,  உஸ்தாத் ரஷித் கான், உஸ்தாத் ஷுஜாத் கான், மகேஷ் காலே, ரவி சாரி, சிவமணி, விஜய் காடே, சங்கீதா மசூம்தார் மற்றும் சங்கர் மகாதேவன் போன்ற உள்ளூர், தேசிய மற்றும் சர்வதேச கலைஞர்கள் தங்கள் அற்புதமான திறமைகளை வெளிப்படுத்த இருக்கிறார்கள்.

மகாராஷ்டிரா பகுதியில் இருக்கும் முக்கிய இடங்களில் எல்லோரா , அஜந்தா குகைகள் அடங்கும். 30 குடைவரை கோயில்கள் கொண்ட இந்த இடம் பௌத்தம், சமணம், இந்து ஆகிய அநேக சமயத்தினரால் பயன்படுத்தப்பட்டது. சயாத்ரி மலை சாரலில் அமைந்துள்ள இந்த குகைகள் ஓவியம் , சிற்பம், கட்டிட கலை என எல்லாவற்றிற்கும் பிரபலமானது.

இதையும் படிங்க : பெண்கள் இந்த 5 நாட்கள் ஆடை அணியக் கூடாது.. வினோத கட்டுப்பாடு கொண்ட இந்திய கிராமம் பற்றி தெரியுமா.?

கி.பி 2 முதல் 6 வரையான பல காலத்திய மக்கள் இந்த குகைகளை பயன்படுத்தியுள்ளனர். 1819 இல் புலியை வேட்டையாட சென்ற ஒரு ஆங்கிலேயர் இந்த குகைகளை கண்டுபிடித்தார். அதன் பின்னர் புதர்களில் இருந்து வெளி வந்த அஜந்தா எல்லோரா குகைகளை 1981 இல்  யுனெஸ்கோ நிறுவனம்  பாரம்பரியத் தலமாக அறிவித்தது.

அஜந்தா, எல்லோராவை உலக மக்களிடம் பிரபலப்படுத்த  1985 இல் அவுரங்கபாத்தில் முதன் முதலாக தொடங்கப்பட்ட இத்திருவிழாவில் எல்லாரோவின் கட்டிட அழகோடு பல்வேறு இசையை ரசிக்கலாம்.  நீங்கள் பாரம்பரிய நாட்டுப்புற இசையில் ஆர்வமாக இருந்தால், இந்த விழாவில் நிச்சயம் கலந்து கொள்ள வேண்டும்.

First published:

Tags: Maharashtra, Travel