நீச்சல் தெரியாது ஆனால் பெரிய நீர்நிலையில் குளிக்க வேண்டும் என்று ஆசை என்று சொன்னதும் எல்லோர் நினைவிற்கு வரும் ஒரு பெயர் சவக்கடல், சாக்கடல், என்றெல்லாம் அழைக்கப்படும் dead sea. ஆனால் இந்த சாக்கடல் இல்லாமல் உலகில் உள்ள மற்றொரு நீந்த தேவை இல்லாத பெரிய நீர்நிலை இருப்பது நம்மில் பலருக்கு தெரியாது. அதை இப்போது தெரிந்து கொள்வோம்.
சாக்கடலில் மூழ்காமல் மிதக்க காரணம்…
இஸ்ரேல், ஜோர்டான் எல்லை பகுதியில் அமைந்துள்ள சாக்கடலில், ஜோர்டான் நதி மற்றும் அதை சுற்றியுள்ள சிறு ஓடைகள் தண்ணீரை நிரப்புகிறது. எனினும், சுற்றி நிலம் இருப்பதால் தண்ணீர் கடலில் கலக்க வழியில்லை.
ஆவியாதல் மூலம் தண்ணீர் ஆவியாகிவிடுவதால் அதில் உள்ள உப்பு சவக்கடலிலேயே தங்கி விடுகிறது. அதனால் தண்ணீரில் உப்பின் தண்மை அதிகரித்துவிடுகிறது. அதனால் இந்தக் தண்ணீர் அடர்த்தி அதிகமாகி மனிதர்களை ஜாலியாக மிதக்கவைக்கிறது.
சிவா (siwa ) பாலைவன சோலை: இதே போன்ற ஒரு அமைப்பு தான் எகிப்து நாட்டின் மேற்கு சஹாரா பாலைவன பகுதியில் ஒரு ஏரியில் அமைந்துள்ளது. பிரமிடுகள், அரசர்களின் பள்ளத்தாக்கு மற்றும் லக்சர் மற்றும் அஸ்வானின் அற்புதமான கோயில்களை ஒருவர் பார்வையிட முடியும் என்பதால், எகிப்து உலகப் பயணிகளுக்கு ஏற்ற இடமாகும். அதோடு இப்போது இந்த சிவா(siwa ) சோலையும் சிறந்த சுற்றுலாத் தலமாக மாறிவிட்டது.
பாலைவனத்திற்கு அருகில் நீர் நிரம்பி பசுமையாக இருக்கும் இடத்தை தான் பாலைவன சோலை என்று சொல்வோம். பெரும்பாலும் இந்த சோலைகள் பனைமரம், கள்ளி போன்ற செடிகளால் சூழ்ந்திருக்கும். நன்னீர் ஊற்றுகள் மூலம் இந்த சோலைகளுக்கு நீர் கிடைக்கிறது. ஆனால் பாலைவனத்தின் தாதுக்கள் கலந்து உப்புத்தன்மை சேர்ந்துவிடும்.
சிவா ஒயாசிஸ்(siwa oasis) என்று அழைக்கப்படும் இந்த ஏரி பனை மரங்கள் மற்றும் பாலைவனத்தால் சூழப்பட்ட இயற்கை நீரூற்றுகளின் புகலிடமாகும். கெய்ரோவிலிருந்து(cairo ) 562 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள சிவா, அதன் உப்பு ஏரிகளுக்கு பிரபலமானது. இந்த சிவா சோலையில் 220 க்கும் மேற்பட்ட நீரூற்றுகள் உள்ளன. அதில் மிகவும் பிரபலமானது கிளியோபாட்ராவின் குளம்(Cleopatra Spring). இது அமுன்(amun) கோவிலுக்கு அருகில் உள்ளது மற்றும் இதை சுற்றி கஃபேக்கள் மற்றும் குடிசைகள் நிறைந்துள்ளது.
இந்த சோலையில் உள்ளே உப்பு மற்றும் நன்னீர் ஊற்றுகளுடன் சூடான மற்றும் குளிர்ந்த உப்புக் குளங்கள் என்று பலவிதமான குளங்கள் உள்ளன. சிவா சோலையில் உள்ள உப்புக் குளத்தில் ஒருவர் தவறி விழுந்து, குளத்தைச் சுற்றியுள்ள பாறையில் இருந்து கையை எடுத்தவுடன் மிதக்கத் தொடங்கிவிடுவார். இந்த சோலையில் உள்ள நீரானது சுமார் 95% உப்பு செறிவு கொண்டது.
இதையும் படிங்க: இந்த நாட்டுக்கு சுற்றுலா போனா.. அவங்க நமக்கு ஊக்கத்தொகையா பணம் தருவங்களாம்..!
அதனால் இதில் இறங்கும் யாரும் மூழ்கிவிட மாட்டார்கள். இந்த நதியின் மீது ஹாயாக மிதந்துகொண்டே நேரத்தை கழிக்கலாம். சிவா ஒயாசிஸுக்குச் செல்ல சிறந்த நேரம் அக்டோபர் மற்றும் மார்ச் மாதங்களுக்கு இடைப்பட்ட நேரமாகும். காரணம் இந்த காலத்தில் பாலைவனத்தை ஒட்டிய இந்த சோலையின் வெப்பநிலை மிதமாக இருக்கும்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Egypt